இதை மட்டும் முன்னாடியே என்ட்ட யாராவது சொல்லி இருந்தா என் வாழ்க்கையே மாறி இருக்கும். இந்த விஷயத்தை 10 வருஷத்துக்கு முன்னாடியே என்கிட்ட யாராவது சொல்லி இருந்தாங்கன்னா இன்னைக்கு நான் வேற லெவல்ல இருந்திருப்பேன். இதை ஏன் யாருமே என்ட்ட சொல்லவே இல்லை இந்த விஷயத்தை ஏன் யாருமே சொல்றதே கிடையாது. இப்படி பல விஷயங்களை பத்தி நீங்க யோசிச்சிருக்கீங்கல்ல. இப்படி நம்ம யோசிக்கிற பல அட்வைஸ் ரொம்ப சிம்பிளானதா இருந்திருக்கும். யாரு வேணாலும் நமக்கு சொல்லிருக்கலாம் அப்படின்னு இருந்திருக்கும். ஆனா யாருமே சொல்லி இருந்திருக்க மாட்டாங்க. இந்த அட்வைஸ் நம்ம வாழ்க்கையை மாத்தக்கூடியதா இருக்கும். ஆனா சிம்பிளா இருக்கும். ரொம்ப ரொம்ப முக்கியமான அட்வைஸ் அப்படிப்பட்ட அட்வைஸாதான் இருக்கும். டேனா பெரினோ அப்படின்னு ஒரு ஆத்தர் இருக்காரு. ஒயிட் ஹவுஸ்ல பிரஸ் செக்ரட்டரியா வேலை பார்த்தார். அவருக்கு தெரிந்த எல்லா பெரிய சாதனையாளர்கள்ட்டையும் இந்த ஒரு அட்வைஸ் உங்களுக்கு வாழ்க்கையில
முன்னாடியே கிடைச்சிருக்கலாம் அப்படின்னு தோணக்கூடிய அட்வைஸ் என்ன அப்படின்னு கேட்டிருக்கார். அப்படி கிடைச்ச எல்லா பதிலையும் ஒரு புத்தகமா எழுதி இருக்காரு. ஐ விஷ் ஷம்மூன்ஹோல்ட் மீ அப்படின்ற ஒரு புத்தகம். ரொம்ப ரொம்ப அருமையான புத்தகம். ரொம்ப சிம்பிளான அட்வைஸ்தான். ஆனா வாழ்க்கையே மாத்தக்கூடிய அட்வைஸ் நிறைய இருக்கு. நம்ம இத முன்னாடியே நம்மிட்ட யாராவது சொல்லிருக்கலாமே அப்படின்னு யோசிக்கக்கூடிய அட்வைஸா இருக்கும். அப்படிப்பட்ட பல அட்வைஸ இன்னைக்கு இந்த வீடியோல உங்க கூட ஷேர் பண்ணிக்க போறேன். இந்த புத்தகத்தோட சம்மரி மூலமா. நம்ம சேனலுக்கு நீங்க புதுசா இருந்தீங்கன்னா நான் படிக்கிற புக்ஸோட சம்மரிஸ் அப்லோட் பண்ணுவேன். நான் படிச்சதுலயே எனக்கு ரொம்ப புடிச்ச விஷயத்தை உங்க கூட ஷேர் பண்ணிப்பேன். நான் படிச்சதுலயே நல்ல புக்ஸ உங்களுக்கு ரெக்கமெண்ட் பண்ணவும் செய்வேன். அதெல்லாம் உங்களுக்கு பிடிக்கும் அப்படின்னா நம்ம சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பெல் பட்டன
பிரஸ் பண்ணிடுங்க. வீடியோக்குள்ள போறதுக்கு முன்னாடி இந்த புத்தகம் நமக்கு சொல்லி தரக்கூடிய ஒரு முக்கியமான பாடம் ஆன்சைட்டிய குறைக்கணும்னா அதற்காக தயாரா இருக்கணும் அப்படின்னு சொல்லுது. நம்ம ஒரு வெளிநாட்டில இருக்கோம். நமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பயம்ன்றது என்ன? வீட்ல இருக்கக்கூடியவங்க ஊர்ல இருக்க கூடியவங்களுக்கு உடம்பு சரி இல்லாம போயிடுச்சுன்னா, அவங்களை யாரு பார்த்துப்பா அப்படின்ற ஒரு பயம் நமக்குள்ள இருந்துகிட்டே இருக்கும். ஊர்ல இருக்கக்கூடிய வயதான நம்ம குடும்பத்துக்கு ஏதாவது ஒன்னு ஆயிடுச்சுன்னா, பபைனான்சியலி நம்ம எப்படி மேனேஜ் பண்றது அப்படின்ற பயமும் நமக்கு இருக்கும். அதனாலதான் நம்மளோட குடும்பத்துல இருக்க எல்லாருக்குமே நம்ம ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்கணும்ன்றது ரொம்ப ரொம்ப முக்கியம். அதுவும் நீங்க என்ஆர்ஐயா இருந்தா இதை கட்டாயம் செய்யணும். நமக்கும் நம்ம குடும்பத்துல இருக்கறவங்களுக்கும் ஆரோக்கியத்துல ஏதாவது பாதிப்பு வந்தா அதை பார்த்துக்கறதுக்கான பைனான்சியல் ஸ்டெபிலிட்டின்றது ஒரு ஆப்ஷன் கிடையாது.
கட்டாயம் எல்லாரும் அதற்கு தயாரா இருக்கணும். எப்ப நான் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்கிறேனோ அப்படி என்னன்னா தயார்படுத்திக்கிறேன். ஒரு முக்கியமான விஷயம் நம்ம தெரிஞ்சுக்க வேண்டியது வெளிநாட்டுல இருக்குற நம்ம வெளிநாட்டுலயே இன்சூரன்ஸ் எடுக்கறதுக்கு பதிலா இந்தியால இன்சூரன்ஸ் எடுத்தோம்னா அந்த ஹெல்த் இன்சூரன்ஸ 30ல இருந்து 45% விலை குறைவா எடுக்க முடியும். வயதாக வயதாக ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கறதுல நிறைய சேலஞ்சஸ் வரும். அதனாலதான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நம்மளோட பெற்றோர்களுக்கு இந்த இன்சூரன்ஸ நம்ம எடுத்தே ஆகணும். ஹெல்த் இன்சூரன்ஸ்னா ரொம்ப காஸ்ட்லியா இருக்கும் அப்படின்னு நீங்க நினைச்சீங்கன்னா nஆஐயா இருக்குற உங்களுக்கு வெறும் 800ல இருந்து ₹1000 மாதத்துக்கு கொடுக்குறது மூலமா ரொம்ப நல்ல ஹெல்த் இன்சூரன்ஸ உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் உங்களால எடுத்துக்க முடியும். அதுவும் இப்போ ஜிஎஸ்டி இல்லாதனால ஹெல்த் இன்சூரன்ஸ ரொம்ப சீப்பான வேலையில
நம்மளால வாங்க முடியும். நீங்க வெளிநாட்டுல இருக்கும்போது உங்களோட அப்பா அம்மாவுக்கு இந்தியால ஏதாவது உடல்நிலை பிரச்சனைன்னா டாக்டர் வீட்டுக்கே போவாங்க. உங்களுக்கு தனியான ரிலேஷன்ஷிப் மேனேஜர் கிடைப்பாங்க. 30 நிமிடத்துல கிளைம்கான சப்போர்ட்டும் பண்ணுவாங்க. அதைவிட ரொம்ப முக்கியமா ஆன்லைன்ல நீங்க ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் உங்களோட என்ஆர்ஐ அக்கவுண்ட்ட பயன்படுத்தி வாங்குனீங்கன்னா 25% டிஸ்கவுண்ட் உங்களுக்கு கிடைக்கும். நானும் என்னோட குடும்பமும் வேற வேற நாட்டுல பிரிஞ்சிருக்கும். ஆனா இங்க ரெண்டு பேரோட ஹெல்த்தும் ப்ரொடெக்ட் ஆயிருக்குன்னு நினைக்கிறது ரொம்ப பெரிய மனநிம்மதியை கொடுக்கும். அப்படிப்பட்ட மனநிம்மதியை இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் உங்களுக்கு பெற்று தரும். அதை நீங்க வாங்கணும் அப்படின்னு யோசிச்சுட்டு இருந்தீங்கன்னா, நீங்க ஒரு என்ஆர்ஐயா இருந்தீங்க அப்படின்னா அதற்கான லிங்க நான் டிஸ்கிரிப்ஷன் அண்ட் ஃபர்ஸ்ட் கமெண்ட்ல கொடுத்துருக்கேன். அங்க உங்களால பல இன்சூரன்ஸ கம்பேர் பண்ணி பார்த்து எது உங்களுக்கு சூட் ஆகும்னு
தோணுதோ அதை உங்களால வாங்க முடியும். நேரம் தாமதிக்காம அதை செக் பண்ணி பாருங்க. நம்ம எல்லாரும் அடக்கத்தோட இருக்கறது ரொம்ப கடினமான செயல் மாதிரி நினைச்சுட்டு இருக்கோம்ல. உண்மையா கடினம் தான். ஆனா முடியாத செயல் கிடையாது. ஏதோ ஒரு நபர் ரொம்ப பெரிய உயரத்துக்கு போயிருப்பாரு அதை நம்ம பார்த்திருப்போம். ரொம்ப பெரிய உயரத்துக்கு போனாலும் ரொம்ப அடக்கமா அமைதியா இருப்பாரு. அதை பார்க்கும்போது வியப்பா இருக்கும். என்னால இப்படி இருக்க முடியலையே அப்படின்னு நமக்கு தோணி இருக்கும். ஆனா உண்மையா நம்மளால அடக்கமா இருக்க முடியாதா? இருக்க முடியும். அதுக்கு நீங்க என்ன பண்ணனும் தெரியுமா? அடக்கமா இருக்கறத பயிற்சி பண்ணனும். அடக்கமா இருக்கறதுன்னா உள்ளிருந்து வரக்கூடிய குணம்னு நம்ம நினைச்சுக்கிட்டு இருக்கோம். நீங்களும் அப்படிதான நினைச்சுக்கிட்டு இருந்தீங்க. ஆனா அது கிடையாது. இத நமக்கு யாருமே சொல்லவே இல்ல அப்படின்றத கவனிச்சிருக்கீங்களா? நீங்க அடக்கமா இருக்கறது
ஒரு குணம் கிடையாது. அது உங்களுக்குள்ளேயே பிறவியிலேயே வர விஷயம் கிடையாது. பயிற்சி மூலமா நீங்க அடக்கத்தை கத்துக்கலாம். அடக்கமா இருக்கறதுக்கு ஏதோ விஷயத்தை புரிஞ்சுக்கணும்னு அவசியம் கிடையாது. அடக்கமா இருந்து இருந்து பயிற்சி பண்ணனும். ஒரு உதாரணத்துக்கு நீங்க கிரிக்கெட் விளையாடுறீங்கன்னு வச்சுக்கோங்க. இல்ல டிவில கிரிக்கெட் விளையாடுறத பார்த்திருப்பீங்க. ஒரு பெரிய இன்டர்நேஷனல் கிரிக்கெட் மேட்ச்ல அங்க ஏதோ ஒரு நபர் பெரிய கிரிக்கெட் பிளேயர் ஆனா கையில வாட்டர் பாட்டில் எடுத்துட்டு வந்து எல்லாருக்கும் கொடுத்துட்டு இருப்பாரு பிளேயர்ஸ்க்கு. அங்க அவர் என்ன பண்றாரு அடக்கமா இருக்கறத பயிற்சி பண்றார். நம்ம வாழ்க்கையில எப்பெல்லாம் நமக்கு அடக்கமா இருக்கறதுக்கான ஒரு வாய்ப்பு கிடைக்குதோ உடனடியா அத அபகரிச்சு பயன்படுத்திக்கணும். அதை ஒரு குறைவா பார்க்க கூடாது. ஒரு உதாரணத்துக்கு ஒரு மீட்டிங் ரூம்ல இருக்கோம். எல்லாருக்கும் காபி கொண்டுட்டு வந்து கொடுக்கறதுக்கான ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைக்குது.
இப்போ எல்லாரும் மீட்டிங்ல பேசிட்டு இருக்கப்போ நான் மட்டும் வெளியே எந்துருச்சு போய் எல்லாருக்கும் காபி தட்டுல எடுத்துட்டு வந்து கொடுத்தேன்னா நான் ஏதோ அந்த மீட்டிங்லயே முக்கியம் இல்லாத மாதிரி நமக்கு தோணுதுல்ல அப்படி தோணக்கூடாது. அந்த நேரத்துல நம்ம எப்படி சிந்திக்கணும்னா இந்த இடத்துல எல்லார் முன்னாடியும் என்னோட அடக்கத்தை நான் பயிற்சி பண்றதுக்கான ஒரு வாய்ப்பு அப்படின்னு பார்கணும். வாழ்க்கை பல நேரத்துல இப்படிப்பட்ட வாய்ப்பு உங்களுக்கு கொடுத்திருக்கோம். கட்டாயம் கவனிச்சு பாருங்க. நம்ம என்ன நினைச்சுடுறோம்னா இது அடக்கமா இருக்கறதுக்கான வாய்ப்புன்னு பார்கறதுக்கு பதிலா நம்மள அடுத்தவங்க அசிங்கப்படுத்துறாங்க அப்படின்னு பார்கறோம். இதுக்கப்புறம் உங்க வாழ்க்கையில எப்பெல்லாம் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு கிடைக்குதோ உங்களோட அடக்கத்தை காட்டுறதுக்கான ஒரு வாய்ப்பு கிடைக்குதோ அதை அசிங்கப்படுறதா நினைக்காம என்னோட அடக்கத்தை காட்ட போறேன் அப்படின்னு பயிற்சி பண்ணி பாருங்க. உங்க வாழ்க்கையில நீங்க அடக்கமா இருப்பீங்க. யாரை
பார்த்து வியந்தீங்களோ அந்த மனிதரா மாற ஆரம்பிப்பீங்க. ரெண்டு விஷயம் சொல்றேன். ஒன்னு, ஒரு போட்டி. அந்த போட்டியில போய் நீங்க கலந்துகிட்டீங்கன்னா கட்டாயம் தேச்சிடுவீங்கன்னு உங்களுக்கு தெரியுது. இன்னொரு போட்டி அந்த போட்டிக்கு போனா நான் ஜெயிப்பனா மாட்டேனான்னு எனக்கு தெரியலையே என் மேலயே எனக்கு சந்தேகமா இருக்கே இதுல என்னால ஜெயிக்க முடியாது அப்படின்னு ஒரு குறை உங்களுக்கு தோணுது. இப்ப இந்த ரெண்டு போட்டியும் உங்க முன்னாடி நடக்குது. நீங்க ஒரு போட்டியில போய் கலந்துக்கணும். எந்த போட்டியில கலந்துப்பீங்க உங்களுக்கு இதுவரைக்கும் சொல்லப்பட்ட அட்வைஸ் என்னவா இருக்கும்னா நீங்க எதுல ஜெயிப்பீங்களோ அதுல போய் கலந்துகிட்டீங்கன்னா அதுல நீங்க வெற்றி அடைஞ்சிரலாம் பரிசு பெற்றலாம் அப்படின்னு பல பேர் அட்வைஸ் சொல்லிருப்பாங்க ரொம்ப பெரிய தப்பான அட்வைஸ் கிடையாது. ஆனா யாருமே சொல்லாத அட்வைஸ் என்ன தெரியுமா? நீங்க கண்டிப்பா ஜெயிச்சிடுவீங்கன்னு தெரிஞ்ச போட்டியில எதுக்கு
நீங்க கலந்துக்கணும் அதுதான் நீங்க ஜெயிச்சிடுவீங்கன்னு உங்களுக்கே தெரியுமே நான் இந்த போட்டியில போய் கலந்தா வெற்றி அடைவேனா தோத்து போவனான்னு எனக்கு சந்தேகமா இருக்குன்னா அந்த போட்டியில தான் போய் கலந்துக்கணும். அந்த போட்டியில கலந்துக்கும் போது நான் அதுல வெற்றி அடைவேனா தோத்து போவேனா அப்படின்ற உண்மைய நான் தெரிஞ்சுக்கிறேன். நான் தோத்து போயிடுவேன் அப்படின்னு நினைச்சாலும் கலந்துகிட்டு தோத்து போனதுக்கு அப்புறம் தான் அது எனக்கு தெரியுது. நான் முதல்லயே தோத்து போயிடுவேன் அப்படின்னு நினைக்கிறதுனால எல்லாம் அது உண்மை கிடையாது. என் மனதுல வரக்கூடிய எண்ணம் உண்மை கிடையாது. அது எண்ணம். தோத்து போயிடுவேன் அப்படின்ற எண்ணம் தான் இருக்கு. தோத்து போயிடுவேன்ற உண்மை எங்க இல்லை. போய் கலந்துகிட்டு பாருங்க. தோத்து போனீங்கன்னா தப்பு கிடையாது. அதுல இருந்து பாடம் கத்துக்கோங்க. அது உங்களுக்கு தேவையில்லாத விளையாட்டுனா அதற்கப்புறம் அதுல நீங்க கலந்துக்க தேவையில்லை
