[கரகோஷம்] வணக்கம் நேயர்களே இன்றைய உலகத்தரின் சிந்தனைகள் பகுதியில வாழ்க்கையில நடந்த முக்கியமான நிகழ்ச்சிகள் எல்லாத்தையும் பார்க்கிறோம் தென்னாப்பிரிக்காவில் இருக்கக்கூடிய இந்தியர்களோட சுயமரியாதைக்காக ஏறத்தாழ 21 ஆண்டுகள் அந்த போராட்டம் நடத்தி ஒரு பெரிய வெற்றி நாயகனா 1915ல இந்தியாவுக்கு வரார் அவரோட அரசியல் குரு என்று சொல்லக்கூடிய கோக்கலே அவரோட ஆலோசனைப்படி இந்தியா பூராத்தையும் ஒரு வருடம் சுத்தி மக்களோட மனநிலை மக்களோட சமூக நிலை அவங்களோட பொருளாதார நிலை எல்லாத்தையும் நேரடியாக பார்க்கிறார் அதுக்கு பின்னாடிதான் அவரோட அரசியல் களத்துக்கு அவர் இறங்குறார் தென்னாப்பிரிக்காவில் பெரிய தலைவராக இருந்தவர் ஆனால் இங்க இந்தியாவுக்கு வரும்போது இந்தியாவில் பல தலைவர்கள் அவருக்கு முன்னாடி பெரிய பெரிய தலைவர்கள் இருக்காங்க கோபாலகிருஷ்ண கோகுலே பாலகங்காதரர் திலகர் இந்த மாதிரி ஏராளமான தலைவர்கள் இங்க இருக்கிறாங்க அதனால இவரோட பணிகள் என்ன அதை எப்படி நிலைப்படுத்துறது அப்படின்றதெல்லாம் முடிவு செய்றதுக்கு முன்னாடி ஒரு
வருஷம் எல்லாம் இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு இடமா போய் சுத்தி பார்க்கிறார் அப்ப அவரோட காங்கிரஸ் இயக்கத்திலேயே தன்னை ஐக்கியப்படுத்திக்கிறார் அவரோட கல்கத்தா காங்கிரஸ்ல ஒருத்தர் வந்து சந்திக்கிறார் ஒரு விவசாயி ராஜ்குமார் சுக்லா அவரு நீங்க சம்பாரான் அப்படின்ற ஒரு மாவட்டம் இருக்கு பீகார்ல அங்க நீங்க கண்டிப்பா வரணும் அப்படின்னு சொல்றாரு அங்க இருக்கக்கூடிய விவசாயிகள் ரொம்ப கஷ்டப்படுறாங்க அதனால நீங்க வாங்க அப்படின்னு சொல்றாங்க அதனால ராஜ்குமாரோட அந்த ராஜ்குமார் சுக்லா சொன்னதுக்கு பேர்ல அவரு அந்த சம்பாரானுக்கு வராரு காந்தியடிகளை முதல் முதல்ல இந்திய களத்துல இறக்கின பெருமை அந்த ராஜ்குமார் சுக்லாவுக்கு தான் உண்டு ஒரு விவசாய போராட்டத்திற்கு அவரை இழுத்துக்கொண்டு வந்து நிறுத்தின பெருமையும் அந்த ராஜ்குமார் சுக்லாவுக்கு தான் உண்டு அவரு வந்து அந்த காந்தியர்கள் ஏற்கனவே அவர் கூட பழகின தலைவர்கள் அங்க எத்தனை பேர் இருக்காங்க பேராசிரியர் கிருபாணி
அங்க இருக்கிறாரு அவர் அங்க முசாபர்ப்பூர்ல ஒரு கல்லூரியில பேராசிரியரா இருக்கிறார் சரித்திர பேராசிரியரா அதுக்கப்புறம் பெரிய வக்கீல் அங்க ராஜேந்திர பிரசாத் இருக்காரு இந்த மாதிரி பல தலைவர்கள் அங்க இருக்கிறாங்க அவங்களோட எல்லாம் சேர்ந்து பணி செய்யலாம்னு சொல்லிட்டு அங்க வராங்க ஏன்னா அங்க விவசாயிகளோட நிலை என்னன்றது காந்திக்கு எதுவுமே தெரியாது அந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில காந்தியர்கள் வந்து சேர்றார் அங்க அவரு அந்த தலைவர்கள் வீட்ல தங்கி இருக்கிறார் இங்க விவசாயிகள் நிறைய பேர் வந்து பார்த்துட்டு இருக்காங்க அதனால அந்த ஒரு வீட்ல இருந்து எல்லாத்தையும் பார்க்கிறதை விட ஒரு பொதுவான இடமா இருந்தா நல்லா இருக்குங்க அப்படின்ற ஒரு முடிவுக்கு வராரு காந்தி ஏன்னா தனிப்பட்டவரோட வீட்ல இருக்கும்போது அவங்க பல பேர் கூட்டமா வரும்போது அவங்களுக்கு சில கஷ்டங்கள் எல்லாம் வரும் அப்படின்றதுனால ஒரு பொது இடமா இருந்தா நல்லா
