வணக்கம் நேயர்களே இன்றைய உலக உத்தமரின் உயரிய சிந்தனைகள் பகுதியிலே காந்தியோட வாழ்க்கையில நடந்த முக்கியமான நிகழ்ச்சிகள் எல்லாத்தையும் ஒவ்வொன்னா பார்க்கிறோம் அந்த நிகழ்ச்சிகள் மூலமா நம்மோட வாழ்க்கைக்கு அது எந்த அளவுக்கு பயன்படும் அப்படின்றதையும் நாம பார்க்கிறோம் அந்த சுதந்திர போராட்ட காலகட்டத்துல மக்களோட மனதில் எல்லாம் எந்த அளவுக்கு ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி ஒரு சுதந்திர தாகத்தை காந்தியடிகள் ஏற்படுத்தினார் அது சாதாரண ஏழை எளிய ஜனங்கள்ல இருந்து பணக்கார மேல்த்த மக்கள் வரைக்கும் அந்த பாதிப்புகளை பூரா எப்படி எடுத்துட்டு போனார் எல்லா பிரிவு மக்களையும் ஒன்றிணைச்சு எப்படி ஒரு போராட்டத்தை ஒரு ஆங்கில அரசாங்கத்துக்கான அந்த இந்திய சுதந்திர போராட்டத்தை ஒருமைப்படுத்திக் கொண்டு போனார் அப்படின்னு பார்க்கிறோம் இந்த மாதிரி பலபேர்ல பல பேர் கிட்ட அந்த தாக்கத்தை ஏற்படுத்தினார் காந்தியர்களோட இயக்கத்துல சேர்றது அப்படின்றது ரொம்ப கஷ்டமான ஒரு வேலைதான் ஏன்னா இந்த
இயக்கத்துல சேருங்க இந்த போராட்டத்துல நீங்க கலந்துக்குங்க இந்த போராட்டம் வெற்றி அடைஞ்ச உடனே உங்களுக்கு இந்த பதவி கொடுப்போம் அந்த பதவி கொடுப்போம் அப்படின்னு சொல்லி யாரும் சொல்ல முடியாது ஏன் அப்படின்னு சொன்னா நிச்சயமா ஒரு பதவி கிடைக்கும் என்ன அப்படின்னு சொன்னா இவர் சிறை சென்றவர் அப்படின்ற பட்டம் கிடைக்கும் அதனால காந்தியடிகளோட போராட்டத்துல நீங்க கலந்துக்கிறீங்க அப்படின்னு சொன்னா இந்திய சுதந்திர போராட்டத்துல நீங்க பங்கெடுத்துக்கிறீங்க அப்படின்னு தெரிஞ்சு இருந்தாலே அது என்ன ஆகும் அப்படின்னு சொன்னா நிச்சயமா சிறைக்கு செல்ல தயாரா இருக்கணும் அப்படின்னு சொல்லி அர்த்தம் அதனால சிறைக்கு போகணும் கஷ்டப்படணும் அது மட்டும் இல்ல உங்களோட சொத்து பத்து எல்லாமே கூட போனாலும் போகலாம் அதனால உங்களோட பணக்கார வாழ்க்கையிலிருந்து நீங்க விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கும் இப்படி பல கஷ்டங்களை அனுபவிக்கிறதுக்கு தயாரா இருக்கக்கூடிய மக்களை தான் காந்தி உருவாக்கினார் இந்த
மாதிரி பல பேரை உருவாக்கினார் பலபேரு அவரோட தாக்கத்துல இருந்து அந்த இயக்கத்தோட வந்து ஐக்கியம் ஆயிட்டாங்க இப்ப ஜேபி கிரிப்லானி எடுத்துக்கிட்டீங்கன்னா அவருக்கு ஒரு மிகப்பெரிய ஒரு பேராசிரியர் பாபு ராஜேந்திர பிரசாத் மிகப்பெரிய ஒரு வக்கீல் அந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மிகச்சிறந்த வழக்கறிஞர் அது மாதிரி வழக்கறிஞரா இருக்கலாம் அல்லது டாக்டரா இருக்கலாம் அல்லது பேராசிரியர்களாக இருக்கலாம் அது மாதிரி படித்த இளைஞர்கள் பலரை வந்து இந்த இயக்கத்துல இந்த சுதந்திர போராட்டத்துல ஈடுபடுத்தின பெருமை காந்தியடிகளுக்கு உண்டு அதுல தமிழகத்துல சென்னையை சேர்ந்த முக்கியமான நபர்கள்ல காசாரம் அப்படின்றவர் ஒருத்தர் அவரை பத்தி எல்லாருக்கும் தெரியும் தமிழகத்தில் இருக்கிற உங்களுக்கு எல்லாத்துக்குமே தெரியும் பின்னால சுதந்திரத்துக்கு பின்னாடி மத்திய அமைச்சராகவும் இருந்த ஒரு பெரியவர் காசந்தாராம் அவர் அப்ப மாணவரா இருக்கிறார் 1920 அவர் சொல்றார் முதல் முதல்ல நான் காந்தியை சந்திச்சது அப்படின்றது 1920ல