ஆனா முதல்ல சந்தேகம் இருந்தா அதுலதான் நீங்க கட்டாயம் கலந்துகிட்ட ஆகணும். நம்ம லைப்ல எவ்வளவு ஆப்பர்சுனிட்டிய நம்ம மிஸ் பண்ணி இருப்போம். ஒரு இன்டர்வியூக்கு போகணும்னு தோணும். ஆனா இதுல போனாலாம் நான் தோத்துருவேன் அப்படின்னு நினைச்சட்டு போகாம இருந்திருப்போம். ஏதோ ஒரு நபருக்கு ப்ரொபோஸ் பண்ணலாம்னு தோணி இருக்கும். நமக்கு ரொம்ப புடிச்ச நபரா இருந்திருப்பாங்க. ப்ரொபோஸ் பண்ணா அவங்க நம்மளல்லாம் ஏன் ஏத்துக்க போறாங்க அப்படின்னு ப்ரொபோஸ் பண்ணாம விட்டுருப்போம். இப்படி வாழ்க்கையில இது நான் முயற்சி பண்ணனா தோத்து போயிடுவேன் அப்படின்னு நினைச்சு எத்தனைய விட்ுருப்போம். உங்களுக்கு யாரும் சொல்லாத அட்வைஸ் இதுதான். உங்களுக்கு எந்த இடத்துல இதுல நான் முயற்சி பண்ணா தோத்து போயிடுவேன்னு தோணுதோ அதுலதான் நீங்க முயற்சி பண்ணனும். முயற்சி பண்ணி பாருங்க. 50%த்துக்கும் அதிகமான நேரத்துல அதுல நீங்க தோத்து போக மாட்டீங்க. வெற்றிதான் அடைவீங்க. மீதி நேரத்துல தோத்து
போனா அங்கிருந்து உங்களுக்கு ஒரு மிகப்பெரிய பாடம் கண்டிப்பா கிடைக்கும். உங்களை யாராவது குறை சொல்லி இருக்காங்களா? கண்டிப்பா உங்களை குறை சொல்றதுக்கு 1000 பேர் இருந்திருப்பாங்க. குறை சொல்றது நீங்க ஏதோ ஒரு செயல புதுசா செய்றீங்க இல்ல ஏதோ ஒரு செயல செய்றீங்க அப்படின்றத காட்டுது. ஆனா அடுத்தவங்க குறை சொல்லும்போது நீங்க எப்படி உணர்ந்தீங்க? யாரோ ஒரு நபர் நமக்கு குறை சொல்லிட்டா அதை பர்சனலா எடுத்துக்கிட்டு நான் ரொம்ப வருத்தப்படுவேன். இல்லன்னா அவங்களை திரும்ப குறை சொல்லி அவங்களை நான் வஞ்சிப்பேன். இது ரெண்டுத்தையும் செஞ்சே ஆகணுமா. குறை சொல்றத ரொம்ப சிம்பிளா நீங்க ஹேண்டில் பண்ணிட்டு போயிரலாமே. யாரோ ஒரு நபர் என்ன பார்த்து ஒரு குறை சொல்றாரு. அங்க நான் எதுக்கு வருத்தப்படணும்? இல்ல எதுக்கு அவரு நான் திரும்பி குறை சொல்லணும்? அவர் சொன்ன குறைய காதுல வாங்கிப்போம். அவரு சொன்னது
உண்மையா பொய்யா அப்படின்னு ஒரு ஆராய்ச்சியே பண்ணுவோம். அத பர்சனலா எடுத்துக்க தேவையில்ல. உண்மையா இருந்தா ரொம்ப நன்றி இந்த குறைய நீங்க சொல்லிட்டீங்க. நான் திருத்திக்கிறேன் அப்படின்ற முயற்சியில ஈடுபடலாம். இல்ல பொய் அப்படின்னு தெரிஞ்சதுன்னா அவரை உதாசீனப்படுத்திட்டு போயிடலாமே. இங்க எதுக்கு எனக்கு ஏதோ ஒரு நபர் குறை சொன்னா நான் வருத்தப்படணும் இல்ல அவர் மேல கோபப்படணும். குறை சொல்லும்போது இந்த ஐடியால இருந்தீங்கன்னா அந்த குறையை உங்களால தெளிவா பயன்படுத்திக்க முடியும். அது மட்டும் இல்லாம நல்ல ஒரு எமோஷனல் ஸ்டேட்ல இருப்பீங்க. தேவையில்லாத வருத்தத்தை நீங்க தவிர்க்கலாம்.செவன் 7 11 அப்படின்ற ஒரு பிரின்சிபிள் இருக்கு. இந்த பிரின்சிபிள கத்துக்கிட்டீங்கன்னா நீங்க ரொம்ப கான்பிடென்ட்டான ஆளா இருப்பீங்க. 7ன்னா என்ன? வாழ்க்கையில எந்த ஒரு விஷயத்துக்கு தயாரானாலும் எங்க போய் இருக்கணுமோ ஒரு இடத்துல எத்தனை மணிக்கு இருக்கணுமோ அதுக்கு ஏழு நிமிஷத்துக்கு முன்னாடியே
அங்க நான் இருக்கணும். ஏதோ ஒரு மீட்டிங் ரூமுக்கு நான் போறேன்னா அந்த மீட்டிங் ரூம்ல எத்தனை மணிக்கு மீட்டிங் ஸ்டார்ட் ஆகுதோ அதற்கு ஏழு நிமிஷத்துக்கு முன்னாடியே இருக்கணும். நம்ம பொதுவா சொல்லுவோம் முன்னாடியே போயிடணும் அப்படின்னு. முன்னாடியே போறதுனா என்ன? அரை மணி நேரத்துக்கு முன்னாடியே போயிடுவீங்களா? அப்படி போலாம்னு நிறைய பேர் உங்களுக்கு சொல்லிருப்பாங்க. அது உங்களோட நேரத்தை வீணடிக்கிறது. அதே நேரத்துல ஆன் டைமுக்கு போனீங்கன்னா அங்க ஒரு பதட்டம் உருவாகும். முன்னாடியே போகணும்னு நமக்கு தெரியும். ஆனா எத்தனை நிமிஷத்துக்கு முன்னாடியே போகணும் இதை யாருமே சொல்லி இருக்க மாட்டாங்க. ஆனா இந்த அட்வைஸ் என்ன சொல்லுதுன்னா எந்த ஒரு விஷயமா வேணா இருக்கட்டும். ஏழு நிமிஷத்துக்கு முன்னாடி போங்க. சினிமாக்கு போறீங்களா? எத்தனை நிமிஷத்துக்கு போனா உங்களால பாப்கார்ன் வாங்கிட்டு உள்ள போக முடியும்னு நினைக்கிறீங்க. கரெக்ட் ஷோக்கு அப்போ அதுக்கு ஏழு
நிமிஷத்துக்கு முன்னாடி அங்க போங்க. ட்ரெயின பிடிக்க போறீங்களா எத்தனை நிமிஷத்துக்கு போனா எல்லா டிக்கெட்டும் எடுத்துட்டு போய் பிளாட்பார்ம்ல உட்கார முடியும்னு நினைக்கிறீங்க ஆன் டைம்கு அதுக்கு ஏழு நிமிஷத்துக்கு முன்னாடி போங்க இப்படி எல்லாத்துக்கும் ஏழு நிமிஷத்துக்கு முன்னாடி போய் பழகுங்க நீங்க அவசரப்படவும் தேவையில்லை நேரத்தை வீணடிக்கவும் தேவையில்லை இந்த 11ன்னா என்ன நீங்க ஏதோ ஒரு இடத்துல பேச போறீங்கன்னு வச்சுக்கோங்க நீங்க பேசுற ஒவ்வொரு நிமிஷத்துக்கும் 11 நிமிஷம் பிரிபரேஷன் அப்படின்றது தேவை இந்த வீடியோக்கு நான் ஒரு நிமிஷம் தான் பேச போறேன்ற முடிவு எடுத்துட்டேன்னா அந்த ஒரு நிமிஷத்துக்காக 11 நிமிஷம் நான் பிரிப்பேர் பண்ணி இருக்கணும் அதாவது 11 நிமிஷம் ஒர்க் பண்ணி இருக்கணும்னு சொல்லல. 11 நிமிஷம் பேசுறதுக்கான கண்டென்ட்ட ரெடி பண்ணி கடைசிில ஒரு நிமிஷம் இல்ல ரெண்டு நிமிஷம் பேசணும் அப்படின்னு சொல்றாங்க. இப்படி பேசும்போது
நமக்கு ரொம்ப கான்பிடென்ட் இருக்கும். 11 நிமிஷத்துக்கான பிரிபரேஷன பண்ணி அதை ஷார்ட் பண்ணி ரெண்டு நிமிஷத்துல பேசும்போது எவ்வளவு கான்பிடென்ட் இருக்கும்? கான்பிடென்ட் உங்களுக்கு இல்லைன்னா இந்த ரெண்டு ரூல பயன்படுத்துங்க. 7 11 அப்படின்ற ரூல உங்க வாழ்க்கையில உங்களுக்கு விலை மதிக்க முடியாத ஒரு விஷயம் இருக்குன்னா அது உங்களோட ரெப்புடேஷன் தான். உங்களோட நற்பெயர் மட்டும்தான். ஏதோ ஒரு நபர் கிட்ட ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிட்டீங்கன்னா அந்த வார்த்தையை கட்டாயம் கடைபிடிங்க. வெள்ளிக்கிழமை நான் வரேன் அப்படின்னு சொன்னா வெள்ளிக்கிழமை நீங்க வந்தே ஆகணும். நான் உங்களுக்கு இந்த விஷயத்துல உதவி பண்றேன் அப்படின்னு சொல்லிட்டா உயிரை கொடுத்தாவது உதவி பண்ணிரணும். ரொம்பவே கம்மியான நேரத்துலதான் நம்ம சொன்ன விஷயத்தை நம்மளால செய்ய முடியாம போகும். அப்படி போறப்போ உடனடியா அந்த நபர் கிட்ட என்னால இத செய்ய முடியாம போயிடுச்சு நான் இப்படி
வார்த்தையை சொல்லி தவறிட்டா என்ன மன்னிச்சிருங்கன்னு மன்னி பார்த்து கேளுங்க. சொன்ன வார்த்தையை அப்படியே காத்துல விட்டீங்க அப்படின்னா உங்களுடைய ரெப்புடேஷன் நற்பெயர்ன்றது பாதிக்கப்படும். அது பாதிக்கப்பட்டதுன்னா இந்த உலகத்துல இருக்கற எல்லாமே உங்களுக்கு கிடைச்சாலும் எதுவுமே கிடைக்காத மாதிரிதான். ஒரு வேலைக்கு போறது எப்படி அப்படின்னு நம்ம எல்லாருமே கேட்டிருப்போம். நிறைய பேர் நமக்கு சொல்லி கொடுத்திருப்பாங்க. ஒரு வேலை கிடைக்கணும்னா என்ன செய்யணும்? இன்டர்வியூக்கு எப்படி பிரிப்பேர் பண்ணனும் இதெல்லாம் சொல்லி கொடுத்துருக்காங்கல்ல. யாராவது ஒரு நபர் வேலையை விட்டு எப்படி போறதுன்னு சொல்லி கொடுத்துருக்காங்களா? ஆமா அது ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். ஆனா யாருமே நமக்கு சொல்றது இல்லை. வேலைய விட்டு போறதுன்னா உடனடியா அங்க இருக்கறவங்க எல்லாரையும் நம்ம வரிஞ்சு கட்டிட்டு அவங்க எல்லாரு கிட்டையும் குறை சொல்லிட்டு அப்படியே அங்க இருந்து ஓடி போறது கிடையாது. அப்படி நீங்க பண்ணீங்கன்னா பிற்காலத்துல நீங்க
யோசிப்பீங்க. வேலையை விட்டு வரப்போ ஒரு நற்பெயரோட வந்திருக்கலாம் போலையே இதை யாருமே நமக்கு சொல்லலையே அப்படின்னு யோசிப்பீங்க. பொதுவா வேலைன்னு வந்துருச்சுன்னா அங்க இருக்கற உலகம் ரொம்ப ரொம்ப ரொம்ப சின்னது. பொதுவா நம்ம உலகமே ரொம்ப சின்னதுன்னு நம்ம சொல்லுவோம். ஆனா வேலைன்னு வரப்போ அதை சுத்தி இருக்கற உலகம் ரொம்ப ரொம்ப சின்னது நீங்க நினைக்கிறத விட ரொம்ப சின்னது. நீங்க யார் மேல குறை சொல்லிட்டு உங்களோட முதலாளியா இருக்கட்டும் இல்ல உங்களோட பாசா மேனேஜரா இருக்கட்டும். அவங்கள ஏதோ ஒரு குறை சொல்லிட்டு அந்த வேலைய விட்டு வெளிய வந்துட்டீங்க. திரும்ப கட்டாயம் அதே நபரோட உதவியை நாடி நீங்க இருப்பீங்க. எக்காரணத்தை கொண்டும் ஒரு வேலையை விட்டு வெளிய வரப்போ அந்த வேலையை மொத்தமா உதரி தள்ளிட்டு வராதீங்க. நீங்க எந்த பாலத்தை பயன்படுத்தி அந்த வேலையை விட்டு வெளிய வந்தீங்களோ அதே
பாலத்தை பயன்படுத்தி திரும்ப உள்ள போறதுக்கான கேட்டை திறந்து வச்சிட்டே வாங்க. ரொம்ப ரொம்ப முக்கியமா ஒரு வேலையில இருக்கீங்கன்னா அந்த வேலையை விட்டு எப்ப போகணும்ன்றதும் உங்களுக்கு தெரியணும். ஒரு வேலையில எப்ப சேரணும்ன்றது நமக்கு தெரியுது அதே மாதிரி ஒரு வேலையை விட்டு எப்ப போகணும்ன்றது உங்களுக்கு தெரியணும். எப்ப அங்க நீங்க ஒண்ணுமே கத்துக்கறது இல்லையோ எப்ப உங்களோட வேல்யூவும் உங்க கம்பெனியோட வேல்யூவும் மாறுதோ அப்ப நீங்க வேலைய விட்டு போயிரணும். ஆனா வேலையை விட்டு போறப்போ அங்க நற்பெயரோடதான் போகணும். அந்த கம்பெனி உங்களை டார்ச்சர் பண்ணிருக்கலாம். உங்களை போட்டு கொன்னுருக்கலாம். அந்த கம்பெனி மாதிரி மோசமான கம்பெனியே இல்லைன்னு நீங்க நினைச்சிருக்கலாம். ஆனா அதுக்காகலாம் அங்க இருக்கற நற்பெயர உடைச்சுட்டு வெளில வரக்கூடாது. உள்ள இருக்கும்போது எப்படி வேணா உங்கள அவங்க நடத்திருக்கலாம். நீங்க எப்படி வேணா அவங்கள பார்த்துருக்கலாம். உங்க ரெண்டு
பேருக்கும் சண்டை இருந்துகிட்டே கூட இருந்துருக்கலாம். ஆனா வெளிய வரப்ப ரொம்ப நட்போட நல்ல பேரோட அவங்களோட ஆசீர்வாதத்தோட கூட வெளிய வந்துருங்க. ஏன்னா உள்ள திரும்ப போறதுக்கான தேவைன்றது எப்ப வேணா ஏற்படலாம். ஒரு வேலையை விட்டு போறது ரொம்ப முக்கியம். ஆனா போகும்போது ரொம்ப ரொம்ப ரொம்ப நற்பெயரோட போணும். சிம்பிளா சொல்லணும்னா திரும்ப அங்க இருக்கற மக்கள் நம்மளை ஏத்துக்கிற ஒரு நிலையில அவங்களை வச்சிட்டு போணும். கான்பிடென்ட்டா இருக்கறது எப்படி? கான்பிடென்ட்டா இருக்கறது எப்படி? அப்படின்னு நீங்க கேட்டுக்கிட்டே இருந்துருக்கலாம். கான்பிடன்ட்டா இருன்னு பல பேர் உங்களுக்கு சொல்லிருக்கலாம். ஆனா யாருமே சொல்லிருக்க மாட்டாங்க. நீங்க எப்பவுமே கான்பிடென்ட்டாவே இருக்க முடியாது அப்படின்னு. நீங்க எப்பவுமே கான்ஃபிடென்ட்டால்லாம் இருக்க முடியாது. பல நேரத்துல உங்களுக்கு கான்பிடன்ஸ்ன்றது போகும். நான் நிறைய ஸ்டேஜ் ஸ்பீக்கிங் பண்ணி இருக்கிறேன். ஆனா நிறைய நேரத்துல ஸ்டேஜ்ல ஏறுனா என் கை
நடுங்கும். ரொம்ப முக்கியமா எல்லா ஸ்பீச்லயுமே நான் ஏறுன உடனே என் கையில மைக் பிடிச்சா நடுங்கதான் செய்யும். மேபி ஒரு 10 நிமிஷத்துக்கு நடுங்கும். அதுக்கப்புறம் போயிடும். அந்த 10 நிமிஷத்துல நீங்க என்ன பண்றீங்கன்றத பொறுத்துதான் உங்களுக்கு கான்பிடன்ட் அப்படின்றதே வரும். இந்த உலகத்துல பா்கறதுக்கு ரொம்ப கான்பிடெண்டா இருக்காருன்னு நீங்க சொல்ற எல்லாருமே எப்பவுமே கான்பிடெண்டா இருக்கக்கூடிய நபர்கள் கிடையாது. உங்களை மாதிரி அவங்களுக்கும் ஒரு பயம் நெர்வஸ்னஸ்ன்றது வரும். அப்ப கான்பிடெண்டா இருக்கறது எப்படி? முதல்ல கான்பிடெண்டா இருக்கற மாதிரி காட்டிக்கோங்க. அதாவது நிமிர்ந்து நில்லுங்க. உட்காரும்போது நிமிர்ந்து உட்காருங்க. ஷோல்டர பிராடா வச்சுக்கோங்க. ஐ காண்டாக்ட் பண்ணுங்க. ஸ்மைல் பண்ணுங்க. இதெல்லாம் பண்ணீங்கன்னா கான்பிடென்ட்டா இருக்கற மாதிரி நடிக்கிறது அர்த்தமே கிடையாது. இதெல்லாம் பண்ணும்போது இந்த பாடி லாங்குவேஜ்னால உங்களுக்கு கான்பிடன்ஸ்ன்றது தானா வரும். நல்லா நீட்டா டிரஸ் பண்ணிட்டு இப்ப சொன்ன மாதிரி
