ஒரு நிலைப்பாடை எடுக்கணும் அப்பதான் நமக்கு அரசியல்ல சுதந்திரம் உடனடியாக கிடைக்கும் அப்படின்னு நினைச்ச தலைவர்கள் நிறைய பேர் இருந்தாங்க அதனால இவங்களோட சமுதாய பணிகள் அல்லது பொருளாதார வேலைகள் அதுல எல்லாம் வந்து நம்மளோட கவனத்தை திசை திருப்பாம நேரடியா ஒரு அரசியல் நடவடிக்கையில இறங்கணும் அப்படின்னு சொல்லி நினைச்ச தலைவர்கள் நிறைய பேர் காந்தியடிகள் இருந்தார் ஆனால் காந்தியடிகள் எல்லாத்தையும் இணைச்சிட்டு போகக்கூடிய ஒரு மிகப்பெரிய தலைவர் அவரு 1922ல அந்த சௌரி சௌரா நிகழ்ச்சியில காந்தியடிகளை கைது பண்ணி சிறையில வச்சுறாங்க ஆறு ஆண்டு காலம் கடுமையான ஒரு சிறை தண்டனை அந்த சிறை தண்டனை காலத்திலேயே அவருக்கு வந்து அப்பிசைட்டிஸ் எல்லாம் வந்து ஆபரேஷன் எல்லாம் பண்ண வேண்டிய ஒரு சூழ்நிலை அதனால அந்த ஆறு ஆண்டு கால சிறை தண்டனை காலத்துல அவர் சிறையில தனிச்சிருக்கார் அந்த நேரத்துல காந்தியடிகளோட இருந்த தலைவர்கள் அவங்க
எல்லாரும் என்ன சொல்றாங்க இது மாதிரி அரசியல் நடவடிக்கைகள் அதெல்லாம் ரொம்ப தீவிரமா நடந்துட்டு இருந்தாலும் கூட நம்ம இந்த சமுதாய வழிகள்ல பொருளாதார வேலைகள்ல நிறைய ஈடுபடனும் அப்படின்னு சொல்லிட்டு ஜம்லால் பஜாஜ் கிசோரிலால் மஷ்ரூவாலா ஜேசி குமரப்பா இது மாதிரி நிறைய தலைவர்கள் என்ன செய்றாங்க காந்திக்கு தெரியாமையே ஒரு காந்தி சேவா சங்கம் அப்படின்னு ஒன்னு ஆரம்பிச்சுறாங்க அது வந்து முழுக்க முழுக்க சமுதாய மாற்றத்துக்கான வேலைகளை செய்யக்கூடிய ஒரு அமைப்பு அது எந்த விதமான அரசியல் நடவடிக்கைகளும் இறங்காது ஆனால் சமுதாய மாற்றத்துக்காக பொருளாதார மாற்றத்துக்காக மக்கள் மத்தியில வேலை செய்யக்கூடிய ஒரு சேவை அமைப்பா அந்த காந்தி சேவா சங்கம் அப்படின்ற ஒரு அமைப்பை இவங்க எல்லாரும் சேர்ந்து ஏற்படுத்தி இருக்காங்க அதுல ராஜேந்திர பிரசாத் இருந்தாரு வல்லபாய் பட்டேல் இருந்தாரு இந்த மாதிரி பல தலைவர்கள் இந்திய தலைவர்கள்ல ரொம்ப முக்கியமான தலைவர்கள்
எல்லாருமே அந்த காந்தி சேவா சங்கத்திலயும் இணைந்து வேலை செஞ்சுட்டு இருந்தாங்க அப்ப அதோட ஒரு ஆண்டு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இடத்துல கூட்டம் அந்த காந்தி சேவா சங்கத்தோட கூட்டம் நடக்கும் பொதுவா அது வந்து கிராமங்கள்ல தான் அந்த கூட்டத்தை நடத்துவாங்க அந்த கிராமத்துல அந்த ஐந்து நாட்கள் ஆறு நாட்கள் அந்த கூட்டம் நடக்கும்போது கூட்டத்துக்கு யார் யார் வந்திருக்காங்களோ அவங்க எல்லாருமே கிராமத்துல நடக்கக்கூடிய பணிகள்ல தங்களை ஈடுபடுத்திக்கணும் அது காலையில அந்த குளத்தை போய் சுத்தம் பண்ற பணியா இருக்கலாம் அல்லது தெருவை சுத்தம் பண்ற பணியா இருக்கலாம் அல்லது அங்க இருக்கக்கூடிய கலைகளை பூராத்தையும் சுத்தம் பண்ணக்கூடிய பணிகளா இருக்கலாம் அது எல்லாத்துலையுமே எல்லா தலைவர்களும் காலையிலிருந்து இரவு வரைக்கும் இருக்கக்கூடிய பணிகள் எல்லாத்துலையுமே எல்லாரும் பங்கெடுத்துக்கணும் அப்படின்ற முறையில அந்த கூட்டம் நடக்குது அந்த கூட்டத்துக்கு காந்தியடிகளே ஒரு தடவை