1920ல எத்தனையாமை இயக்கம் ரொம்ப வேகமா பரவிக்கிட்டு இருக்கிற நேரம் கிலாபத் இயக்கம் அதோட தொடர்ந்து நடந்துகிட்டு இருக்கிற நேரம் அதனால இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக அந்த கிலாபத் இயக்கம் அரசாங்கத்துக்கு எதிரான மிகப்பெரிய ஒரு பொருளாதார போராட்டம் இந்த அணியத்தின் பகிஷ்கரிப்பு அப்படின்னு ஒத்துழையாமை இயக்கம் ரொம்ப வேகமா பரவிக்கிட்டு இருக்கு அதனால பள்ளிக்கூடங்கள்ல போனவங்க எல்லாம் பள்ளிக்கூடத்தை நிறுத்திருங்க அப்படின்னு சொல்றாங்க அரசு பணியில இருக்கிறவங்க எல்லாம் ராஜினாமா பண்ணுங்க அந்த அரசாங்கம் கொடுத்த பட்டங்கள் பதவிகள் எல்லாத்தையும் திறந்துட்டு இந்த தேசிய இயக்கத்தோட வாங்க அப்படின்னு சொல்லி ஒரு அழைப்பை விடுத்து ஒரு ஒத்துழையாமை இயக்கம் ரொம்ப வேகமா வளர்ந்துகிட்டு வந்த நேரம் அந்த நேரத்துல சந்தானம் அவங்க தன்னோட படிப்பெல்லாம் முடிச்சுட்டு ஒரு இளைஞரா அந்த இடத்துல இருக்கிறார் அப்ப காந்தியர்களோட பேச்சை கேக்குறதுக்காக சென்னை கடற்கரை அந்த இடத்துக்கு வராரு திலகர் கட்டம்னு சொல்லக்கூடிய
அந்த இடத்துல அன்னைக்கு பெரிய கூட்டம் சாஸ்திரியார் பேசுறாரு காந்தி பேசுறார் காந்தியோட பேச்ச எல்லாம் கேட்டு அற்புதமான ஒரு பேச்சு அவர் மனசுல ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இனிமே தன்னோட வாழ்க்கையை இந்த தேசிய இயக்கத்துல ஈடுபடுத்தி தான் செலவழிக்கணும் அப்படின்ற முடிவுக்கு அன்னைக்கு சந்தான மந்திரர் அதனால காந்திய இயக்கத்துல சேரணும் அப்படின்றதுல அவருக்கு ரொம்ப ஆழமான நம்பிக்கை வந்துருச்சு காந்தி மேல அசைக்க முடியாத நம்பிக்கை வந்துருச்சு ஆனா அவருக்கு ஒரே ஒரு சந்தேகம் என்ன அப்படின்னு சொன்னா இந்த போராட்டம் எல்லாம் வெற்றி பெறுமா அப்படின்ற ஒரு சந்தேகம் அவர் மனசுக்குள்ள இருந்துகிட்டே இருந்திருக்கு அதுக்கு அடுத்த நாளே கூட்டம் ராஜேல இருக்கக்கூடிய அந்த கிலாபத் அலுவலகத்துல நடக்கிறதா சொல்றாங்க ராஜாஜி எல்லாரையும் சந்திக்கிறாரு அப்ப சொல்றாரு ஏன் நீ அவங்க வராமே அங்கேயே அப்படின்னு சொல்றாரு அதனால கிலாபத் அலுவலகத்துக்கு போறாரு பிராட்வேல்
அடுத்த நாள் கூட்டம் கிலாபத் இயக்கத்துல இந்த உத்ராமை இயக்கத்தை பத்தி காந்திரிகள் ரொம்ப விருதுவா பேசுறார் எல்லாத்தையும் கேட்டுக்கிட்டே இருக்கிறார் அடுத்து கேள்வி நேரம் வந்துருது கேள்விகள் எல்லாம் கேட்கலாம் அப்படின்னு சொன்ன உடனே காந்தி பேசுனதுக்கு பின்னாடி யாரு கேள்வி கேட்க துணிச்சல் இருக்கும் எல்லாரும் அமைதியா இருக்குறாங்க அந்த நேரம் பார்த்து நம்ம சந்தானம் எந்திரிச்சு நிக்கிறாரு