பாடி லாங்குவேஜ் நல்லா வச்சுக்கிட்டு பாருங்க. கான்பிடன்ஸ்ன்றது கொஞ்சம் கொஞ்சமா வரும். அதுக்கப்புறம் திரும்ப அது போயிடும். திரும்பவும் அதை வர வச்சுக்கலாம். கான்பிடன்ஸ்ன்றது வந்து வந்து போற விஷயம். அது எப்பவுமே எல்லாருக்கும் இருக்காது. இந்த உலகத்துல இவர் ரொம்ப கான்ஃபிடென்ட்டான மனிதர்ன்னு ஒருத்தர் கிடையவே கிடையாது. அவர் அப்பப்ப அதை வர வச்சு பாரு அப்பப்ப அவருக்கும் போகும். சந்தோஷமா இருக்கறது எப்படி? சிரிச்சுக்கிட்டே இருக்கறது எப்படி? இதுக்கெல்லாம் எத்தனை பேர் அட்வைஸ் பண்ணிருக்காங்க? யாராவது உங்களுக்கு அழறது தப்பே கிடையாது. நீ சோகமா இருக்கறது பிரச்சனையே கிடையாது. உனக்கு அழுக வந்தா உடாந்தாலு சோகமா இருக்கியா? சரி சோகமா இரு அப்படின்னு அட்வைஸ் பண்ணிருக்காங்களா? இது ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமான அட்வைஸ். நமக்கு அழுக வருது அப்படின்றதுனால நம்ம வீக் கிடையாது. சோகமா இருக்கோம் அப்படின்றதுனால நமக்கு சந்தோஷமே கிடைக்காம போயிடாது. எப்பயாவது சோகம்ன்றது வரதான்
செய்யும். அப்பப்ப அழுக வரதான் செய்யும். இப்படி இருக்கறதுனால வாழ்க்கையே ரொம்ப மோசமானதா இருக்கு நமக்கு நம்மளோட வாழ்க்கையே ரொம்ப மோசம் நம்ம வாழ்க்கையிலே சந்தோஷம் கிடையாது நமக்கு மகிழ்ச்சியே கிடையாது. ரொம்ப மோசமான வாழ்க்கை எனக்கு கிடைச்சிருச்சுன்ற ஒரு இமேஜ் வளர்த்துக்காதீங்க. நீங்க ஒரு மாசம் கூட அழுதுகிட்டே இருக்கலாம். அதற்காகலாம் உங்க வாழ்க்கைன்றது ரொம்ப ரொம்ப மோசமானதுன்றது கிடையாது. எல்லாருக்குமே வாழ்க்கையில இப்படிப்பட்டஃபேஸ்ன்றது வரும். எல்லாருமே அவங்களுக்கு பிடிச்சவங்களை இழப்பாங்க. எல்லாரோட வாழ்க்கையிலயும் துக்கம், சோகம் எல்லாம் வரும். இது வந்தாலும் இன்னும் கொஞ்சம் நல்ல போகும். திரும்ப சந்தோஷம்ன்றது வரும் அப்படின்றதுதான் உண்மை. எனக்கு அழுக வருது சோகமா இருக்குன்றதுனாலல்லாம் உங்க வாழ்க்கை மோசமானது கிடையாது. நீங்க ஏதோ ஒரு எக்ஸாம்ல ஃபெயில் ஆயிட்டீங்க ரொம்ப மனசு வருத்தமா இருக்கு அப்படின்றதுக்காகல்லாம் உங்க வாழ்க்கை முடிஞ்சு போயிடுச்சுன்றது கிடையவே கிடையாது. இந்த வாழ்க்கைன்றது ஏதோ ஒரு நிகழ்வால
ஏதோ ஒரு துக்கத்தினால ஏதோ ஒரு சோகத்தினால முடிஞ்சு போறதே கிடையாது. அந்த நேரத்துல அத நம்ம நமக்கு கிடைக்க கூடாது இந்த துக்கம் நமக்கு வரக்கூடாது அப்படின்னு நினைக்கிறதுனாலதான் வாழ்க்கை முடிஞ்சிருச்சுன்னு நினைக்கிறோம். அப்படி கிடையவே கிடையாது. எக்ஸாம்ல ஃபெயில் ஆகுங்க. உங்களோட லவ் பிரேக்அப் ஆகட்டும். உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்க இறந்து கூட போகட்டும். இதனாலெல்லாம் உங்க வாழ்க்கையே மோசமானதுன்றது கிடையாது. இது எல்லாமே ரொம்ப தூக்கமான விஷயம். ரொம்ப சோகமான விஷயம். அதுக்கு நீங்க என்ன பண்ணனும் தெரியுமா? உட்கார்ந்து அழுங்க. சோகமா இருங்க. அதற்கப்புறம் இருக்கக்கூடிய நண்பர்களோட நேரத்தை செலவளிச்சு வாழ்க்கையை திரும்ப சந்தோஷமாக்குங்க. ஒரு வாழ்க்கைன்றது கிடைக்கிறது ரொம்ப ரொம்ப அறிய விஷயம். அதுல சோகம் துக்கம்ன்றது வரும். ஆனா அதுக்காகதான் வாழ்க்கைன்றது முடிஞ்சு போகல அப்படின்றத புரிஞ்சுக்கோங்க. உங்களுக்கான ஒரு நபருக்காக காத்துக்கிட்டு இருங்க. எனக்கு ஒரு துணையே இல்ல. எனக்கு இன்னும்
கல்யாணம் ஆகல. கூட இருக்கறவன்ல்லாம் கல்யாணம் ஆகி குழந்தை பொறந்துருச்சு. எனக்கு மட்டும் லவ்வே இல்லையே அப்படின்றதுக்காக எல்லாம் ஏதோ ஒரு நபரை தேர்ந்தெடுத்து அவங்களோட வாழ்க்கையை ஷேர் பண்ணிக்கணும்னு நினைக்காதீங்க. உங்க வாழ்க்கையை ரொம்ப ரொம்ப அழகாக்க போறது யார் தெரியுமா? உங்களுக்கான அந்த நபர்தான். அவங்க உங்க வாழ்க்கையில கட்டாயம் வருவாங்க. அவங்க வரட்டும் வெயிட் பண்ணுங்க. அப்படிப்பட்ட நபர் உங்களுக்கு பார்க்கும்போது தெரியும். இவர்தான் நமக்கு அப்படின்னு தெரியும். அவங்களும் சொல்லுவாங்க நீங்கதான் அவங்களுக்கு அப்படின்னு. அந்த நபர் கண்டிப்பா வருவாங்க. அவங்களுக்காக வெயிட் பண்ணுங்க. அவசரப்பட்டு கூட இருக்கறவங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆயிடுச்சுன்றதுக்காக ஒரு நபரை கல்யாணம் பண்ணாதீங்க. இந்த ஸ்கூல் டைம்லதான் இந்த மாதிரி நம்ம யோசிப்போம். பக்கத்துல இருக்கறவங்களுக்கு எல்லாம் கேர்ள்ஃிரெண்ட் பாய்ஃிரெண்ட் இருக்கே நமக்கு மட்டும் இல்லையே அப்படின்னு நம்ம சிந்திச்சுிட்டு இருப்போம். அந்த மாதிரி வாழ்க்கையில வளர்ந்த மனிதர்கள் சிந்திக்க
கூடாது. உங்களோட லைஃப் பார்ட்னர பொறுமையா நிதானமா தேர்ந்தெடுங்க. இவங்கதான் நமக்கு இவங்கதான் பர்பெக்ட்ன்னு தோணும்போது நீங்க அவங்களை தேர்ந்தெடுங்க. பர்பெக்ட் அப்படின்னு சொல்றதுனால அவங்க குறையே இல்லாதவங்க அப்படின்னு நான் சொல்லல. அவங்களோட குறை உங்களுக்கு அழகா தெரியணும். அவங்க உங்க வாழ்க்கைய பூர்த்தி பண்ணுவாங்கன்னு உங்களுக்கு தோணும். உங்களுக்கு எல்லா விதத்திலயும் சப்போர்ட் பண்ணுவாங்கன்னு உங்களுக்கு தோணும். ரொம்ப சிம்பிளா வாழ்க்கை துணை உங்களுக்கு நண்பரா தோணும். அப்படி தோன்ற ஒரு நபர் கிடைப்பாங்க. அவங்க கிடைக்கிற வரைக்கும் வெயிட் பண்ணுங்க. உங்க லைஃப்ல ரொம்ப தனிமையா இருக்கீங்க. எனக்கு லைஃப்ல என்ன பண்றதுன்னே தெரியல அப்படின்னு தோணுதுன்னா ஒரு நாய்குட்டிய எடுத்து வளங்க. கடையில போயிட்டு ஒரு நாய்குட்டியை வாங்குவீங்களோ அல்ல அதைவிட சிறப்பான முடிவா ஏதோ ஒரு நாயை அடாப்ட் பண்ணி வளர்ப்பீங்களோ எல்லாமே நல்லதுதான். ஒரு நாய்குட்டியை நீங்க வாங்கி வளர்கறீங்க அப்படின்னா அந்த
நாய்குட்டியை நீங்க பாதுகாக்க ஆரம்பிப்பீங்க. அதை ஒழுங்கா பாதுகாக்க முடிஞ்சா மட்டும் நீங்க வாங்கி வளங்க இல்லன்னா தேவை கிடையாது. அதை ஒழுங்கா பாதுகாப்பீங்க. அப்போ உங்களுக்கு யாரோ ஒரு நபர் நம்ம அக்கரை காட்டுறதுக்கு இருக்காங்க அப்படின்னு தோணும். அந்த நாய்குட்டியோட நீங்க விளையாடும் போதுல்லாம் உங்களுக்கு ஆக்சிடோசின்ற கெமிக்கல் உள்ள சுரக்கும். அது ரொம்ப ஒரு அன்பான ஒரு சூழலை உங்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கும். நம்ம மேல அன்பு செலுத்து ஏதோ ஒரு நபர் இருக்கற மாதிரியான உணர்வை கொடுக்கும். நாய்குட்டி வாங்கி வளர்த்தா உங்க லைஃப் எப்படி மாறும் அப்படின்னு வார்த்தையில என்னால சொல்ல முடியாது. உங்களுக்கு நாய்குட்டி பிடிக்கும். ஆனா இப்ப வரைக்கும் நான் அதை வாங்கி வளர்க்கல. ஏதோ ஒரு காரணத்தினால நான் தடை பண்ணிக்கிட்டே இருக்கேன் அதை அப்படின்னு தோணுனா உடனடியா அந்த நாய்குட்டியை எடுத்து வளங்க. அது தெருல இருக்கக்கூடிய ஒரு
நாய்குட்டியா இருந்தாலும் சூப்பர். இல்ல நீங்க கடையில போய்தான் வாங்குவீங்கன்னா அது உங்களோட சாய்ஸ். ஆனா ஒரு நாய்குட்டி எடுத்து அழகா பார்த்து வளர்த்து பாருங்க. அதுக்கப்புறம் இவங்க ஏன் இந்த அட்வைஸ கொடுத்தாங்கன்றத நீங்களே புரிஞ்சுப்பீங்க. இந்த உலகத்திலேயே ரொம்ப ரொம்ப முட்டாள் யார் தெரியுமா? அவனோட உடம்பை பார்த்துக்காதவன் தான். நம்ம எல்லாருமே ஒரு உயிர். இந்த உயிருக்கு ஒரே ஒரு வேலைதான் கொடுக்கப்பட்டிருக்கு. அது என்ன தெரியுமா? உயிரோட இருன்னு. உயிரோட இருக்கறதுக்கான வேலையை செய்யாம இந்த உடம்பையே அழிச்சுக்கிட்டேன்னா என்ன விட பெரிய முட்டாள் கிடையவே கிடையாது. இந்த புத்தகத்துல சொல்லி இருக்கிற எல்லா அட்வைஸ்ும் நீங்க கேபீங்களோ மாட்டீங்களோ இந்த அட்வைஸை கேட்டே ஆகணும். அது என்ன? உங்களோட ஆரோக்கியத்தை நீங்க பாத்துக்கணும். நல்ல சாப்பாட சாப்பிடுங்க. நல்ல நேரத்துக்கு தூங்குங்க. நல்ல தண்ணி குடிங்க. நல்ல எக்சர்சைஸ் பண்ணுங்க. உங்களோட ஆரோக்கியத்தை பார்த்துக்காம
நீங்க எதை செஞ்சாலும் நீங்க ஒரு முட்டாள்தான். உங்களோட ஆரோக்கியம்தான் முதல் பொறுப்பா இருக்கணும் உங்களுக்கு. அதுக்கப்புறம்தான் எல்லாமே. அதை விட்டுட்டு நீங்க எதை செஞ்சாலும் உங்களை திரும்பவும் நான் சொல்றேன் நீங்க ஒரு முட்டாள். ரொம்ப ஹார்ஷா நான் பேசுறேன்னு எனக்கு தெரியும். ஆனா அதுதான் உண்மை. உங்க ஆரோக்கியத்தை நீங்க பார்த்துக்காம இருக்கீங்க அப்படின்னா உங்க மீது அன்பு வைத்திருக்கக்கூடிய அனைத்து மனிதர்களையும் உதாசன படுத்துறீங்கன்னு அர்த்தம். ஆரோக்கியத்துல ஒரு பிரச்சனை வர வரைக்கும் இந்த உலகத்துல இருக்குற எல்லாமே உங்களுக்கு தேவை அப்படின்னு தோணும். ஆரோக்கியத்துல ஒரு பிரச்சனை வந்தாதான் தெரியும். நமக்கு ஆரோக்கியம் மட்டும்தான் தேவை அப்படின்னு. தயவு செஞ்சு ஆரோக்கியத்துல பிரச்சனை வந்துதான் இதை புரிஞ்சுக்கணும்னு நினைக்காம நல்லா இருக்கும்போதே புரிஞ்சுக்கிட்டு அதை ரொம்ப மதிச்சு பார்த்துக்கோங்க. நீங்க கட்டாயம் கத்துக்க வேண்டிய ஒரு ஸ்கில் இருக்கு. எவ்வளவோ ஸ்கில் இருக்கு. ஒரே ஒரு
ஸ்கில்லை கட்டாயம் கத்துக்கோங்க. அது என்ன தெரியுமா? நிதானமா காது கொடுத்து கேக்குறாரு. ஒரு நபர் பேசுறாரு அப்படின்னா அவர்கிட்ட அடுத்து நம்ம என்ன பதில் சொல்லலாம் அடுத்து என்ன கேள்வி கேட்கலாம் அப்படின்ற எண்ணத்தோட கேட்காம தயவு செஞ்சு அவர் என்ன சொல்றாரு அப்படின்ற ஒரு ஆர்வத்தோட காது கொடுத்து கேட்டு பாருங்க. சில சமயம் ஒரு நபர் பேசுறத என்னால ஆர்வமா கேட்க முடியல அப்படின்னு உங்களுக்கு தோணுதுன்னா சரி இதற்கப்புறம் அந்த மனிதர்ட்ட பேசாதீங்க. உங்க வாழ்க்கையில யார் கூட ஆர்வமா காது கொடுத்து உங்களால கேட்க முடியுமோ அவங்க கூட உறவை வளர்த்துக்கோங்க. அவங்கதான் உங்களுக்கான மனிதர்கள். அந்த மாதிரி மனிதர்களை சுத்தி வளர்த்துக்கணும் நீங்க. இங்க நான் சொல்ல வரது அதற்காக யாரு பேசுறதெல்லாம் உங்களுக்கு வந்து கொஞ்சம் அட்வைஸ் மாதிரி இருக்கோ அவங்கிட்ட இருந்து ஓடி போங்கன்னு நான் சொல்லல. எல்லாரையும் மதிச்சு
காது கொடுத்து கேட்கணும்ன்றதுக்காகதான் இப்படிப்பட்ட உவமையை கொடுத்தேன். உங்க லைஃப்ல யாரு பேசினாலும் காது கொடுத்து நிதானமா கேட்டு பாருங்க. அவங்களுக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும். உங்களுக்கும் அடுத்தவங்க மேல ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமா வர ஆரம்பிக்கும். இப்பவே உங்க போன்லயோ, லேப்டாப்லயோ, டேப்லயோ இல்ல ஒரு நோட்லயோ வெல் டன் போல்டர் அப்படின்னு ஒன்னுத்த ஆரம்பிங்க. அது என்ன தெரியுமா? உங்களை யாராவது பாராட்டினா நீங்க செஞ்சதுல ஒரு அடுத்தவங்களுக்கு நன்மை ஏற்பட்டிருக்கு அப்படின்ற ஒரு விஷயத்தை நீங்க பார்த்தா அதை அந்த போல்டர்்குள்ள போட்டு வைங்க. இப்படி எல்லா விஷயத்தையும் நீங்க சேகரிங்க. எப்பல்லாம் லைஃப்ல நம்ம துவண்டு போறோம் அப்படின்னு உங்களுக்கு தோணுதோ உடனடியா அதை ஓபன் பண்ணி பாருங்க. நம்ம வாழ்க்கையில பல விஷயங்களை நம்ம ஏற்கனவே சாதிச்சிருக்கோம் அப்படின்றத பார்க்கும்போது நம்ம அவ்வளவு மோசமான ஆள இல்ல போல அப்படின்ற ஒரு உணர்வு
கிடைக்கும். நம்ம மதிக்கப்பட வேண்டிய ஒரு நபர் அப்படின்ற உணர்வு கிடைக்கும். அந்த உணர்வு விளைமதி பற்றது. எனக்கு லைஃப்ல எப்பயாவது கொஞ்சம் டவுனா தோணும்னா நான் உடனடியா இப்பல்லாம் என்ன பண்றது தெரியுமா? என்னோட வீடியோ ஏதாவது ஒன்னத்த ஓபன் பண்ணி அதுல என்ன கமெண்ட்ஸ் வந்துருக்குன்னு பாப்பேன். அவ்வளவு நல்ல கமெண்ட்ஸ் வரும்போது என்னோட மூடுன்றது ஆட்டோமேட்டிக்கா பூஸ்ட் ஆகும். இந்த YouTube சேனல்ல நிறைய கமெண்ட் வரதுக்கு முன்னாடில இருந்து இத நான் ஃபாலோ பண்ணிட்டு இருந்தேன். நான் கான்ட் ஹர்ட் மீ அப்படின்ற ஒரு புத்தகத்தை பத்தி பேசும்போது சொல்லிருப்பேன். குக்கி ஜார் மெத்தட்ன்னு. என் போல்டர்ல என் போன்ல எப்பவுமே குக்கி ஜார்ன்ற ஒரு போல்டர் அப்பல்லாம் இருக்கும். யாரெல்லாம் என்ன பாராட்டுனாலும் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை நான் செஞ்சிருக்கேன் அப்படின்னு எனக்கு தோணனாலும் அததெல்லாம் ஒரு ரெக்கார்டா அந்த போல்டர்ல போட்டு
