[இசை] வணக்கம் நேயர்களே காவல்துறையில் பணியாற்றிய ஒரு நபர் காவல்துறைக்கு எதிராகவே வெகுந்து எழுந்து போர்க்குணமிக்க ஒரு மனிதராக மாறுவது என்பது நடைமுறையில் அவ்வளவாக சாத்தியமில்லாத ஒரு விஷயம் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஒரு தொலைபேசி உரையாடலை பொது வெளியில் வெளியிட்டார் என்ற ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் வழக்கை சந்தித்து ஒரு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வழக்கில் இருந்து விடுதலையாக இருக்கக்கூடிய ஒரு நபரைத்தான் நாம் இன்றைய இந்த நேர்காணலில் நாம் சந்திக்க இருக்கிறோம் ஒரு பெரும் இயக்கமாகவே வளர்ந்து இருக்கக்கூடிய ஒரு நபர் சமூக வலைதளங்களில் பலருக்கும் பரிச்சயமான ஒரு நபர் திரு சவுக்கு சங்கர் அவரைத்தான் இந்த நேர்காணலில் நாம் சந்திக்க இருக்கிறோம் வணக்கம் திருசங்கர் வணக்கம் சத்தியம் தொலைக்காட்சியோட இந்த நேர்காணலுக்கு நீங்க நாங்க விரும்பி கேட்டுக்கிட்டதின் அடிப்படையில் சம்மதம் தெரிவிச்சிருக்கீங்க அதுக்கு முதல்ல மனமார்ந்த நன்றி ஒரு மறைமுகமான ஒரு ரகசிய
இயக்கம் போல தான் உங்களுடைய இந்த சவுக்கு தளம் வந்து செயல்பட்டுட்டு இருந்தது சமூக வலைதளங்கள்ல பரவலா இந்த பெயர் வந்து எல்லாருக்கும் தெரிந்த பரிச்சயமான ஒரு பெயர் அதிகார மட்டத்தில் இருக்கிறவங்களுக்கு கொஞ்சம் பயத்தை கொடுக்கிற ஒரு பெயர்னு கூட சொல்லலாம் நீங்க இன்னைக்கு வெளியில வந்து பேச விரும்பியதற்கு என்ன காரணம் உங்களுடைய முகத்தை காட்ட விரும்பியதற்கு என்ன காரணம் முக்கியமான காரணம் இதுவரைக்கும் அந்த நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததுனால அதுவரைக்கும் வழக்கறிஞர்களோட ஆலோசனை என்னன்னா வெளியில போயிட்டு தெரிகிற மாதிரி பண்ணிக்க வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டு இன்னைக்கு அந்த வழக்கு முக்கியமான வழக்கு முடிவடைஞ்சிருச்சு அப்படின்றதுனால இனிமேல் எதுக்கு வந்து மறைஞ்சு இது பண்ணனும் அப்படின்றதுனாலதான் நீங்க பேட்டின்னு சொன்ன உடனே ஒத்துக்கிட்டேன் நான் நிறைய பேருக்கு சங்கர்னா சங்கர்னுடைய கட்டுரைகள் எல்லாம் படிக்கிறாங்க சங்கரை பத்தி நிறைய பேரு பிளாக்ல படிச்சிருப்பாங்க இப்ப டிவில