இருக்கும் அப்படின்னு சொல்லி ஒரு இடத்தை பார்க்கிறாங்க அந்த இடத்தை எல்லாம் எல்லாரும் போய் பாக்குறாங்க பார்த்த உடனே அது நல்லா இருக்கு கொஞ்சம் சுத்தம் பண்ண வேண்டிய வேலைகள் எல்லாம் நிறைய இருக்கு அதனால சுத்தம் பண்ணி ஒரு நாள் குறிச்சிடுறாங்க இந்த நாள்ல நம்ம அங்க போயிருவோம் அப்படின்னு சொல்லிட்டு எல்லாரும் வந்துறாங்க மத்த வேலைகளை எல்லாரும் நினைச்சுட்டு இருக்காங்க அந்த குறிப்பிட்ட நாள் வந்துருச்சு காலையில 10:00 மணிக்கு போகலாம் அப்படின்னு சொல்லி இருந்திருப்பாங்க போல காந்திகிட்ட முன்னாடியே காந்தி அந்த சமயத்துல 1917ல அவரோட பொருட்கள் அப்படின்றது அவரோட படுக்கையும் அவரோட பையனும் தான் அதனால இந்த 10:00 மணிக்கு புறப்படலாம் அப்படின்னு சொன்னவுடனே அவர் என்ன செஞ்சாரு அந்த பெட்டியையும் படுக்கையும் எடுத்துட்டு கிளம்புறதுக்கு தயாராயிடுறார் ஆனா நடந்தது என்னன்னா அந்த இடம் வந்து இன்னும் சுத்தமாவே ஆகல இது இந்த தலைவர்களுக்கு எல்லாத்துக்குமே
தெரியும் வந்து சொல்றாங்க எல்லாரும் சொல்றாங்க இது மாதிரி சுத்தம் பண்றதுக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் வேணும் அப்படின்னு சொல்றாங்க இவங்க சொல்றாங்க சரி ஒரு நாள் ரெண்டு நாள் போனாலும் பரவாயில்லை நீங்க பண்ணுங்க அப்படின்னு சொல்றாங்க காந்தியடிகள் கிட்ட இதை சொல்லணும்னு அவங்க நினைக்கல ஏன்னா வேலையும் செஞ்சுட்டு இருக்காங்க இங்க இருந்தாலும் வேலை நடக்க போகுது அந்த வீட்டுக்கு போனாலும் வேலை நடக்க போகுது அதனால இதை எதுக்கு போய் காந்திகிட்ட சொல்லணும் அப்படின்னு சொல்லிட்டு இந்த தலைவர்கள் சொல்லாம விட்டுறாங்க ஆனா அவருக்கு மெமரில போட்டு வச்சாச்சு எத்தனாம் தேதி 10:00 மணிக்கு நம்ம அந்த வீட்டுக்கு புது வீட்டுக்கு போறோம் அப்படின்னு சொன்ன உடனே அவர் பெட்டி பருக்கையோட அவர் தயாரா இருந்து வந்துட்டாரு உடனே ஓடிப்போய் இல்ல அது இன்னும் ரெடி ஆகல அப்படின்றாங்க என்ன விஷயம் அப்படின்னு சொல்றாரு அப்ப
சொல்றாரு இந்த மாதிரி அது இன்னும் அந்த இடமெல்லாம் சுத்தம் பண்ணல கூட்டிக்கிட்டு அதெல்லாம் சுத்தம் பண்ணி அதை ரெடி பண்ண வேண்டி இருக்கு அப்படின்னாரு அவ்வளவுதானா வேற ஒன்னும் இல்லையே அப்படின்றாரு இல்ல அப்ப வாங்க பாப்போம் அப்படின்றாரு இன்னும் எதுவுமே சுத்தம் பண்ணலையே இன்னும் கூட்டி கூட முடிக்கலையே அப்படின்றாங்க அதனால பரவாயில்லைன்னு எல்லாத்தையும் கூட்டிட்டு அங்க போயிடுறாரு கூட யாரு டாக்டர் ராஜேந்திர பிரசாத் பெரிய வக்கீல் அன்னைக்கு பின்னால நம்மளோட இந்திய குடியரசுக்கு தலைவரா இருந்தார் ஜனாதிபதியா இருந்தவர் அந்த வக்கீல் ராஜேந்திர பிரசாத் பேராசிரியர் கிருபாணி எல்லாத்தையும் கூட்டிட்டு அங்க போய் போயிடுறாரு அந்த இடத்துக்கு போயிடுறாரு அதை போய் பார்க்கிறார் எடுத்து அவர் பார்த்து கூட்ட ஆரம்பிச்சுறாரு ராஜேந்திர பிரசாத் அவரோட நினைவு குறிப்புல எழுதுறாரு நான் எத்தனையோ தலைவர்களை பார்த்திருக்கேன் ஆனா தன்னோட இடத்தை தானே விளக்கமா எடுத்து கூட்டுன தலைவரை