வைப்பேன். எப்பல்லாம் டவுனா இருக்கோ ஓபன் பண்ணி பாப்பேன். மூட் கண்டிப்பா ஷிப்ட் ஆகும். ஒரு மோட்டிவேஷன் கிடைக்கும். யாராலயும் பேசி உங்களை மோட்டிவேட் பண்ண முடியாத அளவுக்கு அந்த போல்டர் உங்களை மோட்டிவேட் பண்ணும். நான் உங்கள என்ன வேணா பேசி மோட்டிவேட் பண்ண ட்ரை பண்ணலாம். ஆனா உங்க வாழ்க்கையில நீங்க செஞ்ச நல்ல விஷயத்தை நீங்களே திரும்பி பார்க்கறப்ப கிடைக்கிற மோட்டிவேஷன் மாதிரி வெளிய எங்கயுமே கிடைக்காது. இப்படி ஒரு போல்டர் இல்லன்னா உடனடியா ஸ்டார்ட் பண்ணுங்க. குக்கி ஜார்ன நேம் வச்சாலும் ஓகே. வெல்டன் போல்டர் அப்படின்னு வச்சாலும் ஓகே. உங்களை சுத்தி ஒரு டிராமா நடக்குது ஒரு காசிப் நடக்குது புறம் பேசிக்கிட்டு இருக்காங்க. கதை அடிச்சிட்டு இருக்காங்கன்னு வைங்களேன் அங்க தயவு செஞ்சு பார்டிசிபேட் பண்ணாதீங்க. இல்லாத ஒரு நபரை பத்தி நம்ம கூட இல்லாத ஒரு நபரை பத்தி எல்லாரும் பேசுறாங்கன்னு
வைங்களேன். அங்க பார்டிசிபேஷன குறைச்சுக்கோங்க. அங்க அதிகமா நீங்களும் பேசாதீங்க. முடிஞ்சா அந்த இடத்துல டாபிக்க டைவர்ட் பண்ண பாருங்க. வேற ஏதாவது ஒரு விஷயத்தை பேசுங்க. பாசிட்டிவ்வான விஷயத்தை பேசுங்க. இல்ல நாங்க இதைதான் பேசுவோம் அப்படின்னு சொன்னா பொறுமையா அந்த இடத்தை விட்டு வந்துருங்க இல்ல முடியவே முடியாதுன்னா அமைதியா உட்காந்துருங்க அந்த காதுல கூட வாங்காதீங்க எப்பவுமே அடுத்தவங்களை பத்தி புறம் பேசுறது ஒரு டிராமா பண்றது இந்த மாதிரி விஷயத்துல ஈடுபடவே படாதீங்க அது உங்களை கண்டிப்பா தனித்து காட்டும். இது எல்லாத்தை விட ரொம்ப முக்கியமா உங்க மேலயே உங்களுக்கு ஒரு செல்ப் ரெஸ்பெக்ட்ன்றது வர ஆரம்பிக்கும். இந்த ஆத்தர் ஒரு பெரிய பப்ளிக் ஸ்பீக்கர். இவர் ஒரு அட்வைஸ் சொல்றாரு. உங்க ஆடியன்ஸ் யாருன்னு எப்பவுமே நீங்க தெரிஞ்சுக்கணுமா. ஒரு கம்யூனிகேஷன் அப்படின்னு ஒன்னு நடந்துன்னா உங்க ஆடியன்ஸ் யாருன்றத தெரிஞ்சுக்கணும். அத
தெரிஞ்சுக்கிட்டாதான் உங்களால சிறப்பா ஒரு கம்யூனிகேட் பண்ண முடியும். என்னோட வீடியோ எல்லாம் ரொம்ப டீடைல்டா ரொம்ப லென்ியா இருக்குன்னு உங்களுக்கு தோணும். இது சில பேருக்கு போரடிக்கும். ஆனா சில பேருக்கு இது ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஏன்னா நான் எந்த ஆடியன்ஸ்க்கு பேசுறேன்றது எனக்கு தெரியும். எனக்கு இதே வீடியோவை காமெடியா கொஞ்சம் ஹியூமரா கொஞ்சம் வந்து நக்கலா பேச முடியுமானா பேச முடியும். ஆனா என்னோட ஆடியன்ஸ் அந்த ஆடியன்ஸ் கிடையாது ஆரம்பத்துல. ஆரம்பத்துல என்னோட வீடியோ ஒவ்வொரு சனிக்கிழமை 5:00 மணிக்கு வரும். அப்ப என் வீடியோவ பாக்குறதுக்கு ஆளே கிடையாது. என் வீடியோவ லைவ்ல போட்டுட்டு நான் எங்க அப்பா அம்மாட்ட மட்டும்தான் காட்டுவேன். அவங்க முதல் முதல்ல பார்த்துட்டு எனக்கு சொன்னஃபீட்பேக் என்னன்னா எங்க அப்பா எனக்கு சொன்னஃபீட்பேக். நீ இந்த வீடியோல பேசுனத வச்சு நான் ஒரு விஷயம் தெரிஞ்சுக்கிட்டேன். உனக்கு
என்னமோ தெரிஞ்சிருக்குன்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன் அப்படின்னு சொல்லிட்டு போனாரு. அதாவது நான் எதுவுமே அவருக்கு புரிய வைக்கல. எனக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு போல இருக்கு அப்படின்ற அளவுக்கு மட்டும்தான் அவருக்கு அந்த வீடியோ புரிஞ்சது. ஏன்னா நிறைய வார்த்தைகளை சொல்றேன். ஒரு பிரைன் ரிலேட்டட் வார்த்தை சயின்ஸ் ரிலேட்டட் வார்த்தை சொல்றேன் அது என்னன்ற எக்ஸ்பிளனேஷன கொடுக்கல அது ஆங்கிலத்துல இருக்கு இப்படி நான் நிறைய பேசிிட்டே இருக்கும்போது யாருக்கும் புரியல அதாவது முக்கியமா என் வீடியோவ பார்த்த எங்க அப்பா அம்மா அவங்களோட நண்பர்களுக்கு புரியல அதற்க அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமா என் வீடியோவை கொஞ்சம் லென்த் இன்கிரீஸ் பண்ண ஆரம்பிச்சேன் ஏதாவது ஒரு ஜார்கன்ட் ஒரு புரியாத ஆங்கில வார்த்தையை சொன்னா அதோட அர்த்தம் என்னன்னு சேர்த்து சொல்ல ஆரம்பிச்சேன் முடிஞ்ச அளவுக்கு ஆங்கில வார்த்தைகளை தவிர்க்க ஆரம்பிச்சேன் என்னோட வீடியோ முழுக்க நிறைய தமிழ் வார்த்தைகளை சேர்க்க
ஆரம்பிச்சேன் அப்ப எனக்கு இவ்வளவு தமிழ் கூட கூட தெரியாது. ஏதாவது ஒரு ஆங்கில வார்த்தை என் வாயில இருந்து வருதுன்னா அங்கேயே வீடியோவை பாஸ் பண்ணிட்டு மொபைல் எடுத்து டிக்ஷனரில இந்த வார்த்தைக்கு நிகரான தமிழ் வார்த்தை என்னன்றத பார்க்க ஆரம்பிச்சேன். இன்னைக்கு என்னோட வீடியோன்றது அதனாலதான் இப்படிப்பட்ட ஒருஃபார்ம எடுத்துக்கிச்சு. என் ஆடியன்ஸ் யாருன்றது தெரியாம நான் பேசிட்டு இருந்தேன்னா ஒவ்வொரு வீடியோலயும் ஒவ்வொரு மாதிரி பேசி இருப்பேன். இந்த ஆத்தரும் அதே விஷயத்தைதான் சொல்லி தராரு. ஒரு மெயில் எழுதுறீங்க ஏதோ ஒரு பப்ளிக் ஸ்பீச் கொடுக்குறீங்க ஸ்டேஜ்ல பேசுறீங்க இப்படி YouTubeல பேசுறீங்க அப்படின்னா உங்க ஆடியன்ஸ் யாருன்னு தெரிஞ்சுக்கோங்க. அவங்களுக்கு ஏத்தா மாதிரி மட்டும் பேசுங்க. இப்ப ட்ரெண்ட்ல இப்படி இருக்கு எனக்கு இப்படி பேசுறவங்கள தான் பிடிக்கும் அப்படின்றதுக்காகல்லாம் நீங்க பேசக்கூடாது. ஆடியன்ஸ்க்கு எப்படி புரியும் எப்படி பிடிக்கும் அப்படின்னு யோசிச்சு பேசுங்க.
அடுத்தவங்கள்ட்ட ஏதோ ஒரு விஷயம் பேசுறீங்கன்னா முதல்ல சுருக்கமா பேசிடுங்க. அதற்கப்புறம் அவர் ஆர்வத்தோட கேள்வி கேட்டா மட்டும் விளக்கத்தை கொடுங்க. நம்ம பொதுவா ஒரு நபர் நம்மிட்ட ஏதாவது ஒன்னு கேட்டா விளக்கமா பேசணும்னு ஆசைப்பட்டு அப்படி பேச ஆரம்பிச்சறோம். அப்படி பேசும்போது இவன் தொண தொணுன்னு பேசுவான் போல இருக்கு அப்படின்னுதான் அவங்க நினைக்கிறாங்களே தவிர நமக்கு தெரிஞ்ச அந்த கருத்தை அவங்க கவனிக்கிறதே கிடையாது. அடுத்தவங்கிட்ட பேசுறீங்களா ஒரு கேள்வி கேக்குறாங்களா சுருக்கமா ஒரு வரியில ரெண்டு வரியில பதில தெளிவா சொல்லுங்க பிளப் மெத்தட் அப்படின்னு சொல்லுவாங்க பாட்டம் லைன் அப் பிரண்ட் அப்படின்னு சொல்லுவாங்க எது ரொம்ப ரொம்ப முக்கியமான வரியோ அதை முதல்லயே சொல்லிடுங்க அதுக்கு மேல உங்களுக்கு ஆர்வம் இருந்தா சப்போர்டிங் எக்ஸ்பிளனேஷன நீங்க கொடுங்க யார் என்ன கேள்வி கேட்டாலும் சுருக்கமா பதில் சொல்லணும்னு நினைங்க நீங்க விளக்கமா சொல்லணுமா
வேணாமான்றத அவங்க முடிவெடுக்கட்டும் நம்ம முடிவெடுக்க கூடாது. இப்படி இருந்தாதான் நீங்க சொன்ன பதிலுக்கும், உங்களோட பேச்சுக்கும் உங்களுக்குமே மரியாதைன்றது கிடைக்கும். எப்பவுமே ஒரு சத்தியம் பண்ணி கொடுக்கறீங்கன்னா, அதை சின்னதாவே பண்ணி கொடுத்துருங்க. ஆனா அதை நிறைவேத்தும் போது பெருசா நிறைவேத்துங்க. எப்பவுமே பெரிய சத்தியத்தை பண்ணிட்டு அதை நிறைவேத்த முடியாம போனுதுன்னா, அங்க நீங்க தோத்து போனதாதான் இந்த உலகம் பார்க்கும். நீங்க ஒரு 100 ரூபாய்க்கான சத்தியத்தை பண்ணிட்டு 80பாய சாதிச்சு கொடுத்திருந்தா கூட நீங்க தோத்து போயிட்டீங்க அப்படின்னு சொல்லுவாங்க. ஆனா நீங்க 20 ரூபாய்க்கான சத்தியத்தை பண்ணிட்டு 50 சம்பாதிச்சு கொடுத்துருந்தீங்கன்னா நீங்க பெரிய வெற்றியாளன் அப்படின்னுதான் இந்த உலகம் சொல்லும். நீங்க இங்க எவ்வளவு செஞ்சீங்க அப்படின்றத தாண்டி உங்கள்ட்ட எவ்வளவு எதிர்பார்க்கப்பட்டது அப்படின்றத வச்சுதான் நீங்க செஞ்ச சாதனையோட மதிப்பை அளவிடவே செய்றாங்க. அதனால எப்பவுமே எதிர்பார்ப்பை சின்னதாவே வச்சுக்கோங்க. எதிர்பார்ப்பை
பெருசாக்குனீங்கன்னா அது எப்பவுமே உங்களுக்கு ஆபத்துதான். ஏதோ ஒரு நபர் கிட்ட ஏதோ ஒரு வேலையை செஞ்சு தரேன்னு சொல்லிட்டீங்க. எப்ப முடியும்னு கேட்டாங்கன்னா ஒரு வாரம் ஆகும்னு சொல்லுங்க. அதுக்கப்புறம் அத நாலு நாள்ல முடிங்க. நாலு நாள்ல முடிச்சடுறேன்னு சொல்லி அஞ்சு நாள் ஆனா கூட அப்ப நீங்க தோத்து போனதாதான் இந்த உலகம் பார்க்கும். என்னைக்குமே மறக்கக்கூடாத ஒரு பாலம் இருக்கு. அடுத்தவங்கள நான் மாத்திருவேன் அப்படின்னு நீங்க நினைக்கவே கூடாது. அடுத்தவங்களை உங்களால மாத்தவே முடியாது. ஒரு நபர் தப்பு பண்ணிக்கிட்டே இருக்காரு. ஒரு நபர் இப்படி நடந்துகிட்டே இருக்காரு. அவர் அப்படி நடந்துகிட்டாதான் சரி அவரை நான் மாத்தி காட்டுறேன் அப்படின்னு நீங்க நினைச்சீங்கன்னா அது உங்களால முடியவே முடியாது. ஏன்னா உங்களையும் மாத்திடுவேன் அப்படின்னு சொல்லக்கூடிய 1000 பேர் இருக்காங்க. உண்மையா யோசிச்சு பாருங்க. உங்கள ஒரு நபர் மாத்தணுமா? நீங்க அவ்வளவு
தப்பு பண்ணிட்டு இருக்கீங்களா? இல்லன்னு தோணுதுல்ல. ஆனா அந்த நபர்ட்ட போய் கேட்டு பாருங்க நீங்க எவ்வளவு தப்பு பண்ணிட்டு இருக்கீங்க? அதை எப்படி மாத்திக்கணும்னு அவர் சொல்லுவாரு. அதேபோலதான் நீங்க இன்னொரு நபரை நான் மாத்திடுறேன் அப்படின்னு நினைச்சுிட்டு இருக்கீங்க. ஆனா அவரு மாற தயாரா இருக்க மாட்டார். ஒரு நபர் மாறணும்னா அவரு நான் மாறணும்னு நினைக்கணும். நான் தப்பு பண்ணிட்டு இருக்கேன்னு உணரணும். நீங்க அதை உணர்த்தலாமே தவிர அவரை மாத்தவே முடியாது. எப்படி உணர்த்த முடியும்? அவர் பண்ற தப்பை சுட்டிக்காட்டி சொல்லில்லாம் கிடையாது. அவர் எப்படி இருக்கணும்னு நீங்க நினைக்கிறீங்களோ அப்படி இருந்து காட்டுனீங்கன்னா மேபி அவரு அப்படி மாறணும்னு நினைக்கலாம். அதை தவிர வேற எதுவும் பண்ண முடியாது. அடுத்த நபரை நான் மாத்திடுவேன். அவருக்கு நான் அட்வைஸ் பண்ணி மாத்திடுவேன். அவரை நான் சரி செஞ்சிருவேன் அப்படின்னு நினைக்கவே நினைக்காதீங்க. ஒன்னு
அந்த நபரை ஏத்துக்கோங்க. எப்படி இருக்காங்களோ அப்படியே இல்ல அவரிிட்ட இருந்து விலகிடுங்க. அவரை மாத்திருவேன் மாத்தி அவர என் கூட வச்சிப்பேன் அப்படின்னு நினைச்சீங்கன்னா அது நடக்க போறதே கிடையாது. வாழ்க்கையில என்னைக்குமே ஏதாவது ஒரு விஷயத்தின் மீது நம்பிக்கை வச்சுக்கிட்டே இருங்க. உதாரணத்துக்கு மக்கள் எல்லாம் நல்லவங்க அப்படின்னு நம்புங்க. மக்கள் மோசமானவங்கன்றதுக்கான ஆதாரம் திரும்ப திரும்ப உங்களுக்கு மீடியால இருந்து கிடைச்சுக்கிட்டே இருந்தாலும் நீங்க மக்கள் எல்லாம் நல்லவங்க அப்படின்னு நம்புங்க. ஏதாவது ஒரு விஷயம் தப்பு அப்படின்னு மீடியா உங்களுக்கு காட்டுனதுன்னா இல்ல இல்ல அது நல்லாதான் இருக்கும் அப்படின்னு நீங்க நம்புங்க. இப்படி நம்புறது எதுக்காக? உங்க வாழ்க்கையில உங்களுக்கான ஸ்ட்ரெஸ்ஸ நீங்க குறைச்சுக்க முடியும். ரெண்டாவது வெளி உலகத்துல நல்ல மனிதர்களை நீங்க உதாசீனப்படுத்தாம இருக்கறதுக்கு இது உதவும். மனிதர்கள் எல்லாரும் நல்லவங்க அப்படின்னு நம்புங்க. அது உண்மை இல்லைன்ற ஆதாரம் கிடைக்க
கிடைக்க இன்னும் ஆழமா நம்புங்க. உங்களை சுத்தி நிறைய நல்ல மனிதர்கள் உண்மையாவே இருப்பாங்க. நீங்க எங்கேயோ பார்க்கிற நியூஸ்னால அவங்களை கெட்டவங்கன்னு நீங்க நினைப்பீங்க. அந்த தவறை என்னைக்குமே செஞ்சிடாதீங்க. உங்க கூட இருக்கறவங்கல்லாம் நல்லவங்கதான். அவங்க தவறு பண்ணலாம். ஆனா நல்லவங்க அப்படின்னு நம்புங்க. ஒவ்வொரு நாளும் நீங்க சொல்ல வேண்டிய ஒரு வார்த்தை இருக்கு. அது என்ன தெரியுமா? நன்றி அப்படின்ற வார்த்தை. உங்களுக்கு நிறைய விஷயங்கள் கிடைச்சிருக்கு. அத நம்ம பார்க்க மறந்துடுறோம். அந்த விஷயத்தை ஒவ்வொரு நாளும் கவனிங்க. எனக்கு ரெண்டு கை ரெண்டு கால் இருக்கு. எனக்கு கண்ணு நல்லா தெரியுது. எனக்கு பேச முடியுது எனக்கு பசி எடுக்குது என்னால தூங்க முடியுது. இப்படிப்பட்ட விஷயங்களுக்கு ஒவ்வொரு நாளும் நன்றி சொல்லுங்க. ஏன்னா ஏதோ ஒரு விஷயம் இல்லாம போனாதான் அதோட அருமையை நான் புரிஞ்சுப்பேன் அப்படின்னு நம்ம நினைச்சுிட்டு இருக்கோம்.