பாக்குறவங்க நிறைய பேருக்கு தெரியாது இந்த பேரு வேணா பரிச்சயமானதா இருக்கலாம் உங்களை பத்தி ஒரு அறிமுகம் ஒன்னு கொடுங்களேன் பார்ப்போம் அறிமுகம்னா எந்த மாதிரி கேக்குறீங்க சங்கர் யாரு என்ன செஞ்சுட்டு இருந்தாரு ஏன் ஒரு கிட்டத்தட்ட ஒரு ஒரு எட்டு வருஷமா மறைஞ்சிருந்தாரு மறைஞ்சிருந்து அரசுக்கு எதிரான பல விஷயங்களை எதுக்காக அம்பலப்படுத்தினார் இதுக்கான காரணம் என்ன 91 லிருந்து நான் லஞ்ச ஒழிப்புத் துறையில அரசு ஊழியரா இருந்தேன் ஜூலை 2008ல தான் வந்து இந்த முன்னாள் தலைமை செயலாளர் திருப்பாதி மற்றும் உப்பாதியா இவங்க ரெண்டு பேருக்கும் இடையில வந்த அந்த உரையாடல் ஒன்னு வந்து டெக்கான் கணிக்கல் டெய்லியில பப்ளிஷ் ஆச்சு சரி அது வெளியானதை ஒட்டி வந்து அப்ப வந்து அரசாங்கத்துல பெரிய பரபரப்பு ஏற்பட்டுச்சு ஏற்பட்ட உடனே அப்போ திமுக அரசு வந்து ஒரு விசாரணை கமிஷன் ஒன்னு ஓய்வு கட்ட
நீதிபதி தலைமையில அமைச்சாங்க அந்த விசாரணை கமிஷனோட இறுதியில வந்து இந்த தொலைபேசி உரையாடலை நான் தான் வெளியிட்டேன் அப்படின்னு சொல்லிட்டு என் மேல ஒரு கிரிமினல் வழக்கு பதிவு பண்ணனும் அப்படின்னு சொல்லிட்டு அந்த கமிஷன் பரிந்துரை பண்ணாங்க சரி அதன் அடிப்படையில ஜூலை 2008-ல வந்து நானு கைது செய்யப்பட்டேன் கைது செய்யப்பட்ட உடனே இம்மீடியட்டா சஸ்பென்ட் பண்ணிட்டாங்க சஸ்பென்ட் பண்ண பிறகு நான் அந்த டிபார்ட்மெண்ட்ல இருக்கும்போதே இந்த கரப்ஷனுக்கு எதிரா வந்து தொடர்ந்து 91 ல இருந்து வந்து ஆன்டி கரப்ஷன் டிபார்ட்மென்ட்ல ஒர்க் பண்ணிட்டு இருந்ததுனால வந்து இந்த சமுதாயத்துல இந்த ஊழல்ன்றது ஒரு பெரிய ஒரு மோசமான ஒரு விஷயமா இருக்கு இதுக்கு எதிரா செயல்படணும் அப்படின்ற அந்த உணர்வு எனக்கு ஆரம்பத்துல இருந்தே இருந்துச்சு சரி அரசு பணியில இருந்த காலங்களிலும் கூட நான் அரசு ஊழிய சங்கத்துல தீவிரமான ஈடுபட்டுட்டு
இருந்தேன் அப்ப வந்து அந்த இடதுசாரி சிந்தனைகளும் வந்து உண்டு இதன் அடிப்படையில நான் கைது செய்யப்பட்ட உடனே வெளியில வந்து அடுத்து என்ன பண்றது அப்படின்றதே ஒன்னும் தெரியல சோ அப்ப அந்த தகவல் அறிவு உரிமை சட்டம் வந்த உடனே அந்த சட்டத்தின் அடிப்படையில சில ஆவணங்களை எல்லாம் வாங்கி ஊடகத்துல இதை வெளியிடலாம்னு சொல்லிட்டு நான் முயற்சி பண்ணேன் அப்ப திமுக அரசு வந்து பெரும்பாலான ஊடகங்களை வந்து அரசுக்கு எதிரா செய்தியை வெளியிட விடாம வந்து ரொம்ப ஒரு கடுமையான கட்டுப்பாட்டுல வச்சிருந்தாங்க எல்லா காலகட்டத்துலயும் அது இருக்கு திமுக அரசாங்கத்துல ரொம்ப அதிகமா இருந்தத நான் ஃபீல் பண்றேன் சரி இப்ப அதிமுக அரசு எடுத்துக்கிட்டீங்கன்னா இவங்க வந்து டெபமேஷன் போடுறாங்க உங்களால வந்து கண்ட்ரோல் பண்ண முடியல டெபமேஷன் போட்டு நீ கோர்ட்ல போய் அலைஞ்சுகிட்டு இருக்க அப்படின்னாங்க ஆனா திமுக அரசுல
