[கரகோஷம்] வணக்கம் நேயர்களே இன்றைய சிந்தனைகள் பகுதியில காந்தியர்களோட வாழ்க்கையில நடந்த முக்கியமான நிகழ்ச்சிகள் எல்லாத்தையும் பார்க்கிறோம் அது கூட பழையன தலைவர்கள் அந்த தலைவர்களோட வாழ்க்கையில நடந்த முக்கியமான சம்பவங்கள் அவங்களோட அந்த தியாக மனப்பான்மை மக்களுக்காக அவங்க செஞ்ச தியாகம் பணிகள் அதை பற்றி எல்லாம் நம்ம பார்க்கிறோம் 1940களில் நடந்த நிகழ்ச்சிகள் 1930களில் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாத்தையும் தெரிஞ்சு நம்ம என்ன செய்யப்போறோம் அப்படின்னா அவங்களோட வாழ்க்கை எல்லாமே ஒரு பாடமா அமைஞ்சது இன்றைக்கு இருக்கக்கூடிய சிக்கல்களுக்கெல்லாம் ஒரு தீர்வா அவங்களோட வாழ்க்கை முறைகளே அமைஞ்சது அவங்க செஞ்ச பணிகள் மாத்திரமல்ல அவங்க செஞ்ச பணிகளை விட அவங்களோட வாழ்க்கை முறையே பல சிக்கல்களுக்கு தீர்வா இருக்குது அந்த மாதிரி வாழ்ந்து காட்டிய தலைவர்கள் தான் அந்த காலகட்டத்தில் இருந்தாங்க அதனால அவங்கள பத்தி எல்லாம் நம்ம தெரிஞ்சுக்கிறது என்பது நம்முடைய வாழ்க்கையை செப்பனிட சீர்படுத்த ரொம்ப
ரொம்ப அவசியமானது அத்தியாவசியமானது லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் லோக்நாயக் இந்த உலகத்துக்கே நாயகன் அப்படின்னு பட்டம் அவருக்கு அடைமொழி அப்படிப்பட்டவர் ஜெயபிரகாஷ் நாராயணன் காந்திய இயக்கத்துல காந்திய தொண்டர்கள் மத்தியில அவர் வந்து சோசியலிச இயக்கத்துக்கு தலைவராகி நடத்தினவர் ஜெயபிரகாஷ் நாராயணன் இந்த மக்கள் சக்திதான் உயர்ந்த சக்தி மக்கள் சக்தி மூலமாத்தான் இந்த ஜனநாயகமே நிலைநிறுத்த முடியும் அப்படின்னு சொல்லிட்டு இந்த மக்களை பூரா ஒன்றிணைக்கக்கூடிய மிகப்பெரிய பணியில ஜெயபிரகாஷ் நாராயணன் இருந்தார் சுதந்திர போராட்ட காலகட்டம் அப்ப காந்தியடிகளோட இணைந்து பணியாற்றிட்டு இருக்காரு பாபாவே அவங்க கூட பல நேரங்கள்ல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட நண்பர்களா பழகுனது ஜெயபிரகாஷ் நாராயணன் கிட்ட நம்ம கத்துக்க வேண்டிய பாடம் என்ன அப்படின்னு சொன்னா அவர் கூட கருத்து வேறுபட்ட எத்தனையோ பேர் இருந்திருக்காங்க கருத்து மாறுபாடுகள் இருந்திருக்கலாம் ஆனா அந்த கருத்து மாறுபாடுக்கு எனக்கு அவங்களை என்னோட எதிராளின்னு
நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்னோட கருத்துக்கு மாறுபட்ட கருத்தை அவர் வச்சிருக்கிறார் என்னோட கருத்துக்கு எதிர் கருத்தை அவர் வச்சிருக்காரே ஒழிய அவர் என்னுடைய எதிரி இல்லை அப்படின்னு எல்லாருடையுமே நட்போடு பழகின மிகப்பெரிய தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆன்மீக வழிமுறைகள்ல போகும்போது அது அரசியல் வழிமுறையிலிருந்து மாறிப்போகுமோ அப்படின்ற ஒரு எண்ணம் வரும்போது கருத்து வேறுபாடு அவருக்கு அதிகமாகுது இருந்தாலும் கூட வினோபாவோட ஐக்கியமாகி அவரோட அந்த சம்பல் வேலையில போய் சம்பல் பள்ளத்தாக்குல இருக்க கொள்ளைக்காரர்கள் எல்லாத்தையுமே சரண்டராக வச்ச மிகப்பெரிய பணியை அவர் செய்றார் நாகாலாந்து அங்க இருக்கக்கூடிய தீவிரவாதிகள் அங்க இருக்கக்கூடிய தீவிரவாதிகள் இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய ஒரு ஆயுத போராட்டங்கள் நடந்துகிட்டு இருக்கும்போது காந்தி இயக்கத்தோட பிரதிநிதியா அந்த ஜெயபிரகாஷ் நாராயணன் அவரோட தொண்டர்கள் எல்லாருமே போய் அங்க உட்கார்ந்து அங்க அமைதியை ஏற்படுத்துவதற்கான எல்லா முயற்சிகளையும் செஞ்சாங்க பூமிதான இயக்கம் மிகப்பெரிய