அது ஒரு மனித இயல்புதான் ஆனா அதை புரிஞ்சுக்கிட்டு இருக்கும்போதே அதுக்கு நன்றி சொன்னோம்னா நம்ம வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கற மாதிரி நமக்கு தோணும். வாழ்க்கையை சந்தோஷமா ஆக்கணும்னா ஒரே ஒரு வழிதான். இருக்கறதுக்கு நன்றி உணர்வோட இருக்கிறது போறம்னு நினைக்கணும். இருக்கறது போறாது ஏதோ ஒரு விஷயம் வேணும்னு நினைச்சீங்கன்னா அது கிடைச்சாலும் இன்னும் கொஞ்சம் அதிகமா வேணும்ன்றதுதான் உங்க மனது சொல்லும். சிம்பிளான ஒரு அட்வைஸ். உங்க லைஃப்ல பார்கறவங்களோட பெயரை ஞாபகம் வச்சுக்கோங்க. அவங்கள்ிட்ட பேசும்போது பெயரை பயன்படுத்துங்க. சில சமயம் வயது முதிர்ந்தவங்கள்ட்ட பெயர் சொல்லி கூப்பிட கூடாதுன்ற நாகரீகம் நமக்கு இருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு கலாச்சாரத்தில நம்ம வளர்ந்துருக்கலாம். அங்க நம்ம அப்படி அத கடைபிடிச்சுக்கலாம் தப்பு கிடையாது. ஆனா நமக்கு நிகரான நபர்கள், நம்ம வயத ஒத்த நபர்கள், நம்மளோட நண்பர்கள் இப்பதான் புதுசா பார்த்த ஒரு நபர் அப்படின்றவங்க கூடல்லாம்
பெயர் சொல்லி கூப்பிட முடியும். உங்களோட கலாச்சாரம் அதற்கு அனுமதிக்குது அப்படின்னா அந்த இடத்துல நீங்க பெயர் சொல்லி கூப்பிடுங்க. அது தப்பே கிடையாது. அங்க பெயர் சொல்லி கூப்பிடும்போது இன்னும் குளோஸ அவர் உணர்வாரு. இன்னும் மதிக்கப்படக்கூடிய நபரா உணர்வாரு. அவரோட ஐடென்டிட்டிய அவருக்கு நீங்க கொஞ்சம் பூஸ்ட் பண்ணி கொடுப்பீங்க. அதுக்கு உங்களுக்கு நல்ல உறவை வளர்த்து கொடுக்கும். கட்டாயம் கேட்க வேண்டிய ஒரு அட்வைஸ் இருக்கு. லைப்ல எப்பவுமே அடுத்து என்ன அடுத்து என்ன அப்படின்னு ஓடிக்கிட்டே இருக்காதீங்க. அடுத்து என்னன்னு ஓடுறது முக்கியம்தான். அது நம்மளோட வளர்ச்சிய நமக்கு கொடுக்கும். ஆனா எப்பவுமே அடுத்து என்னன்னு மட்டுமே ஓடிக்கிட்டு இருந்தேன்னா நான் இதுக்கு முன்னாடி சாதிச்ச விஷயத்தையே செலப்ரேட் பண்ணாம போயிடுவேன்றதுதான் இங்க முட்டாள்தனம். நான் ஏதோ ஒரு விஷயத்துக்காக ஓடுறேன். அது இப்ப கிடைச்சிருச்சு. அடுத்து வேற ஒரு விஷயத்துக்கு உடனே ஓட ஆரம்பிச்சிட்டேன்
அப்படின்னா இவ்வளவு நேரம் ஓடுனதோட அர்த்தம்தான் என்ன? லைப்ல எப்பவுமே ஒரு விஷயத்துக்காக போறீங்களா அது கிடைச்சிருச்சா அதை முழுமையா அனுபவிங்க. அந்த ஒரு இடத்தை அபகரிச்சுக்கோங்க. அந்த நேரத்தை அபகரிச்சுக்கோங்க. அந்த இடத்துல முழுமையா உங்களோட வெற்றியை உணருங்க. சாதிச்ச மாதிரியான உணர்வை பெருங்க. சந்தோஷம் அடைங்க. செலிப்ரேட் பண்ணுங்க. அதுக்கப்புறம் அடுத்த திட்டத்துக்காக நீங்க போலாம். ஒரு வேலைக்கு அப்படின்னு நீங்க போயிட்டீங்கன்னா அங்க பேசப்படக்கூடிய வார்த்தையோ அங்க நடக்கக்கூடிய விஷயத்தையோ பர்சனலா எடுத்துக்கவே எடுத்துக்காதீங்க. இது என்ன பத்தினது அப்படின்னு நீங்க எடுத்துக்கவே எடுத்துக்காத. ஏதோ ஒரு நம்பர் மூஞ்சுக்கு நேரா கூட உங்களை திட்டலாம். உங்களோட பாஸ் உங்களை பார்த்து உதவாக்கற நீ. நீ எல்லாம் வாழவே தகுதி இல்லைன்னு கூட சொல்லிட்டு போகட்டும். அதை பர்சனலா எடுத்துக்காதீங்க ஆமா நான் ஒரு வேளை உதவாக்கரம் தான் போல இருக்கு அப்படின்னு நினைக்கவே நினைக்காதீங்க வேலையில
நடக்கக்கூடிய அனைத்து விஷயமும் பிசினஸ் அப்படின்னு பார்க்க ஆரம்பிங்க அங்க நடக்கறத பர்சனலா எடுத்துக்காதீங்க வெற்றியை எடுத்துப்பீங்க அப்படின்னா எடுத்துக்க வேணாம் ஆனா எடுத்துக்கிட்டீங்கன்னா பெரிய பிரச்சனை கிடையாது. ஆனா நெகட்டிவ்வான விஷயத்தை என்னைக்குமே பர்சனலா எடுத்துக்காதீங்க. அது ஒருஃீட்பேக்கா எடுத்து வேலையை மெறுகேத்தறதுக்காக யோசிக்கலாமே தவிர பர்சனலா எடுத்துஃபீல் பண்ணவே பண்ணாதீங்க. கண்டிப்பாஃபீல் பண்ணாதீங்க அப்படின்னு சொல்றது ஈஸி ஆனா ஃபீலிங்காதான் இருக்கும். ஆனா அட்லீஸ்ட்ஃபீல் பண்ணக்கூடாது அப்படின்ற ஒரு புரிதல வச்சுக்கோங்க. அதனால நீங்கஃபீல் பண்றதோட அளவாவது குறையும். எல்லாமே நமக்கு வேணும்னு நம்ம நினைக்கிறது தப்பு கிடையாது. ஆனா எல்லாமே எப்பவும் நமக்கு கிடைக்காதுன்றத புரிஞ்சுக்கணும். இன்னைக்கு நான் வீடியோ எடுக்கலாம் வீடியோ ஷூட் பண்ணலாம். இன்னைக்கே நான் வீடியோ கேமும் விளையாட முடியாது. வீடியோ கேம் விளையாடுறதுன்றது எனக்கு ஒரு ரெஸ்ட் கொடுக்குற விஷயம்தான். ஆனா இன்னைக்கே வீடியோ ஷூட் பண்ணனும். இன்னைக்கே நான் எடிட்
பண்ணனும். ஆனா இன்னைக்கே வீடியோ கேமும் விளையாடணும்னு நினைச்சேன்னா, இந்த ரெஸ்ட் எடுக்கணும்னு நினைச்ச செயலே என்ன ரொம்ப டயர்ட் ஆகிடும். எப்பவுமே எல்லாம் கிடைக்கும்னு நினைக்காதீங்க. ஒரு நாள் ஒன்னு கிடைக்கும் அடுத்த நாள் வேற கிடைக்கும். எல்லாமே ஒரே நாள்ல பேக் பண்ணனும்னு நினைச்சு உங்களை நீங்களே டயர்ட் ஆக்கிக்காதீங்க. அது விளையாட்டையும் சேர்த்துதான் சொல்றேன். ஏதோ ஒரு விளையாட்டா இருக்கட்டும் உங்களை ரிலாக்ஸ் பண்ற விஷயமா இருக்கட்டும். சில சமயம் அதுவே உங்களை டயர்ட் ஆக்கும். எப்பன்னா எல்லாமே எனக்கு வேணும்னு நீங்க நினைக்கிறப்போ ரொம்ப அதிகமான வேலை பலு இருக்கறப்போ உங்களை ரிலாக்ஸ் பண்ணக்கூடிய சில செயலை கூட நீங்க பண்ண முடியாம போலாம். அது தப்பு கிடையாது அதை எடுத்து ஓரமா வச்சிருங்க. அந்த ரிலாக்ஸ் பண்ணக்கூடிய செயலை செய்யணும்னு நினைச்சு உங்களுடைய டேவை ரொம்ப டயர்ட் ஆக்கிக்காதீங்க. எல்லாமே எப்பவுமே கிடைக்காது அப்படின்றது
எல்லா விஷயத்துக்கும் பொருந்தி போகும். ஒரே நேரத்துல ரெண்டு விஷயத்தை நம்மளால அடைய முடியாது. நம்ம கூட இருக்கறவங்க ஒன்னு நம்மள நேசிக்கலாம் இல்ல நம்மள சுதந்திரமா விடலாம். சில சமயம் அவங்களை நம்மள நேசிக்கும் போது அது நம்மள கட்டுப்படுத்துற மாதிரி இருக்கும். கேள்வி கேபாங்க. சாப்பிடியா ஏன் சாப்பிடல அப்படில்லாம் சொல்லுவாங்க. ஏன் இந்த நேரத்துக்கு வெளிய போற அப்படின்னு சொல்லுவாங்க. தவிர்க்க முடியாது. அப்படி அவங்க செய்யற செயலை பார்க்கும்போது அவங்க நம்மள நேசிக்கிறாங்கன்னு நமக்கு தோணும். அதே நேரத்துல அவங்க நம்மள வெளியில போ அப்படின்னு ஃப்ரீடமா விடுறாங்க. நீ சாப்பிட்டா சாப்பிடுன்னு ஃப்ரீடமா விடுறாங்கன்னா அந்த நேரத்துல பாக்குறப்போ நம்மள நேசிக்கிறியோ நம்ம என்ன பண்ணாலும் பரவாயில்லைன்னு கண்டுக்காம இருக்காங்களே அப்படின்னு நமக்கு தோணும். உங்களுக்கு இது வேணுமா அது வேணுமான்னு தேர்ந்தெடுங்க. ரெண்டுமே வேணும்னு தேர்ந்தெடுத்தீங்கன்னா எதுவுமே கிடைக்காது. எப்பவுமே இல்லாத விஷயத்தை
பத்தி சிந்திப்பீங்க. உங்களை நேசிச்சாங்கன்னா ஃப்ரீடம் இல்லையேன்னு வருத்தப்படுவீங்க. ஃப்ரீடமா இருக்கு அப்படின்னா நேசிக்கலையேன்னு வருத்தப்படுவீங்க. ஏதாவது ஒன்னுதான் கிடைக்கும் அப்படின்றத புரிஞ்சுக்கோங்க. லைப்ல எப்பவுமே ஒன்னு கிடைக்கும் ஒன்னு கிடைக்காது. கிடைச்ச விஷயத்தை அடைஞ்சுக்கோங்க. கிடைக்காத விஷயம் நாளைக்கு கிடைக்கும் அப்படின்றத மறந்துடாதீங்க. இதுக்கப்புறம் இந்த வீடியோல ரொம்ப சிம்பிளான சில அட்வைஸ்லாம் வருது. ஒன்னு என்ன தெரியுமா? உங்களுக்கு நல்லா ஹேர் கட் பண்ணி விடக்கூடிய சலூனை கண்டுபிடிச்சிருங்க. நம்ம நிறைய சலூனுக்கு போவோம். ஏதாவது ஒரு சலூன்தான் நமக்கு அமையும். எல்லாராலயும் நம்ம முடிய கரெக்டா வெட்ட முடியாது. சில பேர்தான் கரெக்டா வெட்டுவாங்க. நம்ம ஒன்னும் அவ்வளவு ஸ்டைலிஷான ஒரு ஆளல்லாம் இருக்க மாட்டோம். ஆனா இந்த சின்ன ஹேர் கட்ட ஒரே ஒரு நபர் தான் கரெக்டா பண்ணுவாரு. ஊர்ல பெரிய பெரிய ஒரு சலூன்லாம் இருக்கும். 500 600 கொடுத்து ஒரு மென்க்கான
ஹேர் கட் பண்ற சலூன் இருக்கும். ஆனா ₹100 கொடுத்து வெட்டற ஒருத்தவர் கரெக்டா வெட்டுவாரு. கண்டுபிடிச்சிட்டா அவரு கூட கடைசி வரைக்கும் முடிவெட்டிட்டே இருங்க. ஏன்னா ஹேர் கட் அப்படின்றது உங்களுக்கு கான்ஃபிடென்ட்ட கொடுக்கும். பெண்ணா இருந்தாலும் சரி, ஆணா இருந்தாலும் சரி. உங்களுக்கான ஹேர் கட் பண்ணக்கூடிய கரெக்டான சலூனை கண்டுபிடிச்சீங்கன்னா, எக்ஸ்பெரிமெண்ட்டே பண்ணாதீங்க. அவரு கூடயே போங்க. எப்பவுமே உங்களோட கையில ஒரு பெண்ணை வச்சுக்கோங்க. வெளியில எங்கயாவது போறீங்கன்னா ஒரு பெண்ணோடயே போங்க. பெண் எடுத்துட்டு போறது அவ்வளவு கஷ்டமான விஷயம் கிடையாது. அதனால எப்பல்லாம் நீங்க ஒரு பர்ஸ எப்படி எடுத்துட்டு போறீங்களோ வெளிய போனாலே அதே மாதிரி ஒரு பெண் எடுத்துட்டு போங்க. எப்ப தேவைப்படும் அப்படின்றது உங்களுக்கு தெரியாது. அதனால அதை கூடியே வச்சுக்கோங்க. ஏன்னா எப்ப ஒரு நபர்ட்ட போயிட்டு கொஞ்சம் பெண் இருக்குமா அப்படின்னு கே்கறோமோ அப்ப நம்ம
ஒரு பிரிப்பேர்ட்னஸ்ே இல்லாத பீப்பிள் மாதிரி தெரியும். நம்ம போனது என்னமோ சினிமாக்காக இருக்கும். ஆனா சினிமா பார்த்துட்டு அப்படியே வீட்டுக்கு வந்துருவோமா? தெரியாம எங்க ஒரு இடத்துல போய் மாட்டிப்போம். அங்க நம்ம எழுத வேண்டிய சைன் பண்ண வேண்டிய ஒரு தேவை வருதுன்னு வைங்களேன். அப்ப அடுத்தவங்கள்ிட்ட போயிட்டு கொஞ்சம் பெண் இருக்குமா அப்படின்னு கேக்குறது. தேவையில்லாம நம்மளோட கான்ஃபிடென்ட்ட குறைக்கும். அதுக்கு நீங்க ஒரு பெண்ணை எப்பவுமே பாக்கெட்ல வச்சுக்கலாம். உங்களை யாராவது ஒரு நபர் பாராட்டுனாங்கன்னா எப்படி ரெஸ்பான்ஸ் பண்ணனும்ன்றத தயவு செஞ்சு கத்துக்கோங்க. யாராவது ஒரு நபர் நம்மள பாராட்டுனா அங்கதான் நம்மளோட அடக்கத்தை காட்டுறதுக்கான ஒரு இடமா நம்ம பார்ப்போம். அங்க போயிட்டு சச்ச அப்படி எல்லாம் இல்லைங்க அப்படின்னு சொல்லுவோம். அவரு நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க. ரொம்ப நல்லா சிந்திக்கிறீங்க அப்படின்னு சொன்னா சே சச்ச அப்படி எல்லாம் இல்லைங்க.