வந்து பிரிண்டுக்கு போறதுக்கு முன்னாடியே நிறுத்துற அளவுக்கு அவங்களுக்கு செல்வாக்கு இருந்துச்சு சரி சோ பெரும்பாலான எடிட்டர்ஸ் இந்த ஆவணங்களை எல்லாம் கொண்டு போய் ஆவணங்களோட கொண்டு போய் இந்த செய்தியை கொடுத்து நீங்க போடுங்கன்னு சொன்னாலும் அவங்க எல்லாம் யாரும் போடுறதுக்கு தயாரா இல்லை பத்திரிகையில கொடுத்தீங்க நீங்க கொடுத்து எல்லா அல்மோஸ்ட் எல்லா பிரிண்ட்டையும் நான் அப்ரோச் பண்ணிட்டேன் சரி ஒருத்தர் அங்க போடுறதுக்கு தயாரா இல்லை அப்படின்றதுனாலதான் அதை வச்சிட்டு என்ன பண்றதுன்னு சொல்லிட்டு யோசிச்சுட்டு இருந்த சமயத்துல இந்த மாதிரி பிளாக் ஆரம்பிச்சா நல்லா இருக்கும் அப்படின்னு சொல்லிட்டு தோணுச்சு அப்போ ரொம்ப செல்வாக்கு மிகுந்த அதிகாரியா இருந்த ஒரு ஜாபர் சைட் வந்து அவரு அப்புறம் நக்கீரனை சேர்ந்தவர் ஒரு காமராஜ் இவங்க எல்லாம் வந்து சமூக சேவகர் என்ற பேர்ல வந்து தங்களோட மனைவிகள் பேர்ல வீட்டுமனை எல்லாம் வந்து ரொம்ப சகாய
விலைக்கு வாங்கி இருந்தாங்க சரி இந்த தகவலை தான் நான் பத்திரிகையில கொடுத்தேன் யாரும் போடல சோ இதை வந்து நான் அந்த சவுக்குன்ற அந்த பிளாக்ல வந்து நான் பப்ளிஷ் பண்ணேன் பப்ளிஷ் பண்ண மறுநாள் காலையிலேயே நான் வந்து ரோட்ல போயிட்டு இருந்த ஒருத்தர் கூட சண்டை போட்டேன் அப்படின்னு சொல்லிட்டு ஸ்டேஷன்ல அரெஸ்ட் பண்ணிட்டாங்க அரெஸ்ட் பண்ணிட்டாங்க அதுல ஒரு ரெண்டு மூணு நாள்ல நான் ஜெயில்ல இருந்து வெளியில வந்துட்டேன் ஆனா அந்த அரெஸ்ட் வந்து இது பொய்யான வழக்கு அப்படின்றது சமூக ஊடகங்களிலும் சரி மற்ற ஊடகங்கள்ல பெரும்பாலான ஆட்களுக்கு வந்து இது வந்து ஒரு பொய்யான வழக்கு இந்த ஆவணங்களை பப்ளிஷ் பண்றதுக்கு மறுநாள் அரெஸ்ட் பண்ணதுனால இதுக்காகத்தான் அரெஸ்ட் பண்ணிருக்காங்க அப்படின்றது தெரிய வந்துச்சு அதுக்கப்புறம் தான் ஓரளவுக்கு வந்து ஒரு இந்த சவுக்கு அப்படின்றது ஓரளவுக்கு பரவலா வந்து மக்கள்
மத்தியில தெரிய ஆரம்பிச்சு சரி அது வெளியில வந்த உடனே எனக்கு அந்த ஒரு ஆவணத்தை வெளியிட்டதுனால என்னை கைது பண்ணாங்க அப்படின்னு சொன்ன உடனே நம்ம இதோட நின்னுடக்கூடாது தொடர்ந்து இந்த வேலைகளை செய்யணும் அப்படின்னு சொல்லிட்டு தொடர்ந்து வந்து நான் இந்த ஊழலுக்கு எதிராகவும் காவல்துறையில நடக்கக்கூடிய அதிகார துஷ்பங்களை இது போன்ற விஷயங்களை வெளியிடுறதுக்கு நான் தொடர்ந்து முயற்சி பண்ணி பல்வேறு விஷயங்களை நான் தொடர்ந்து எழுதிக்கிட்டு இருந்தேன் எழுதிக்கிட்டு இருந்தேன் ஆரம்பத்துல