அளவுல வந்தப்ப கூடயே இருந்து அந்த பூமிதான இயக்கம் வெற்றி அடையறதுக்கு என்னென்ன வேலை செய்யணுமோ எல்லா பணிகளையும் அவர் செய்கிறார் அந்த மாதிரியான ஒரு வாழ்க்கை முறையை வாழ்ந்தவர் அவருடைய இளமை காலம் அந்த காந்தியடிகளோட இருந்த அந்த ஆசிரமத்திலேயே வளர்ந்த பிரபாதி பிரபாவதி அம்மையார் அந்த பிரபாவதி அம்மையாரும் அவரும் விரும்புறாங்க ஆனால் பிரபாவதி அம்மையார் என்ன செய்றாங்க அவங்க காந்தியரிகளோட இருக்கும்போதே பிரம்மச்சரி விரதத்தை எடுத்துக்கிறாங்க அதனால நான் கடைசி வரைக்கும் நான் பிரம்மச்சரி பிரம்மச்சரி விரதம் கடைபிடிப்பேன் அப்படின்ற ஒரு முடிவுக்கு அவங்க வந்துறாங்க ஆனா ஜெயபிரகாஷ் நாராயணனோட பழக்கம் ஏற்பட்டதுக்கு பின்னாடி அவங்க ரெண்டு பேரும் திருமணம் செஞ்சுக்கலாம் அப்படின்னு நினைக்கிறாங்க அந்த சமயத்துல அந்த இளமை காலத்துல ஜெயபிரகாஷ் எடுத்த முக்கியமான ஒரு முடிவு எனக்கு வரக்கூடிய மனைவி பிரம்மச்சாரியா விரதத்தை மேற்கொண்டவங்க அதனால நானும் பிரம்மச்சாரியாவே இருந்துறேன் அப்படின்னு சொல்லிட்டு திருமண
வாழ்க்கைக்கு பின்னாடியும் பிரம்மச்சாரிகளாகவே ரெண்டு பேரும் வாழ்ந்த மிகப்பெரிய மகான்கள் பிரபாவதி அம்மையாரும் ஜெயபிரகாஷ் நாராயணன் அதனால்தான் வினோபாபாவை சொல்லுவார் எல்லாரும் அவரை லோக் நாயக்ன்னு சொல்லுவாங்க லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன்னு சொல்லுவாங்க ஆனா நான் அப்படி சொல்ல மாட்டேன் அப்படின்னு சொல்லுவாரு நான் அவரை லோக் நாயக்ன்னு சொல்ல மாட்டேன் எல்லாத்துக்கும் என்ன லோக் நாயக்னு சொல்ல மாட்டாரா இல்ல அவர் லோக் சேவக் அப்படிம்பாரு அவர் லோகத்துக்கே சேவை பண்ண வந்தவர் அவரை லோக நாயகர்ன்னு சொல்லாதீங்க லோக சேவகர்னு சொல்லுங்க அப்படின்னு சொன்னாரு அது மாதிரி சேவை தான் தன்னோட வாழ்க்கைன்னு கடைசி வரைக்கும் இருந்தார் அரசியல் களத்துல இருந்தவர் அரசியல் மூலமாதான் மிகப்பெரிய மாற்றங்களை பூராத்தையும் கொண்டு வர முடியும் அப்படின்னு அசைக்க முடியாத நம்பிக்கை சமூக புரட்சி போலதான் இந்த சமூகத்துக்கு ஒரு நல்லது செய்ய முடியும் அப்படின்னு எடுத்த வினோபாவோட முடிவுக்கு மாறுபட்ட
சித்தாந்தத்தோடு இருந்தவர் அரசியல் மூலமாகத்தான் எல்லாத்தையுமே செய்ய முடியும்னு ஆணித்தரமா நம்புனவர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆனால் எந்த காலகட்டத்திலயும் பதவிக்கு போகமாட்டேன் அப்படின்னு உறுதியா இருந்தார் நம்ம கத்துக்க வேண்டிய முக்கியமான ஒரு பாடம் நம்ம அரசியல்னு நினைச்ச உடனே பதவியை தான் நினைக்கிறோம் ஆனா அரசியல் பணிகள்ல பதவி இல்லாமையே பணி செய்ய முடியும் அப்படின்னு வாழ்ந்து