ஏதோ புக்ல இருக்கு பார்த்து சொல்லிட்டு இருக்கேன் அப்படின்னு நம்ம சொல்லவே கூடாது. இப்படி நீங்க சொன்னது ரொம்ப எனக்கு மோட்டிவேட்டிங்கா இருக்கு. ரொம்ப ரொம்ப நன்றி. நான் கடினமா உளைச்சு ஒரு விஷயத்தை பண்றத நோட் பண்ணி இருக்கீங்களே ரொம்ப தேங்க்ஸ்ன்னு சொல்லுங்க. எப்பவுமே உங்கள ஒரு நபர் பாராட்டுனா அந்த பாராட்டுக்கு உரிய நபர்தான் நம்ம அப்படின்னு நம்பி நன்றி சொல்லுங்க. எப்பவுமே அந்த பாராட்ட உதாசீன படுத்தாதீங்க. அது உங்களை நீங்களே உதாசீனப்படுத்திக்கிறதுக்கு சமம். ஒரு நபர் உங்களை ஜெனுனா வந்து பாராட்டாருன்னா அதுக்கு நன்றி சொல்லுங்க. உண்மையா அதை நீங்க ஒரு பிரைஸா எடுத்துக்கோங்க. அதைஃபீல் பண்ணுங்க அதை தலைக்கு எடுத்துட்டு போயிட்டு ஆடதான் கூடாதே தவிர அந்த இடத்திலயே நம்மள உதாசின படுத்திக்கணும்னு யாரும் சொல்லி தரல ஏதாவது ஒரு நபர் பாராட்டுனா நன்றி சொல்லுங்க சச்ச அப்படில்லாம் இல்லைன்னு சொல்லவே சொல்லாதீங்க அப்பப்ப
கையால நோட் எழுதி அடுத்தவங்களுக்கு கொடுக்குறத ஒரு பழக்கப்படுத்திக்கோங்க ஏதோ ஒரு நபருக்கு நீங்க ஒரு கிப்ட் கொடுக்குறீங்கன்னே வச்சுக்கோங்களேன் அந்த கிப்ட்ட மட்டுமே கொடுக்காதீங்க கூடவே ஒரு பேப்பர்ல உங்களால முடிஞ்சா ஒரு சின்ன லெட்டரா எழுதி கொடுத்து பாருங்களேன் நீங்க கொடுத்த கிப்ட்ட விட அந்த லெட்டர உங்களை நேசிக்க கூடிய நபர்கள் ரொம்ப நாளுக்கு வச்சுக்கிட்டு இருப்பாங்க நீங்க கொடுத்த கிப்ட்ட அவங்க பயன்படுத்துவாங்க ஆனா நீங்க கொடுத்த லெட்டர அவங்க பாதுகாப்பாங்க. எப்பவுமே நேசிக்கக்கூடிய நபருக்கு அடிக்கடி ஏதாவது எழுதுங்க. கவிதை எழுத முடியும்னா எழுதுங்க. உங்களுக்கு கவிதை வரணும்னா அவசியம் கிடையாது. நீங்க எழுதுறதுதான் கவிதை. பிடித்த நபருக்காக நீங்க ஒரு விஷயத்தை எழுதுனீங்கன்னா நீங்க எழுதுறதுதான் கவிதையை தவிர அது கவிதையா இருக்கணும்ன்ற அவசியமே கிடையாது. நீங்க ஒரு நபருக்காக அடிக்கடி ஏதாவது எழுதுங்க. தினமும் எழுதணும் அப்படின்னு நான் சொல்லல. நம்மளோட
அங்கிள்ஸ் மாதிரி தினமும் வாட்ல மெசேஜ் அனுப்பணும்னு நான் சொல்லல. நீங்க அப்ப அப்ப ஏதாவது ஒரு நோட் எழுதி அடுத்தவங்களுக்கு கொடுங்க. அதை கையால ஒரு பேப்பர்ல எழுதி கொடுத்தீங்கன்னா அவங்க அதை பத்திரமா பாதுகாப்பாங்க. என்னைக்காவது ஒரு நாள் தெரியும். இவங்க இதை பாதுகாத்து வச்சிருக்காங்கல்ல அப்படின்னு. அவ்வளவு முக்கியமான அழகான விஷயம் கையால எழுதக்கூடிய நோட்ஸ். உங்க லைஃப்ல உங்களுக்கு பிடிச்ச ஏதாவது ஒரு சாப்பாட்டை இந்த உலகத்திலேயே நீங்கதான் சிறப்பா சமைக்கணும். அதை மட்டும் எப்படியாவது கத்துக்கோங்க. எனக்கு நிறைய சாப்பாடு பிடிக்கும். எனக்கு பிடிச்ச ஒரு சாப்பாடுன்றது ஒரு காபி எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒன்னு தெரியுமா? இந்த உலகத்திலேயே எனக்கு பிடிச்ச காபிய என்ன விட சிறப்பா யாராலயும் போட முடியாது. நான் ஸ்டார்பாக்ஸ்ல போயிட்டு 500 ரூபா கூட காபி குடிச்சிருக்கேன். ஆனா நான் போடுற ஒரு சின்ன காபிய யாராலயுமே
பீட் பண்ண முடியாது. அந்த காபிய உங்களுக்கு கொடுத்தேன்னா என்னடா இவ்வளவு கேவலமா இருக்கு தண்ணி மாதிரி இருக்கே அப்படின்னு தோணலாம். ஜஸ்ட் ஒரு பால்ல காபிய போட்டு கலக்கி இருக்கேன்னு தோணலாம். என்ன வேணா தோணலாம். ஆனா எனக்கு அந்த காபி ரொம்ப பிடிக்கும். இந்த மாதிரி ஏதாவது ஒரு உணவை கண்டுபிடிங்க. உங்களுக்கான உணவு. அந்த உணவை நீங்க செஞ்சா மட்டும்தான் உங்களுக்கு ரொம்ப பிடிக்கணும். அதாவது நீங்க செஞ்சா மட்டும் தான் சாப்பிடுவீங்கன்னு நான் சொல்லல. இந்த உலகத்துல எல்லாரும் செய்றத விட நீங்க செய்யறது உங்களுக்கு ரொம்ப பிடிக்கணும் அப்படின்ற மாதிரி ஒரு உணவை பயிற்சி பண்ணி கத்துக்கோங்க. எதுக்கு அப்படின்னு கேட்டீங்கன்னா கத்துக்கோங்க. கத்துக்கறதுல என்ன தப்பு இருக்கு? இன்னொரு சிம்பிளான அட்வைஸ் சொல்றாரு. எப்படி பேக் பண்றது அப்படின்றத கத்துக்கோங்க. ஒரு ட்ரிப் போறீங்க வெளிய எங்கயாவது போறீங்கன்னா எப்படி பேக் பண்ணனும்ன்றத
கத்துக்கோங்க. துணியை சுருட்டி வச்சா உங்களுக்கு உதவியா இருக்கா? மடிச்சு வச்சா உதவியா இருக்கா? பேக் பேக்லயே எடுத்துட்டு போனா உதவியா இருக்கா? தனியா ஒரு பெட்டியில எடுத்துட்டு போனா உதவியா இருக்கா? இத ஒவ்வொரு தடவையும் நோட் பண்ணி எப்பல்லாம் ஒரு அசௌகரியங்கம் வருதோ அப்பல்லாம் அத நோட் பண்ணி அதெல்லாம் கரெக்ட் பண்ணிட்டே வாங்க. இது ரொம்ப முக்கியமான ஸ்கில் அப்படின்னு சொல்றேன். நான் என்ன ஃபாலோ பண்றேன் அப்படின்றத சொல்றேன். என்னோட போன்ல ஒரு நோட்ஸ் இருக்கும். அந்த நோட்ஸ்ல நான் இப்ப வந்து வீட்டுக்கு போறேன்னா என்னென்ன பொருள் எடுத்துட்டு போணும் அப்படின்ற லிஸ்ட் அந்த போன்ல இருக்கும். என்னைக்காவது ஒரு நாள் ஏதாவது ஒன்னத்தை மறந்துட்டேனே அப்படின்னு எனக்கு தோணும். அன்னைக்கு உடனடியா அத நான் எழுதுவேன். அந்த நோட்டுல ஆட் பண்ணி வச்சிப்பேன். என்னோட நோட்ட எடுத்து பாத்தீங்கன்னா ஒரு 60 70
ஐட்டம் இருக்கும். இது எல்லாத்தையும் நான் எடுத்துட்டு போணும். பேஸ்ட், டூத் பிரஷ், டவல், இந்த பிளாக் ஷர்ட் திடீர்னு நான் வீடியோ எடுக்குற மாதிரி ஒரு தேவை ஏற்பட்டுருச்சுன்னா என்ன பண்றது அதனால பிளாக் ஷர்ட், ஒரு நோட், புக், ஹைலைட்டர், பேஸ், மாஸ்க் இப்படி எல்லாத்தையும் அதுல எழுதி வச்சிருப்பேன். அப்ப நான் ஊருக்கு கிளம்பும்போது இது அந்த ட்ரிப்புக்கு தேவையா அப்படின்னு செலக்ட் பண்ணி பார்த்துட்டு வேணானா அத நான் விட்டுட்டு போவேன். ஆனா எந்த ஒரு பொருளை விட்டுட்டு போனாலும் தெரிஞ்சு விட்டுட்டு போவேன் மறந்து விட்டுட்டு போகமாட்டேன். இதெல்லாம் ஒரு அட்வைஸா அப்படின்னு கேட்டீங்கன்னா எஸ் இதெல்லாம் ரொம்ப ரொம்ப முக்கியமான அட்வைஸ். எப்பவுமே பிலாசபிகலா லைஃப்ல உயர்ந்து போறது என்னன்றத மட்டும் நம்ம பேசக்கூடாது. சின்ன சின்ன வாழ்க்கைக்கு நமக்கு என்ன தேவை அப்படின்றதையும் பகிர்ந்துக்கணும். இந்த புத்தகத்துல அப்படிப்பட்ட பெரிய அட்வைஸ்ும்
இருக்கு இப்படிப்பட்ட சின்ன அட்வைஸ்ும் இருக்குன்றத நான் தெரியப்படுத்தனும்ல அதுக்கு நான் அட்லீஸ்ட் ஒன்னு ரெண்டு அட்வைஸ் எனக்கு ரொம்ப புடிச்ச அட்வைஸ சொல்லணும்ல அதுக்காகதான் சொல்லிட்டு இருக்கேன். ஸ்மைல் பண்ண கத்துக்கோங்க. ஏதாவது ஒரு நம்பர புதுசா பாத்தீங்கன்னா கொஞ்சம் ஸ்மைல் பண்ணுங்க. ஏதாவது ஒரு இடத்துக்கு புதுசா போறீங்கன்னா ஸ்மைல் பண்ணனும் அப்படின்னு உங்களுக்கு நீங்களே ரிமைண்ட் பண்ணிக்கோங்க. ஒரு பாத்ரூம் போறீங்களா கண்ணாடிய பார்த்து ஸ்மைல் பண்ணுங்க. யாருமே இல்லனாலும் பரவாில்ல. இதோட பவர்ன்றது ரொம்ப ரொம்ப அதிகம். இல்ல நான் உங்களை புன்னகையான முகத்தோட அணுகும் போது நீங்க மட்டும் உருன்னு இருப்பீங்களா? அப்படி இருக்கவே முடியாது மனிதர்களால. அப்போ இந்த ஸ்மைலுக்கு எவ்வளவு பவர் இருக்கு? இதை நீங்க செய்யும்போது, உங்க சுத்தி இருக்கற எல்லாருமே அப்படிதான் உங்கள்ிட்ட நடந்துப்பாங்க. நம்ம யோசிச்சு பார்த்துருக்கோமா? நம்ம லைஃப்ல நமக்கு ரொம்ப புடிச்ச நபரா இருக்கட்டும்.