இருந்தே இதெல்லாம் செய்யணும் அப்படின்ற மாதிரி ஒரு இன்டென்ஷன் இல்ல அரெஸ்ட் பண்ணிட்டு சஸ்பென்ட் ஆயிட்டேன் வேற எந்த வேலையும் இல்லை அதனால வந்து இதை ஒரு பொறுப்பான வேலை செய்யலாம் அப்படின்றதுக்காக செஞ்சேன் நானு சாதாரணமா இருக்கக்கூடிய எல்லாருக்குமே ஒரு போலீஸ் அப்படின்னா ஒரு பயம் இருக்கும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க அப்படின்னா உள்ளுக்குள்ள சொந்தக்காரங்க மத்தியில எல்லாருக்குமே ஒரு நடுக்கம் ரொம்ப
இயல்பாவே வந்துரும் அடுத்து என்ன பண்றது அப்படின்னு தெரியாம யாரையாச்சும் புடிச்சு ஏதோ ஒன்னு பண்ண முடியுமா ஒரு ஒரு பதபதப்பு இருந்துகிட்டே இருக்கும் ஆமா நீங்க அந்த டிபார்ட்மென்ட்லயே வேலை செஞ்ச ஒரு நபர் ஆமா உங்களை கைது செஞ்சப்போ நீங்க என்ன பீல் பண்ணீங்க கைது செய்யப்பட்ட உடனே வந்து எனக்கு ரொம்ப அது இந்த சிறை வந்து எல்லாரையும் மாதிரி எனக்கும் ஒரு அச்சத்தை தான் ஏற்பட்டுச்சு நீங்க டிபார்ட்மெண்ட்ல இருந்தாலும் உங்களுக்கு டிபார்ட்மென்ட்ல இருந்தேன் டிபார்ட்மெண்ட்ல இருந்தேன் அரெஸ்ட் பண்ணப்பலாம் வந்து ஒன்னும் பெருசா தெரியல பொழுது சிறையில போய் அடைக்கப்பட்ட உடனே எனக்கு அது வந்து ரொம்ப ஒரு இம்மீடியட்டா உடனே வந்து ஒரு பெரிய பயத்தை ஏற்படுத்துச்சு சரி ஏன்னா நம்ம அந்த சினிமாலையும் டிவிலையும் பார்க்கக்கூடிய மிகப்பெரிய கொலை குற்றவாளிகள் எல்லாம் வந்து என் கூட செல்லுல இருந்தாங்க சரி இதெல்லாம்
பார்த்துட்டு அதுக்கப்புறம் ஒரு ஒன்னு ரெண்டு நாட்களுக்கு பிறகு பார்த்தீங்கன்னா இவங்க எல்லாம் ரொம்ப இயல்பா பழக ஆரம்பிச்சுட்டாங்க அதுக்கப்புறம் இந்த சிறை வந்து இது ஒரு நல்ல அனுபவம் இதை நம்ம பயன்படுத்திக்கணும்னு சொல்லிட்டு அதுக்கப்புறம் அந்த சிறையில நடக்கக்கூடிய விஷயங்கள் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன் இந்த ரவுடிகள் இவங்க கூடயும் பழகி அவங்க ஏன் இதெல்லாம் பண்றாங்க அப்படின்னு சொல்லிட்டு எல்லாரு கூடயும் பழகி இது பண்ணிட்டேன் அரெஸ்ட் ஆயாச்சு ஜெயிலுக்கு ஜெயிலுக்கு போயாச்சு ரெண்டு மாசம் கழிச்சு வெளில வந்தாச்சு இதை இனிமேல் பேஸ் பண்ணி தான் ஆகணும் இப்படி ஆயிடுச்சு அப்படி ஆயிடுச்சு யார் கால்லயாவது விழுந்து நம்ம இதுல இருந்து வெளில வரணும்ன்ற எண்ணம் எனக்கு சுத்தமா வரல இந்த மாதிரி ஆயிப்போச்சு நம்ம வந்து ஒரு மோசமான வந்து ஒரு ஒரு மோசடி பண்ண குற்றத்துக்காகவோ வேற குற்றத்துக்காகவோ அரெஸ்ட் ஆகல