வராரு அது அவரோட முதல் கூட்டம் காந்தி சேவா சங்கம் முன்னாடி ஆரம்பிச்சாலும் கூட அவர் அப்ப சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததுக்கு பின்னாடி முதல் கூட்டம் அந்த கூட்டத்துல எல்லாம் காந்தி சேவா சங்கம் இந்த சேவா சங்கத்துக்கு எல்லாம் என்னோட ஆசீர்வாதம் அப்படின்னு சொல்லிட்டு அதுக்கு அடுத்து ஆரம்பிக்கிறாரு நல்ல சேவை எல்லாம் பண்றீங்க நல்ல சேவை சங்கமாதான் அது இருக்கணும் அந்த அடைமொழி ஒன்னு வச்சிருக்கீங்களே காந்தி சேவா சங்கம்னு அதனால அந்த அடைமொழியை மட்டும் நீங்க தயவு செய்து எடுத்துருங்க அப்படின்னு சொல்றாரு ஏன் அப்படின்னு சொன்னா நான் ஒரு உயிருள்ள மனிதன் நான் இன்னைக்கு பேசுவேன் நாளைக்கு வேற மாதிரி பேசுவேன் என்னோட சிந்தனைகள் வளர்ந்துகிட்டே வரக்கூடிய ஒரு கட்டம் அதனால என்னோட பேர்ல ஒரு சேவா சங்கம் அப்படின்னு ஆரம்பிக்கிறதுன்றது அது நல்லது இல்லைன்னு நான் நினைக்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு தீர்க்கதரிசனத்தோட இன்னொரு விஷயத்தையும்
சொல்றாரு இது மாதிரி தனிப்பட்ட பேர்ல வந்து நீங்க வந்து சேவா சங்கம் அது இதுன்னு ஆரம்பிச்சீங்க அப்படின்னு சொன்னா பின்னால அதே ஒரு கோஷ்டிகளா வந்து அது உங்களுக்குள்ள ஒரு பிரிவினையை ஏற்படுத்திடும் அதனால இதெல்லாம் தவறு அப்படின்னு சொல்றாரு அதனால காந்தி சேவா சங்கம் அப்படின்ற பேர்ல நீங்க வந்து ஆரம்பிக்கிறதை விட சேவா சங்கம் அப்படின்னு சொல்லி நீங்க வச்சிட்டீங்க அப்படின்னு சொன்னா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் அப்படின்னு சொல்றாரு ஆனா காந்தியடிகளோட இருந்த சக தோழர்கள் எல்லாரும் என்ன சொல்றாங்க இது வந்து சத்தியத்தையும் அடிப்படையா வச்சது அதனால சத்தியத்துக்கும் அகிம்சைக்கும் எங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கக்கூடியது நீங்கதான் அதனால உங்க பேரை வைக்கிறதுல தவறு இல்லை அப்படின்னு சொல்றாங்க காந்தியடிகள் சொன்ன அந்த கருத்தை அவங்க ஏத்துக்கல ஆனா காந்தியடிகள் அது தீர்க்கமா அவர் முடிவு செஞ்சதுனால என்ன ஆயிடுச்சு அப்படின்னு சொன்னா பின்னால
கொஞ்ச நாள்லையே அந்த காந்தி சேவா சங்கம்ன்றது இயற்கையாவே அது வந்து மறைஞ்சு அது காங்கிரஸ் பேர் இயக்கத்தோட தன்னை இணைச்சுக்கிடுச்சு அந்த தலைவர்கள் எல்லாருமே இந்த இயக்கத்துல இருக்கிறவங்க எல்லாம் அங்கேயும் இருந்தாங்க ஆனா கூட அதை முழுமையா செயல்படாம இந்த இயக்கத்தோடயே அதை வந்து இணைச்சிட்டாங்க ஆனா ஜேசி குமரப்பா மாதிரியான பெரிய தலைவர்கள் பெரிய பொருளாதார சிந்தனையாளர்கள் தங்களோட அந்த கிராம வளர்ச்சிக்காக தங்களோட வாழ்க்கையை அர்ப்பணிச்சுக்கிட்டு அந்த வார்த்தா பக்கத்துல ஒரு கிராமத்துல போய் தங்கி அந்த மகன்வாடி அப்படின்ற அந்த கிராமத்துல போய் தங்கி அங்க இருக்கக்கூடிய கிராமத்துல கிராமத்துக்கு தேவையான விவசாயம் கருவிகள் எல்லாத்தையும் கண்டுபிடிச்சு புதிய புதிய உத்திகளை எல்லாத்தையும் இந்த விவசாயத்தில் கண்டுபிடிச்சு ஒரு மிகப்பெரிய காந்திய பொருளாதார சிந்தனையாளரா ஜேசி குமரப்பா அன்னைக்கு இருந்தார் அது மாதிரி பல தலைவர்கள் இந்த அரசியல் போராட்டத்தில் இருந்துகிட்டு இந்த சமுதாய
பணிகளையும் பொருளாதார பணிகளிலும் இணைந்து வேலை செஞ்சு ஒட்டுமொத்த இந்தியாவையே ஒரு சந்தோஷமான இந்தியாவா உருவாக்கணும் அப்படின்றதுல தங்களோட வாழ்க்கையே ஈடுபடுத்தினாங்க மீண்டும் உலக உத்தமரின் உரிய சிந்தனைகளில் சந்திக்கலாம் நன்றி [இசை]