இல்ல நம்ம ரொம்ப மரியாதையோட நடத்துற ஒரு நபரா இருக்கட்டும். இல்ல நம்ம வாழ்க்கையில ஏதாவது ஒரு நபர் பார்த்துருப்போம். எல்லாருக்கும் அவர பிடிக்கும். அவங்க கண்டிப்பா அடிக்கடி ஸ்மைல் பண்ணுவாங்க. அவங்க பண்ண மத்த எல்லா செயலை விட அவங்க அடிக்கடி ஸ்மைல் பண்ணதுனாலதான் எல்லாருக்கும் அவங்களை பிடிச்சிருக்குன்னு மறந்துடாதீங்க. இது ஒரு மிகப்பெரிய சூப்பர் பவர். அடிக்கடி ஸ்மைல் பண்ணிக்கிட்டே இருங்க. எப்படி அடுத்தவங்களோட டிஸ்அக்ரீ பண்ணனும் அப்படின்றத தயவு செஞ்சு கத்துக்கோங்க. ரொம்ப ரொம்ப சிம்பிளான ஒரு ரூல்ஸ உங்களுக்கு நான் சொல்லி தரேன். எப்பவுமே ஏதோ ஒரு நபர் கிட்ட டிஸ்ரீ பண்ணீங்கன்னா எப்படி தெரியுமா பண்ணனும்? நான் நான் எனக்கு அப்படின்னே பேசணும். என்னைக்குமே நீ உன்னோட அப்படின்னு பேசிடவே கூடாது அப்படின்றத புரிஞ்சுக்கோங்க. ஒரு உதாரணத்துக்கு நீங்க எனக்கு ஒரு கருத்து சொல்றீங்க. அந்த கருத்தோட எனக்கு உடன்பாடு கிடையாது. இப்ப நான்
உடனடியா என்ன பண்ணனும்? உங்களை பத்தி பேசவே கூடாது. உங்க கருத்து ரொம்ப தப்பா இருக்குங்க. நீங்க சொல்றது சரியா இல்லைங்க அப்படின்னு நான் சொல்லவே கூடாது. சில சமயம் நீ சொல்றது முட்டாள்தனமா இருக்கு. பைத்தியக்காரத்தனமா இருக்குன்னு எல்லாம் பேசுவோம். அது ஒரு லெவல் அதுக்கு அடுத்த லெவல் என்ன தெரியுமா நீ சொல்றது எனக்கு சரியா படல நீ சொல்றது எனக்கு புரியல அப்படின்னு சொல்லுவோம். அப்படி சொல்லவே சொல்லாதீங்க. நீன்ற வார்த்தையை எடுத்துருங்க. வெறும் நான் எனக்குன்றத மட்டுமே பேசுங்க. எனக்கு இது புரியல. என்னால இதை புரிஞ்சுக்க முடியல. எனக்கு வேறு விதமான ஒரு பார்வை இருக்கு அப்படின்னே பேசுங்க. நீங்க எவ்வளவு டிஸ்அக்ரீ பண்ணாலும் அடுத்த நபர் ஒரு அபெண்டடா யோசிக்கவே மாட்டாரு. இவரு நம்மள அசிங்கப்படுத்திட்டாருன்னு யோசிக்கவே மாட்டாரு. ஆனா அதே நேரத்துல நீங்க டிஸ்அக்ரீ பண்ணதை எடுத்து வேல்யூ பண்ணி அனலைஸ்
பண்ணி பாத்துட்டு ஆமான்னு சொல்றாரா இல்லையான்னு மட்டும் பாருங்க. டிஸ்அக்ரீ பண்ணிக்கிட்டே இருக்கணும். ஆனா டிஸ்அக்ரீ பண்ணும்போது அடுத்தவங்களை வச்சு பேசாம நம்மள வச்சே பேசணும் அப்படின்னா, அந்த டிஸ்அக்ரீமெண்டக்கு அங்கதான் பவர் கிடைக்கும். இன்னொரு சிம்பிளான அட்வைஸ்ங்க. வெளிய எப்ப போனாலும் கையில கேஷ் எடுத்துட்டு போங்க. ஜிபே பண்ணிடுறேன். கார்டுல பே பண்ணிடுறேன். என்fc பண்ணிடுறேன் அப்படின்றதெல்லாம் தூக்கி போட்டுட்டு, கையில கொஞ்சமாவது கேஷோட போங்க. நீங்க ஜிபி பண்ணிடலாம்னல்லாம் போலாம். ஆனா ரோட்ல ஒரு நபர பாப்பீங்க. இவருக்கு நம்ம உதவி பண்ணலாம்னு தோணும். அந்த நேரத்துல ஜிபிவா பண்ண முடியும். கேஷ் தேவைப்படும்ல கேஷ எப்பவுமே கையில வச்சுக்கோங்க. எப்ப போனை சுவிட்ச் ஆப் பண்ணனும்ன்றது உங்களுக்கு தெரியணும். சிம்பிளா ஒன்னு சொல்லவா உங்க ஒவ்வொரு நாளும் உங்க போன் ஒரு மணி நேரமாவது சுவிட்ச் ஆப் ஆகி இருக்கணுங்க. காலையில எந்திரிச்ச உடனே ஒரு
மணி நேரம் சுவிட்ச் ஆஃப் பண்ணிக்கிறீங்களா சூப்பர். அதேபோல வாரத்துல ஒரு குறிப்பிட்டு ஒரு ஹாப் டே போன் சுவிட்ச் ஆஃப்ல தான் இருக்கணும். போனா இருக்கட்டும் டிவைசஸா இருக்கட்டும் சுவிட்ச் ஆப்ல இருக்கணும். அப்படி ஒரு நேரத்தை முடிவு பண்ணுங்க. காலையில எந்திரிச்ச உடனே ஒரு ஒரு மணி நேரத்துக்கு நான் போன தொட மாட்டேன். சுவிட்ச் ஆஃப்ல வச்சிருப்பேன் அப்படின்னு முடிவெடுங்க. சுவிட்ச் ஆப் பண்ணுங்க. எல்லார் கிட்ட இருந்தும் நான் டிஸ்கனெக்ட் ஆக போறேன். இப்போ என் கூட இல்லாத மனிதர்களை தவிர வேற யாராலையும் என்ன தொடர்பு கொள்ள முடியக்கூடாது அப்படின்ற ஒரு நேரத்தை தயவு செஞ்சு உருவாக்கிக்கோங்க. ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் வாரத்துக்கு அரை நாள் தனியா. அது சண்டே ஆஃப்டர்நூன்ல இருந்து ஒரு சாயங்காலம் வரைக்கும் கூட இருக்கட்டும். இப்படி ஒரு நேரத்தை உருவாக்கிக்கோங்க. அப்பதான் உங்களுக்கு நம்ம ஒரு
ரியல் லைஃப்ல வாழ்றோம்ன்ற உணர்வு கிடைக்கும். எப்பவுமே நம்ம அடுத்தவங்களுக்கு கனெக்டடா போன்லயே இருக்க கூடாது. நம்மளோட வாழ்க்கை போன்லயே இருந்துரக்கூடாது. எப்பயாவது ஒரு நபர் உங்களுக்கு உண்மையா அப்பாலஜைஸ் பண்றாரு. சாரி கேக்குறாருன்னு வச்சுக்கங்களேன் இட்ஸ் ஓகே அப்படின்னு சொல்லாதீங்க. ஒரே வார்த்தையில அதை முடிச்சு விடாதீங்க. ஒரே வார்த்தையில முடிச்சா அதுக்கு ரெண்டு அர்த்தம். ஒன்னு அவரு பண்ணது எனக்கு பிரச்சனையே இல்லை அப்படின்னு அர்த்தம். இல்ல ரெண்டாவது உன் மன்னிப்பை நான் ஏத்துக்கல அப்படின்னு அர்த்தம். மன்னிப்பு கே்கறாங்கன்னா அங்க மரியாதை கொடுங்க. சில சமயம் அது உங்களுக்கு பிரச்சனையே இல்லைன்னா கூட வாய் விட்டு பேசுங்க. நீ பண்ணது எனக்கு பிரச்சனையா தெரியல நீ மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை இப்படி சொல்லுங்க இட்ஸ் ஓகே அப்படின்னு சொல்லாதீங்க நோ இஸ்யூஸ் அப்படின்னு சொல்லாதீங்க அதுக்கு பதிலா நீங்க பண்ணது எனக்கு உண்மையா நான்
தப்பா எடுத்துக்கலைங்க சீரியஸா சொல்றேன் எனக்கு தப்பு கிடையாது. நீங்க மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை அப்படின்னு சொல்லுங்க. சிரிச்சுக்கிட்டே சொல்லுங்க. இல்ல உண்மையாவே அவர் பண்ணது உங்களுக்கு தப்பா இருந்ததுன்னா நீ பண்ணது எனக்கு கொஞ்சம் காயத்தோதான் கொடுத்தது. ஆனா நீ மன்னிப்பு கேட்டதுக்கு அப்புறம் எனக்கு கொஞ்சம் இப்ப ரிலாக்ஸிங்கா இருக்கு. நீ மன்னிப்பு கேட்டது உண்மையாவே எனக்கு ஹெல்ப் பண்ணுது. நீ மன்னிப்பு கேட்டதுக்கு நன்றி இப்படி சொல்லுங்க. ரெண்டே வாரத்துல நோ இஸ்யூஸ் இது இட்ஸ் ஓகே அப்படின்றத இதுக்கு அப்புறம் சொல்லாதீங்க. எல்லா மனிதனுக்கும் ரெண்டு மொழி கட்டாயம் தெரிஞ்சே இருக்கணும். தயவு செஞ்சு நம்ம எல்லாரும் அட்லீஸ்ட் ரெண்டு மொழியை கத்துக்கிட்ட ஆகணும். இந்த புத்தகத்தை எழுதினவரு ஒரு இங்கிலீஷ்காரர். அவர் இதை சொல்லணும்ன்ற தேவையானா ஆக்சுவலா கிடையாது. ஏன்னா இந்த உலகத்துல எங்க போனாலும் இங்கிலீஷ்ல தான் பேசிிட்டு இருக்காங்க.
இங்கிலீஷ்ன்றது ஒன்னு தெரிஞ்சதுன்னா, உலகத்துல எங்க வேணா போயிடலாம் அப்படின்ற ஒரு ஐடியாலஜில தான் நிறைய பேர் இருக்காங்க. ஆனா ஸ்டில் ரெண்டு மொழியோட முக்கியத்துவத்தை அவர் சொல்றார். நம்ம எல்லாருக்குமே மினிமம் ரெண்டு மொழின்றது தெரியணும். நீங்க 10 20 கூட கத்துக்கோங்க. உங்களால முடிஞ்சா தப்பே கிடையாது. ஆனா ஒரே மொழி போறம் அப்படின்னு நினைச்சுட்டு இருக்காதீங்க. ஒரு மொழி போறம்தான் இப்ப நான் தமிழ்நாட்டுக்குள்ளயே இருக்கேன்னா போரும். நான் இப்ப இன்னொரு மொழி கூடுதலா கத்துக்கறேன். இங்கிலீஷ்ன்னு வச்சுக்கோங்களேன். அத நான் கத்துக்கறதோட அர்த்தம் என்னவா இருக்கும்னு நினைக்கிறீங்க? எனக்கு தமிழோட அழகு தெரியணும்னா கூட நான் இன்னொரு மொழி கத்துக்கணும் அப்படின்ற தேவை இருக்கா இல்லையா? எனக்கு தமிழோட முக்கியத்துவம் புரியணும்னா கூட இன்னொரு மொழியை நான் பார்கணும்ன்ற தேவை இருக்கா இல்லையா? அதற்காக இன்னொரு மொழி மோசம் தமிழ் தான் பெட்டர் அப்படின்ற பார்வையை
வளர்த்துக்கறதுக்காக நான் சொல்லல. இன்னொரு மொழியை கத்துக்கும் போது தமிழ்ல இருக்கற தனித்தன்மை நமக்கு தெரியும். இது ஒரு பெனிஃபிட் தானே தவிர இதுக்காகவும் நான் சொல்லல. ரெண்டு மொழி கத்துக்கிட்டீங்கன்னா ரெண்டு விதமான மக்களை உங்களால பார்க்க முடியும். ரெண்டு விதமான கலாச்சாரத்தை புரிஞ்சுக்க முடியும். மத்த கலாச்சாரத்திலயும் நல்ல விஷயங்கள் இருக்குன்றத நம்ம தெரிஞ்சுக்க முடியும். நம்ம கலாச்சாரம் மாதிரியே அந்த கலாச்சாரத்தையும் மதிக்க ஆரம்பிப்போம். அதேபோல எல்லாரையுமே நம்ம மதிக்க ஆரம்பிப்போம். தமிழ்நாட்டில இருக்கீங்கன்னா தமிழ் ஆங்கிலம்ன்ற ரெண்டு மொழியை நான் உங்களுக்கு பரிந்துரைப்பேன். இல்ல நீங்க இன்னொரு மொழி எத வேணாலும் எடுத்துக்கலாம். ரெண்டு மொழியை நீங்க கத்துக்கோங்க அப்படின்னு இவரு சொல்றார். பணம்ன்ற விஷயத்தை தயவு செஞ்சு பணம் தானே அப்படின்னு விடாதீங்க. பணத்தை ரொம்ப மதிக்க கத்துக்கோங்க. பட்ஜெட் போட்டு செலவு பண்ணுங்க. பணத்தை ட்ராக் பண்ணுங்க. பொதுவா நம்ம என்ன சொல்லிடுறோம்னா
ஒரு செலவு எனக்காக யாரோ ஒரு நபர் பண்றாங்கன்னு வச்சுக்கோங்களேன். நான் உனக்கு இவ்வளவு செலவு பண்ணேன் அப்படின்னு ஒரு நோட்ஸ் எடுத்து வச்சாருன்னா சே எவ்வளவு மோசமா இருக்கன்னு சொல்லிட்டு உக்காந்து அளரும். அப்படி செய்யவே கூடாது அவர்ட்ட சண்டை போடக்கூடாது. எல்லா மனிதர்களும் நம்ம பண்ணக்கூடிய செலவை ட்ராக் பண்ணனும். அதுக்கு பட்ஜெட் பண்ணனும் பணத்தை சேமிக்கணும், இன்வெஸ்ட் பண்ணனும். பணம்ன்றது சாதாரண விஷயம் கிடையாது. அதை சேமிச்சு இன்வெஸ்ட் பண்ணி அதை வளர்த்துக்கணும். அதுதான் நம்மோட வாழ்க்கையை சிறப்பாக்க போகுது. உங்களால சொல்ல முடிஞ்ச ரொம்ப ரொம்ப பயனுள்ள வார்த்தை என்ன தெரியுமா? எனக்கு தெரியாது அப்படின்றதுதான். உங்களுக்கு என்னெல்லாம் தெரியாதோ தயவு செஞ்சு தெரியாதுன்னு சொல்லுங்க. அது என்ன அப்படின்ற கேள்வியை கேளுங்க. நம்ம பல நேரங்கள்ல கேள்வி கேட்கவே தயங்குறோம். நான் கேள்வி கேட்டா முட்டாளோ அப்படின்னு அடுத்தவங்க நினைப்பாங்கன்னு நினைக்கிறோம். கேள்வி கேட்டா
கேள்வி கேட்கிற அந்த தருணத்துல நம்ம முட்டாள் மாதிரி தெரியலாம். கேள்வியை கேட்காம விட்டா கேள்வி அடுத்து எப்ப கே்கறோமோ அதுவரைக்கும் நம்ம முட்டாளா இருப்போம். இப்பயே முட்டாளா இருந்துட்டு அதற்கப்புறம் புத்திசாலியா மாறறதுதான் புத்திசாலிதனம். கடைசி வரைக்கும் முட்டாளாவே இருப்பேன் அப்படின்னு நினைக்கிறது புத்திசாலிதனமே கிடையாது. தெரியாத விஷயத்தை தெரியாதுன்னு கேளுங்க. எவ்வளவு சிம்பிளான விஷயமா இருந்தாலும் பரவாயில்ல தெரியாத விஷயத்தை தெரியாதுன்னு கேளுங்க. தெரியாத விஷயத்தை தெரியாதுன்னு சொல்லுங்க. ஒரு நல்ல விருந்தாளியா எப்படி இருக்கறதுன்றத நம்ம எல்லாருமே கத்துக்கிட்ட ஆகணும். ஒருத்தவங்க வீட்டுக்கு போறீங்கன்னா நல்ல விருந்தாளியா இருங்க. நல்ல விருந்தாளியா இருக்கறதுன்னா என்ன? போறப்ப ஏதாவது ஒரு ஸ்வீட்டாவது வாங்கிட்டு போங்க. ஃப்ரூட்ஸ் வாங்கிட்டு போங்க. ஏதாவது கொஞ்சம் கையில எடுத்துட்டு போங்க. வெறும் கைய ஆட்டிட்டு போகாதீங்க. ரெண்டாவது அவங்க வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் கண்ணா பின்னான்னு கன்ஸ்யூம் பண்ணாதீங்க. அவங்களோட எந்த பொருளா
வேணா இருக்கட்டும். ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மியாவே எடுத்துக்கோங்க. காபி கொடுத்தாலும் சரி இல்ல உங்களுக்கு சாப்பாடு போட்டாலும் சரி எவ்வளவு கம்மியா எடுத்துக்க முடியுமோ கம்மியா எடுத்துக்கோங்க அவங்கள்ட்ட ரொம்ப டிமாண்ட் பண்ணாதீங்க இதைவிட ரொம்ப முக்கியம் என்ன தெரியுமா அங்க ரொம்ப நேரம் இருக்காதீங்க பொதுவா நம்ம ஒருத்தவங்க வீட்டுக்கு விருந்தாளியா போனோம்னா அங்க இருந்து நம்ம வெளிய வரப்ப அவங்க எப்படி யோசிக்கணும் தெரியுமா ஐயயோ இவரு போறாரே அப்படின்னு யோசிக்கணும். எப்படா போவாரு அப்படின்னு யோசிச்சிடவே கூடாது. அவரு நம்மள ரெண்டு நாள் இருக்கணும்னு எதிர்பார்த்துிட்டு இருந்தா ஒன்ரை நாள்லயே கிளம்பிருங்க. அவரு நம்மள ஒரு வாரம் இருக்கணும் அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருந்தாருன்னா நாளே நாள்ல கிளம்பிருங்க. எல்லார் வீட்டுக்கும் விருந்தாளியா போறது தப்பு கிடையாது. ஆனா எப்படி விருந்தாளியா இருக்கணும் எவ்வளவு நேரத்துக்கு நம்ம அங்க இருக்கணும் அப்படின்றதுதான் ரொம்ப முக்கியம். போங்க அவர்
நம்மள மிஸ் பண்ணனும். அப்பயே அங்க இருந்து நம்ம வெளிய வந்துறது ரொம்ப ரொம்ப நல்லது. நீடித்த விருந்தாளியா தயவு செஞ்சு எங்கேயுமே இருந்துடவே இருந்துடாதீங்க. கோபத்துல இருக்கறப்ப யாருக்குமே மெசேஜ் அனுப்பாதீங்க.ஈமெயில் அனுப்பாதீங்க. நம்ம கோபத்துல இருக்கறப்ப மெசேஜ் அனுப்பிடுவோம். மெசேஜ்ல மட்டும் நமக்கு என்னெல்லாம் பேச தோணுதோ அதெல்லாம் நம்மளால பேச முடியும். அதே நேரத்துல அவர்ிட்ட நேர்ல போய் பேசி பாருங்க. அவ்வளவு ஹார்ஷா நம்மளால பேச முடியாது. அப்படிப்பட்ட வார்த்தைகளை பேச முடியாது. நம்ம எல்லாருமே கொஞ்சம் இலகிய மனமுடையவங்கதான். ஆனா மெசேஜ் பண்றப்ப இன்னொரு நம்பர நம்ம பார்கறது கிடையாது. ஜஸ்ட் ஏதோ நமக்கு நாமளே பேசிக்கிறோம் அப்படின்னு நினைச்சு மனசுல பட்ட எல்லாத்தையுமே எழுதி அனுச்சிடுறோம். ஒரு ரூலஃபாலோ பண்ணிக்கோங்க. கோபத்துல இருந்தா நான் போன்ல மெசேஜ் அனுப்ப மாட்டேன்.ஈமெயில் எழுதி அனுப்ப மாட்டேன். ஃப்ரீ டைம் கிடைக்குது. ஒரு வீக்கெண்ட் வந்துருச்சு.