இந்த மாதிரி ஒரு உரையாடலை வெளியிட்டோம் அப்படின்றதுதான் நம்ம மேல குற்றச்சாட்டு நம்ம வந்து இதை எதிர்த்து நம்ம கடைசி வரைக்கும் இதை ஃபைட் பண்ணனும் அப்படின்ற உறுதிதான் எனக்கு வந்துச்சு அண்ட் ஃபேமிலி அண்ட் ரிலேட்டிவ்ஸ் கூட வந்து யாரும் ஒன்னும் பெருசா தவறாலாம் எதுவும் சொல்லல வந்து ஏதோ ஒரு வேலை பண்ணிட்டு போயிருக்கான்னு வருத்தப்பட்டாங்க ஒரு நல்ல அரசு வேலையில இருந்துகிட்டு இதை போய் இப்படி கெடுத்துக்கிட்டே அப்படின்ற மாதிரி ஃபீல் பண்ணாங்களே தவிர அதை தாண்டி ஒன்னும் பெருசா எனக்கு எதுக்கு வருத்தமோ யாரும் வந்து தெரிவிக்கல நீங்க அந்த டிபார்ட்மென்ட்லயே வேலை செஞ்சாலும் அதனுடைய நிஜமான முகம் அப்படிங்கறது எப்படி இருந்தது உங்களுக்கு ரொம்ப கோரமா இருந்துச்சு ரொம்ப கோரமா இருந்துச்சு நான் பழகுன அதிகாரிகள் எல்லாம் லஞ்ச ஒழிப்பு துறைன்றதுனால அது யூனிஃபார்ம் இல்லாத டிபார்ட்மென்ட் அதிகாரிகள் எல்லாம் ரொம்ப நண்பர்களாவே எல்லாம்
நல்லா பழகிட்டு இருந்தாங்க இப்படித்தான் நானும் வந்து கைது செஞ்ச பிறகு நடத்தப்படுவோம் அப்படின்னு சொல்லிட்டு நினைச்சுட்டு இருந்தேன் நானு பட் ஒரு சாதாரண ரவுடிகளை சித்திரவதை பண்றதை விட ரொம்ப மோசமா சித்திரவதை பண்ணாங்க ரொம்ப காவல்துறையோட அந்த இன்னொரு முகம்ன்றது ரொம்ப கோரமா இருக்கு இருந்துச்சு நான் இந்த துறையில இவ்வளவு நாள் 18 வருஷம் வேலை செஞ்சிருக்கோம் அதனால நம்மள ஒரு மரியாதையா நடத்துவாங்க அப்படின்னு தான் நான் எதிர்பார்த்தேன் இன்னொன்னு இது ஒரு ஒயிட் கலர் அபென்ஸ் உங்களுக்கு ரேப் மர்டர் இந்த மாதிரியான அபென்ஸ் கிடையாது ஒரு ஒயிட் கலர் அபென்ஸ் அதுவும் அரெஸ்ட் பண்ணது சைபர் செல் சோ டீசன்ட்டா ட்ரீட் பண்ணுவாங்கன்னு தான் நினைச்சேன் ஆனா ரொம்ப மோசமான சித்திரவதைகளை வந்து அந்த அரெஸ்ட் ஆன அன்னைக்கு அன்னைக்கு இரவு முழுக்க அனுபவிச்சேன் அனுபவிச்சேன் நீங்க நீங்க யோசிச்சீங்களா யாரை காப்பாத்துறதுக்கு
இந்த மாதிரி காவல்துறை செயல்பட்டது அப்படின்னு சொல்லி அப்ப வந்து இந்த சட்ட விரோத தொலைபேசி ஒட்டுகேட் பண்ற புகார் வந்து ரொம்ப பரவலா இருந்துட்டு இருந்துச்சு சரி அதாவது வழக்கமா வந்து எல்லா அரசாங்கங்களும் உளவுத்துறை மூலமா வந்து தொலைபேசிகளை ஒட்டு கேட்கிறது வழக்கம்தான் அதை எப்படி பண்ணுவாங்கன்னா அந்த அரசியல் எதிரிகள் யாராவது அப்புறம் இல்லைன்னா இந்த நக்சல் தீவிரவாத இயக்கங்களை சேர்ந்தவங்க இவங்களோட தொலைபேசிகளை ஒட்டு கேட்பாங்க அப்ப வந்து தகவல் அறிஞ்சிக்கிறதுக்காக பத்திரிகையாளர்கள் வழக்கறிஞர்கள் சில நீதிபதிகள் முக்கியமான