காட்டினவர் தான் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆக ஜெயபிரகாஷ் நாராயணன் அந்த இயக்கங்கள் மக்கள் சக்தியை ஒன்றிணைத்த அவருடைய மிகப்பெரிய இயக்கம் அது பீகார்ல நடந்த மிகப்பெரிய இயக்கமாக இருக்கலாம் அல்லது இந்தியா பூரா அன்றைக்கு ஒன்றிணைத்த அந்த பெரிய மக்கள் இயக்கமாக இருக்கலாம் எல்லாத்துலையுமே தான் தலைவர் அப்படின்றத கருத்துல எடுத்துக்கலாம் அந்த மக்களோடு மக்களா இருந்து அந்த இயக்கத்தை வழிநடத்தி சென்று ஒரு மக்களை காந்திக்கு பின்னாடி வந்த தலைவர்கள்ல ஒருங்கிணைச்ச மிகப்பெரிய தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன் வீரபாபாவையோட அந்த
பூமிதான யாத்திரை அந்த கிராமதான யாத்திரை அந்த ஒரு பிரச்சனை பீகார் பீகார்ல சந்திக்கிறாங்க அந்த கிராமதான ஊழியர்கள் எல்லாத்தையுமே வந்து அங்க இருக்கக்கூடிய தீவிரவாதிகள் மிரட்டுறாங்க நீங்க பணி செய்யக்கூடாது அப்படின்னு சொல்லி மிரட்டுறாங்க அந்த காலகட்டத்துல ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு உடல்நிலை சரியில்லை ஆனா இந்த செய்தி கிடைச்ச உடனேயே உடனடியா பீகாருக்கு வராரு எதுக்காக அப்படின்னு கேட்டா இது மாதிரியான மக்கள் சேவை செய்யக்கூடிய ஒரு சேவகர்களுக்கு யாராலுமே எந்த நேரத்திலும் ஆபத்து வரக்கூடாது அவங்களுக்கு உயிருக்கு எப்படி உத்தரவாதம் கொடுக்கணும் அப்படின்றதுக்காக அங்க ஓடோடி வராரு தன்னோட உடல்நலையே கருத்துல கொள்ளாம அந்த வந்து அந்த கிராம நிர்மாண திட்டத்தில் இருக்கக்கூடிய கிராம சேவகர்களுக்கு உறுதுணையா அந்த கிராமதான திட்டத்தில் இருக்கக்கூடிய ஊழியர்களுக்கு ஆதரவா அன்னைக்கு ஜெயபிரகாஷ் நாராயணன் வந்து அங்க வேலை செய்றார் ஜெயபிரகாஷ் நாராயணன் பீகார்ல வந்து வேலை செய்றாருன்ன உடனேயே அங்க இருக்கக்கூடிய
ஊழியர்களுக்கு பூரா உற்சாகம் வருது உற்சாகம் வந்து அந்த தீவிரவாதிகள்ட்ட இருந்து எங்களோட ஊரே போனாலும் பரவாயில்லை எங்க கூட ஜெயபிரகாஷ் நாராயணன் இருக்காரு அப்படின்ற ஒரு நம்பிக்கையோட அன்னைக்கு அந்த கிராம ஊழியர்கள் எல்லாருமே வேலை செஞ்சாங்க அது மாதிரி எங்கெங்கெல்லாம் வந்து தீமை நடக்குதோ அதை எதிர்த்து கேட்கணும் தட்டி கேட்கணும் அப்படின்றதை நமக்கெல்லாம் ஊட்டி வளர்த்தவர் ஜெயபிரகாஷ் நாராயணன் அதனால சமூக அநீதியா இருக்கலாம் அல்லது சம்பல் பள்ளத்தாக்குல இருக்கிற மாதிரியான ஒரு பொருளாதார கொலைக்காரர்களா இருக்கலாம் அங்கெல்லாம் போய் அந்த கொலைக்காரர்கள் கிட்ட எல்லாம் போய் பேசி காந்தியோட அகிம்சை வழியில அந்த கொலைக்காரர்களை பூராத்தையுமே வந்து சரண்டராக சொல்லி வந்த வேலை இருக்கே அது சுதந்திரத்துக்கு பின்னாடி நடந்த மிகப்பெரிய புரட்சி அந்த புரட்சிக்கு தலைமை தாங்குனது மீனோபாபாவையும் ஜெயபிரகாஷ் நாராயணனும் இந்த மாதிரியான பல தலைவர்களை உருவாக்கினது தான் காந்தியோட மிகப்பெரிய ஒரு
பணி அந்த தலைவர்களோட வாழ்க்கையிலிருந்து நம்ம பாடம் கத்துக்கிறது தான் நம்மளோட கடமையா இருக்க முடியும் மீண்டும் உலக உத்தமரின் உயரிய சிந்தனைகளில் சந்திக்கலாம் நன்றி