எந்திரிச்சு நின்னு கேக்குறாரு இது மாதிரி ஒரு மிகப்பெரிய ஒரு போராட்டத்தை அறிவிச்சிருக்கீங்களே இதுல பெரிய அளவுல மாணவர்களும் பொதுமக்களும் வந்து கலந்துக்குவாங்களா கலந்துக்குவாங்கன்னு நீங்க நம்பிக்கை வச்சிருக்கீங்களா அப்படின்னு ஒரு கேள்வி கேக்குறாரு ஏன்னா அடிப்படையில அந்த ஒரு சந்தேகம் இருந்துகிட்டே இருக்கு அதனால அந்த சந்தேகத்தை காந்தியர்கள் கிட்டயே கேட்டுறது அப்படின்ற முடிவுக்கு வந்துட்டார் தைரியமா அந்த கூட்டத்துல எந்திரிச்சு இளைஞர் சந்தானம் அந்த கேள்வியை கேட்கிறார் எல்லாரும் பார்க்கிறாங்க என்ன இப்படி ஒரு அநாகரிகமான
ஒரு கேள்வியை பேச்சாளர் முன்னாடி கேட்கிறாரே அதுவும் மகாத்மா காந்தி முன்னாடி போய் இதை போய் கேட்கிறாரே அப்படின்னு கூட மத்தவங்க எல்லாரும் பார்த்திருக்கலாம் யோசிச்சிருக்கலாம் ஏன்னா அங்க சாஸ்திரியா இருக்காரு யாகூத் தாசன் இருக்காரு ராஜாஜி இருக்காரு நடேசன் இருக்காரு இது மாதிரி பெரிய பெரிய ஆட்கள் அன்னைக்கு அந்த கூட்டத்துல இருக்கிறாங்க அந்த நேரத்துல இப்படி ஒரு கேள்வியை அவர் கேட்கிறாரே அப்படின்னு சொல்லிட்டு அவங்களுக்கு கோபம் கூட வந்திருக்குதாம் ஆனா காந்தியடிகளுக்கு எந்தவிதமான கோபமும் வரல இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டானே அப்படின்னு சொல்லி அந்த இளைஞரை பார்த்து கோவப்படல அவரு ஆழமா யோசிச்சு சொல்றாரு ஆமா எனக்கும் தெரியல எத்தனை பேர் வந்து கலந்துக்குவாங்கன்னு எனக்கும் தெரியல அப்படின்னு சொல்றாரு இல்ல இல்ல எவ்வளவு நாள் பேர் வந்து கலந்துக்குறாங்க நீங்களும் வந்து கலந்துக்கோங்கன்னு சொல்லல எனக்கும் தெரியாது எவ்வளவு மாணவர்கள் இவங்களை பங்கெடுத்துக்கிருவாங்கன்னு தெரியல
எவ்வளவு இளைஞர்கள் வந்து கலந்துக்குவாங்க அப்படின்னு எனக்கு தெரியாது ஆனா ஒன்னு மட்டும் நிச்சயமா எனக்கு தெரியுது ஏராளமான பேர் இந்த போராட்டத்தில் கலந்துகிட்டாங்க அப்படின்னு சொன்னாதான் இந்த போராட்டம் வெற்றி அடையும் அதனால ஏராளமான பேரை சேர்றதுக்கு நம்ம எல்லாரும் எப்படி பணி செய்றது அப்படின்றத திட்டம் போடணுமே ஒழிய எல்லாரும் ஏராளமான பேர் வருவாங்களா அப்படின்னு நம்ம யோசிச்சுட்டு இருந்தோம்னா நமக்கு வேலை நடக்கும் இருக்காது அப்படின்னு சொல்றாரு அதுக்கு பின்னாடி ராஜாஜி சொல்றாரு இவ்வளவு துடிப்பான இளைஞரா இருக்கியே நீ ஏன் காந்தியடிகளோட சுற்றுப்பயணத்துல நீ போகக்கூடாது நீயும் கூட வா அப்படின்னு சொல்றாரு கூடயே போறாரு காந்தியடிகள் கூடயே போனாரு கடைசில அவர் கூடயே போயிட்டாரு அதனால காந்தியடிகளோட இயக்கத்திலேயே தன்னோட தன்னை ஐக்கியப்படுத்திக்கிட்டு அந்த எளிமையான வாழ்க்கைக்கு தன்னையும் தயார்படுத்திக்கிட்டு ஒரு மிகச்சிறந்த தமிழக தலைவரா கா சந்தானம் பிற்காலத்துல உருவாகிட்டார் இது மாதிரி
பல இளைஞர்களை உருவாக்கின பங்கு காந்தி அவர்களுக்கு கொண்டு மீண்டும் உலக உத்தமரின் உயரிய சிந்தனைகளில் சந்திக்கலாம் நன்றி