இப்ப நீங்க என்ன பண்ண போறீங்க? சினிமா பார்க்க போறேன். ஓடிட்டி விளையாட போறேன். இதெல்லாம் இருக்கட்டும். ஆனா ஒரு நாளாவது நல்லா தூங்க போறேன் அப்படின்ற முடிவு எடுங்க. தூக்கம்ன்றது சோம்பேரிதனம் கிடையாது. தூக்கம்ன்றது ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் நம்மள புத்துணர்வா ஆக்கக்கூடிய ஒரு விஷயம். நீங்க என்ன பண்ணாலும் தூக்கம் தரக்கூடிய புத்துணர்ச்சியா வேற எதுவுமே தராது. ஒரு நாள் வீக்கெண்ட் வருது அப்படின்னா இரவு நல்லா தூங்கி காலையில எந்திரிங்க. ரொம்ப சீக்கிரமா வழக்கத்தை விட சீக்கிரமாவே இரவு தூங்கிடுங்க. காலையில கொஞ்சம் பொறுமையா எந்திரிங்க. வாரத்துக்கு ஒரு நாளாவது இப்படி ஒரு நல்ல தூக்கம் கிடைச்சது அப்படின்றத நீங்க உணரணும். ஒவ்வொரு நாளுமே தூக்கம் எவ்வளவு முக்கியம்னு நான் எல்லா வீடியோலயும் முடிஞ்ச அளவுக்கு சொல்லிக்கிட்டு இருக்கேன். ஆனா இது ரொம்ப ரொம்ப முக்கியம். அதாவது வாரத்துக்கு ஒரு நாளாவது வழக்கத்தை விட
முன்னாடி தூங்கி வழக்கத்தை விட கொஞ்சம் லேட்டா எந்திரிங்க. ஒரு வெள்ளிக்கிழமையே உங்களுக்கு வீக்கெண்ட் வந்துருதுன்னா, வெள்ளிக்கிழமை ஒரு 9:30க்கு தூங்குங்க. சனிக்கிழமை காலையில ஒரு 7:30க்கு மேல எந்திரிங்க. இது ரொம்ப நல்ல விஷயம். ரொம்ப புத்துணர்ச்சியே கொடுக்கும். வீக்கெண்ட் வந்துருச்சு. இன்னைக்கு நைட்தான் நான் பார்ட்டி பண்ண போறேன். மிட்நைட் பிரியாணி சாப்பிட போறேன். நைட் ஷோக்கு போக போறேன். போயிட்டு அங்க கோக் குடிச்சிட்டு நைட் ஃபுல்லா தூங்காம படம் பார்க்க போறேன். நைட் ஃபுல்லா ஒரு நைட் ஸ்டாண்ட் பண்ணி வீடியோ கேம் ஆட போறேன். இதெல்லாம் ஒரு காலத்துல பண்ணிருப்போம். இப்போ தூங்குறது ரொம்ப ரொம்ப முக்கியம். தயவு செஞ்சு ஒரு நாள் இரவு உங்களுக்கு கிடைக்குதுன்னா தூங்கி பாருங்க. அடுத்த நாள் ரொம்பஃிரெஷ்ஷா இருக்கும். புத்தகம் படிக்கிற பழக்கத்தை வளர்த்துக்கோங்க. புத்தகம் படிக்கிறதுன்றது ஒரு மகத்துவமான சந்தோஷத்தை உங்களுக்கு கொடுக்கும். அறிவை வளர்க்கறது
அப்படின்றது ஒரு விஷயம். அதை எடுத்து ஓரமா வச்சிருவோமே ஆனா அது படிக்கும்போது நமக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கும். அதை நிறைய பேர் படிச்சவங்க உங்களுக்கு சொல்லுவாங்க. படிக்கிறவங்க சொல்லுவாங்க. ஆனா நீங்க அதை போரிங்காவே பார்த்துட்டு இருக்கீங்கல்ல. யாரும் அட்வைஸ் பண்ணல நீங்களாவே ஜஸ்ட் ஒரு நல்ல புத்தகத்தை தேர்ந்தெடுத்து படிச்சு பாருங்க ஒரு 20 30 பக்கம் படிக்கணும்னா நான் சொல்லல ஒரு பக்கம் படிங்க ரெண்டு பக்கம் படிங்க இப்படி கொஞ்சம் கொஞ்சமா படிச்சு பாருங்க அதிலிருந்து வரக்கூடிய ஆனந்தத்தை நீங்க உணர்வீங்க அதற்கப்புறம் அப்பப்ப நீங்க புத்தகம் படிப்பீங்க ஒரு வீக்கெண்ட் வருது ஒரு மதிய நேரம் நல்லா ஃப்ரீயா இருக்கீங்க அப்படின்னா அந்த நேரத்துல ஒரு புத்தகம் படிக்கலாம்னு உங்களுக்கு தோணும். அது உண்மையாவே ரொம்ப ரிலாக்ஸிங்கான விஷயமா இருக்கும். புத்தகம் படிக்கிறத எப்படி படிக்கிறதுன்னு கத்துக்கோங்க. அதுல இருந்து சந்தோஷத்தை எப்படி அடையறது
அப்படின்றத கத்துக்கோங்க. உங்க கூட இருக்கக்கூடிய நண்பர்கள்ல ஒரு நண்பனாது எக்சர்சைஸ் விரும்பக்கூடிய நண்பனா இருக்கணும். அதாவது ஒரு எக்சர்சைஸ் பண்ற வெரியன் வொர்க் அவுட் பண்ணக்கூடிய வெரியனா இருக்கணும். என்ன நேரமும் ஜிம்முக்கு போறத பத்தி எக்சர்சைஸ் பண்றத பத்தியே பேசிட்டு இருக்கணும். ஏன்னா அவன்தான் நமக்கு எக்சர்சைஸ் பண்ணக்கூடிய மோட்டிவேஷன கொடுப்பான். நமக்கு வொர்க் அவுட் பண்ணனும்ன்ற ஆர்வத்தை தூண்டுவான். அப்படி ஒரு நண்பன் இல்லன்னா அந்த நண்பனை தேடி புடிங்க. அப்படிப்பட்ட ஒரு நண்பனை கூட வச்சுக்கிட்டே இருங்க. அவன் எப்பவுமே எக்சர்சைஸ் பத்தியும், வொர்க்வுட்ஸ் பத்தியும், ஜிம் பத்தியும், ஹெல்த்த பத்தியும் பேசிக்கிட்டே இருக்கணும். அவன் கொஞ்சம் கடுப்படிச்சாலும் பரவாயில்லை அப்படிப்பட்டவன் இருந்தா உங்களுக்கு உங்களை பத்தி யோசிக்கிறதுக்கு தூண்டுதலா இருக்கும். எப்பவுமே ஒரு நல்ல புத்தகத்தை மைண்ட்ல வச்சுக்கோங்க. எப்ப வேணா யார் வேணா உங்கள்ிட்ட வந்து நீங்க படிச்சதுல நல்ல புத்தகம் என்ன
அப்படின்ற கேள்விய கேட்கலாம். எந்த புத்தகத்தை நீங்க ரெக்கமெண்ட் பண்ணுவீங்க அப்படின்னு கேட்கலாம். உங்க வாழ்க்கையை மாத்துன ஒத்த புத்தகம் என்ன அப்படின்னு கேட்கலாம். அப்படி கேட்டா பதில் சொல்றதுக்கு ரெடியா இருங்க. ஒரு புத்தகம் உங்க மைண்ட்ல இருக்கணும். ஒரே ஒரு புத்தகம் படிச்சிருந்தா கூட பரவாயில்லை அதை தெளிவா படிச்சு புரிஞ்சு வச்சுக்கோங்க. யாராவது ஒரு நபர் கேட்டா இந்த புத்தகம் எனக்கு பிடிக்கும். இதனால எனக்கு பிடிக்கும் அப்படின்னு சொல்லுங்க. நீங்க உடனடியா அவருக்கு இந்த புத்தகத்தை படிங்கன்னு பரிந்துரை செய்யணும்னு நான் சொல்லல. அது செய்றது ஆக்சுவலா கஷ்டம். ஒரு நபருக்கு எந்த புத்தகத்தை பரிந்துரை செய்யலாம் அப்படின்றது ரொம்ப கஷ்டம். நான் ராண்டமா ஒரு புக்க சொல்லி படிங்கன்னு உங்கள்ிட்ட சொன்னா அது உங்களுக்கு சூட் ஆகாம போலாம். நான் பொதுவா ஒரு நபருக்கு எந்த புத்தகம் படிக்கணும் அப்படின்னு சொல்றதுக்கு முன்னாடி அவர்
கூட ரொம்ப நேரம் பேசுவேன். பேசினாதான் அவர் எப்படிப்பட்டவர்ன்னு புரியும். அவருக்கு ஏத்த புத்தகத்தை சொல்லுவேன். சும்மா நான் படிச்சதுலயே பெஸ்ட் புத்தகத்தை சொல்லி படிச்சு பாருன்னு சொன்னா அவர் படிச்சு பாத்துட்டு அவ்வளவு நல்லா இல்லையேன்னு சொல்லிடுவாரு. அது ஒரு மாதிரி இருக்கும். ஆனா நீங்க எப்படி சொல்லணும்னா நான் படிச்சதுல இது ரொம்ப நல்ல புத்தகம் இதனால எனக்கு ரொம்ப புடிச்சது. அதோட நிறுத்திக்கணும். நீங்க கட்டாயம் படிங்கன்னு சொல்ல தேவையில்லை. புத்தகத்தை பரிந்துரைக்கிறது ஒரு ஆர்ட். அதை நீங்க கத்துக்கிட்டதுக்கு அப்புறம் சொல்லலாம். வாழ்க்கையில அன்பா இருக்கறதுக்கான ஒவ்வொரு வாய்ப்பையும் அபகரிச்சுக்கோங்க. அன்பா இருக்கறதுக்கான வாய்ப்பு எப்பவுமே கிடைக்கும். ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கோங்க. ரோட்ல ஏதோ ஒரு நம்பரை பார்கறீங்க. அன்பை காட்ட முடியும்னா காட்டுங்க. உங்க கூட இருக்கக்கூடிய நபருக்கு இப்ப அன்பை காட்ட முடியும்னா காட்டுங்க. சொல்லப்போனா அன்பா இருக்கறதுக்கான வாய்ப்பு ஒவ்வொரு நிமிடமும்
நம்ம கையிட்ட வந்துகிட்டேதான் இருக்கு. ஆனா எல்லாத்தையும் நம்மளால பார்க்க முடியல. அட்லீஸ்ட் பார்த்த இடத்துலயாவது அன்பை காட்டிடுங்க. அன்பா இருக்கற வாய்ப்பை தயவு செஞ்சு தவற விட்டறாதீங்க. வாழ்க்கையோட கடைசியில போய் திரும்பி பார்கறப்போ இதுதான் உங்க வாழ்க்கையை அழகானதா மாத்தி இருக்கும். உங்களால ஒரு விஷயம் முடியலன்னு வைங்களேன் டைரக்டா பாசிட்டிவா முடியல நோ அப்படின்னு சொல்லிடுங்க. நம்ம நிறைய நேரத்துல நோ சொல்றதுக்கு தயங்குவோம். எல்லாத்துக்கும் சரி, சரின்னு தலையாடிட்டு, கடைசியில நோ சொல்லுவோம். அதைவிட மோசமான செயல் கிடையாது. பாசிட்டிவா எப்படி நோ சொல்றதுன்னு கத்துக்கோங்க. நோ சாரி அப்படின்னு நீங்க சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அப்பாலஜைஸ் பண்ண வேண்டிய மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. அதுக்கு பதிலா எனக்கு கொஞ்சம் வேலை அதிகமா ஆயிடுச்சு. என்னால வர முடியல தப்பா எடுத்துக்காதீங்க அப்படின்னு சொல்லுங்க. முடியாத விஷயத்தை முடியாதுன்னு சொல்லி பழகுங்க.
அது தப்பே கிடையாது. நான் எப்ப அடுத்தவங்களுக்கு நோ சொல்றேனோ அங்க நான் அவங்களுக்குதான் ஒரு நல்லது செய்றேன். என்ன நல்லது தெரியுமா? நாளைக்கு அவங்களால முடியாதுன்னா அவங்களும் எனக்கு ரொம்ப சுலபமா நோ சொல்லுவாங்க. நான் என்னோட நண்பன்கிட்ட ஏய் இது என்னால முடியாதுப்பா நோ அப்படின்னு நான் சொல்லிட்டேன்னா நாளைக்கு அவனால முடியாத விஷயத்துக்கு அவன் டைரக்டா நோ சொல்ல தயங்க மாட்டான். ஏன்னா நான் அவனுக்கு சொல்லி பழக்கி இருக்கேன். இது அவனுக்காக செய்யக்கூடிய ஒரு உதவிதான். தயவு செஞ்சு நோனா நோ சொல்லுங்க. எஸ் சொல்லிட்டு அப்புறம் போட்டு சுதப்பாதீங்க. உங்க வாழ்க்கையில உங்களுக்கு மூணு நபர் நல்லா தெரிஞ்சிருக்கணும். ஒரு நல்ல டாக்டர் உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும். ஒரு நல்ல லாயர் உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும். ஒரு நல்ல அக்கவுண்டன்ட் உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும். இப்படிப்பட்ட நபர்கள் உங்களுக்கு தெரியலன்னா தேடி கண்டுபிடிங்க. அப்படிப்பட்ட நபர்களை உங்க லைஃப்ல
வச்சுக்கோங்க. எப்ப உங்களுக்கு இவங்க தேவைப்படுவாங்கன்றது தெரியவே தெரியாது. அதனால கண்டுபிடிச்சு கூட வச்சுக்கோங்க. இவங்க ரொம்ப ரொம்ப முக்கியமான நபர்கள். நம்ம எங்க இருந்து வந்தோம் அப்படின்றத மறந்துடவே கூடாது. நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இங்க வந்துருக்கேன் அப்படின்றத மறந்துடவே கூடாது. நான் இன்னும் பெருசா வளரவே இல்லையேன்னு எனக்கு தோணும் போதுல்லாம் நான் எங்க இருந்து இங்க வந்துருக்கேன் அப்படின்றத யோசிச்சு பார்கறப்போ நான் எவ்வளவு வளர்ந்துருக்கேன்றத எனக்கு நானே ஞாபகப்படுத்தி இருக்கேன். முதல்ல நான் சொன்ன அதே விஷயம்தான். ஒரு போல்டர் கிரியேட் பண்ணி நீங்க செஞ்ச சாதனைய போட்டு வச்சுக்கற மாதிரிதான். அதே மாதிரி நம்ம எங்க ஆரம்பிச்சோம்ன்றத மறந்துரக்கூடாது. எப்படிப்பட்ட ஒரு இடத்துல இருந்து வந்தோம்ன்றத மறந்துரக்கூடாது. நம்மனால முடிஞ்சா அந்த இடத்துக்கு ஏதாவது உதவி செய்யலாமா அப்படின்னு யோசிக்கணும். அட்லீஸ்ட் அதை ஞாபகத்திலயாவது வச்சிருக்கணும். அதெல்லாம் மறந்துட்டு நான் இப்ப யார் தெரியுமா
அப்படின்னு ஆடவே கூடாது. கடைசியா ஒரே ஒரு விஷயம் சொல்ல போறேன். உங்க மனதுல ரொம்ப நாளா ஒரு விஷயம் ஓடிக்கிட்டே இருக்குல்ல. இதை நான் செய்யணும், செய்யணும், செய்யணும்ன்னு. எப்பவுமே ஒரு விஷயத்தை துவங்குறதுக்கான நல்ல நேரம் இதுதான். ரொம்ப லேட் ஆயிடுச்சு. நான் மட்டும் அப்பயே செஞ்சிருந்தா அப்படின்னு யோசிக்காதீங்க. இதை செய்யலாமா வேணாமான்னு யோசிக்காதீங்க. நீங்க செய்ய வேண்டிய அந்த நல்ல விஷயத்தை இப்போ செய்யங்க. நான் காலேஜ் படிக்கிறப்பே இதை செஞ்சிருக்கணும்ல அப்படின்னு நினைக்காதீங்க. நான் அப்பவே இதை செஞ்சிருக்கலாம். இப்ப ஒரு வேலைக்கு போயிட்டேன்ல அப்படின்னு யோசிக்காதீங்க. உங்களுக்கு பிடிச்ச அந்த நல்ல விஷயம். உங்களோட சைல்டுஹுட் ட்ரீமா இருக்கட்டும். உங்களோட கனவு அதை இப்ப செய்யங்க. அது லேட்டும் ஆகல. காலத்தாமதமும் ஆகல. ஒன்னும் ஆகல. இப்பதான் அத செய்யப்பட வேண்டிய வேலை இப்ப செய்யங்க. எப்பவுமே ஒரு நல்ல விஷயத்தை செய்யறதுக்கு
தயங்காதீங்க. யோசிக்காதீங்க. இப்ப செய்ய முடியும் செய்யங்க. இதோட இந்த புத்தகத்தை நம்ம இங்கேயே முடிச்சுக்கலாம். இந்த புத்தகத்துல இன்னும் சில அட்வைஸ்ன்றது இருக்கதான் செய்யுது. அது உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும் அப்படின்னு நீங்க நினைச்சீங்கன்னா அதை பத்தி நான் பேசணும்னு நினைச்சீங்கன்னா கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. இந்த வீடியோவோட ஆரம்பத்துல சொன்ன மாதிரி நீங்க ஒரு என்ஆர்ஐயா இருந்து ஹெல்த் இன்சூரன்ஸ்க்கான தேடல்ல இருந்தீங்கன்னா அதற்கான லிங்க் டிஸ்கிரிப்ஷன் அண்ட் ஃபர்ஸ்ட் கமெண்ட்ல இருக்கு செக் பண்ணி பாருங்க. இந்த வீடியோ பத்தி என்ன நினைக்கிறீங்கன்றதையும் கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணிட்டு உங்க நண்பர்கள் கூட ஷேர் பண்ணுங்க. நம்ம சேனலுக்கு நீங்க புதுசா இருந்தீங்கன்னா சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பெல் பட்டனை பிரஸ் பண்ணிடுங்க.