இன்னைக்கு தான் முதல் தலைவரா நான் பார்க்கிறேன் எங்களுக்கு அது பழக்கமே இல்லை அப்படின்றாரு அவர் சொல்றாரு நான் எத்தனை பேரை பார்த்தீங்க நானும் என்னோட வாழ்க்கையில நான் எப்படி இருந்தேன் அப்படின்னா என்னோட இடத்தை நான் கூப்பிட்டு கிடையாது ஒரு வேலை இருக்கான் அவன் வந்து கூட்டுவானே ஒழிய நான் போய் கூட்டுறதே கிடையாது ஆனா இவர் மிகப்பெரிய தலைவரா இருந்தவர் தென்னாப்பிரிக்காவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தின ஒரு பெரிய தலைவர் அவர் என்ன செய்றாரு வேகமா வந்து கூட்டுறது தானே எதுக்கு ரொம்ப கஷ்டப்படுறீங்க அப்படின்னு சொல்லிட்டு எங்களுக்கு முன்னாடி அவர் எடுத்து கூட்ட ஆரம்பிச்சுட்டாரு வேற வழியே இல்ல நாங்களும் அவரோட சேர்ந்து பணி இல்ல நாங்க வேலை செய்ய வேண்டியதாயிருச்சு அப்படின்னு சொல்றாரு எவ்வளவு எளிமையா தன்னோட தலைவர்களை பூரா தன் வரைக்கும் கொண்டு வந்தார் எல்லாரும் அங்க வந்து எல்லாரும் சேர்ந்து இருக்காங்க விவசாயிகள்
எல்லாரும் வராங்க அங்க வந்து எல்லாம் கொடுக்குறாங்க உண்மை தன்மை எல்லாத்தையும் ஆராய்ந்து பார்த்து ஒரு பெரிய வேலைகளை அங்க செஞ்சுட்டு இருக்காங்க அங்க வந்து இன்னொரு பெரிய பெரிய பயிற்சி அது என்ன அப்படின்னா காந்தி வெளியெல்லாம் சுத்தி பார்த்துட்டு ஒரு நாள் வராரு வந்தா எல்லாம் தனித்தனியா வரிசையா நிக்கிறாங்க எதுக்கு நிக்கிறீங்க அப்படின்னு கேக்குறாங்க இல்ல சாப்பாட்டுக்கு அப்படின்னா சாப்பாடு நடக்குதே அப்படின்னாரு இல்ல அது தலைவர்களுக்கு சாப்பாடு இது அங்க வர்ற விவசாயிகளுக்கெல்லாம் சாப்பாடு ஓ அப்படியா சரி சரி அப்படின்னு நேரா போறாரு அந்த தலைவர்களை இங்க வாங்க விவசாயிகளோட வரிசையில நில்லுங்கன்னு சொல்லி ஒரு வருஷம் போதும் அந்த வருஷம் நம்ம எல்லாருமே சாப்பாடு வாங்கி சாப்பிட்டுக்கிறோம் எதுக்கு அனாவசியமா ரெண்டு வருஷம் ஒரு ஏற்றத்தாழ்வை வந்து நான் அவங்க வகுப்பறையில் உட்கார்ந்து போதிக்கிறதை விட வாழ்ந்து காட்டுனாங்களே அதான் மிகப்பெரிய சிறப்பு
பெரிய பெரிய தலைவர்கள் அவங்க வரிசை சாப்பிடணும்ன்ற அவசியம் இல்லை ஆனா அந்த விவசாயிகளுக்காக நீ வேலை செய்ய போறீங்க அந்த விவசாயிகளோட வரிசையில கூட நிற்க முடியல அப்படின்னு சொன்னா அவங்களோட துன்பத்திலேயும் துக்கத்துலயும் உன்னால எப்படி பங்கெடுத்துக்க முடியும் அந்த உணர்வுகள் உன்னோட உள்ளத்துல போய் ஆழமா படியாத வரைக்கும் உன்னால அந்த விவசாயிகளோட வேலையை செய்ய முடியாது அப்படின்றத வாயில சொல்லல ஆனா செஞ்சு காமிச்சேன் அதனால இன்னைக்கு மிகப்பெரிய தலைவர்கள் அந்த செம்பாரான் சத்யாகிரக தன்னோட வாழ்க்கையை அர்ப்பணிச்சுக்கிட்டு அந்த விவசாயிகள் போராட்டம் மிகப்பெரிய வெற்றிகரமான ஒரு போராட்டமா 1917ல நடந்தது இந்த மாதிரி சொல்லி புரிய வச்சதை விட தன்னோடயே இணைச்சு அவங்களோட பணி மூலமாகவே அவங்களுக்கு பல செய்திகளை கற்றுக்கொடுத்து மிகப்பெரிய தலைவர்களை உருவாக்கினது தான் காந்தியடிகளோட வாழ்க்கை மீண்டும் உலகம் தமிழரின் உயரிய சிந்தனைகளில் சந்திக்கலாம் நன்றி ஓம் [இசை]