அரசியல் பிரமுகர்கள் எல்லாரோட தொலைபேசியும் எப்படி ஒட்டு கேட்க ஆரம்பிச்சாங்கன்னா அவுட்சோர்ஸ் பண்ணி ஒட்டு கேட்க ஆரம்பிச்சாங்க சரி ஒரு தனியார் ஏஜென்சி கிட்ட கொடுத்து அதன் மூலமா ஒட்டு கேட்க ஆரம்பிச்சாங்க சோ இந்த ஒட்டு கேட்பு வந்து எல்லார் மத்தியிலும் ஒரு மிகப்பெரிய கொதிப்பை ஏற்படுது எடுத்திருந்துச்சு அதனால அது தொடர்பா வந்து
இந்த விஷயம் வெளியானதுனால எனக்கு ஓரளவுக்கு நல்ல ஆதரவு தான் இருந்துச்சு எனக்கு ஆதரவுதான் இருந்தது இதையெல்லாம் எதிர்த்து தான் அடுத்து என்ன செய்யறதுன்னு தெரியாம தான் நான் வந்து எழுத தொடங்கினேன் அப்படின்னு நீங்க சொல்றீங்க நீங்க முதன் முதல்ல எழுத தொடங்குனதே ரொம்ப ரொம்ப காரமா இருந்தது அப்படின்னு நம்ம சொல்லலாம் அதுக்கான அந்த பலனாதான் நீங்க அடுத்த நாள் கைதானீங்க அப்படிங்கறது எந்த மாதிரியான மிரட்டல்களை எல்லாம் நீங்க சந்திச்சீங்க அதுக்கப்புறம் வந்து மேலும் இது மாதிரியான வழக்குகளை போடுவாங்க அப்படின்னு சொல்லிட்டு வந்து எனக்கு மிரட்டல்கள் வந்துச்சு ஏன்னா உடனடியாவே வந்து ஒரு ஒரு சஸ்பென்ட் டிசிஷன்ல இருக்கக்கூடிய ஒரு அரசு ஊழியர் வந்து ரோட்ல போனவங்க கிட்ட சண்டை போட்டேன்னு சொல்லிட்டு அரெஸ்ட் பண்ண ஒரு வழக்குல கைது பண்ணக்கூடிய அளவுக்கு வந்து அரசாங்கம் துணிஞ்சிருச்சு அதனால வந்து மேலும் சில வழக்குகள் இது
மாதிரி வரும் வீட்ல வந்து போதை பொருளை வச்சு கூட கைது பண்ணலாம் அப்படின்ட்டு எல்லாம் வந்து மிரட்டல்கள் வந்துச்சு என்ன வந்து அந்த ரோட்ல சண்டை போட்டேன்ற வழக்கே வந்து காவல்துறை உண்மையிலேயே அவங்க சிந்திச்சது வந்து வீட்ல இருந்து ஒரு துப்பாக்கி வச்சு எடுக்கணும் அப்படின்றதுதான் உங்களோட எண்ணம் உங்களுடைய எங்க வீட்ல ஒரு துப்பாக்கி வச்சு எடுக்கணும் அப்படின்றதுதான் எண்ணம் அதுக்கப்புறம் சில ஆவணங்களை எல்லாம் பார்த்தேன் அந்த ஆவணங்களை எல்லாம் வந்து இவர் வந்து தீவிரவாத இயக்கோட தொடர்பு உள்ளவர் சட்ட விரோதமா ஒரு கை துப்பாக்கி வச்சிருக்காரு இவரை 24 மணி நேரம் கண்காணிப்புல வைங்கன்னு சொல்லிட்டு உயரதிகாரிகள் உத்தரவு போட்ட நகலை எல்லாம் நான் பின்னாடி பின்னால பார்த்தேன் நானு அந்த மாதிரி வழக்குகள் வரும் அப்படின்னு சொல்லிட்டு சொன்னாங்க இதை எதிர்த்து மோதுறது தான் இதுக்கு சரியான தீர்வா இருக்க முடியும்
அப்படின்னு தான் நான் ஃபீல் பண்ணேன் ஏன்னா இந்த மாதிரி வழக்குகள் போடுறாங்க இதுக்காக பயந்துகிட்டு நம்ம இருந்தோம்னா இவங்க மேலும் மேலும் ஏறி அடிப்பாங்க ரெண்டு மாசம் ஜெயில்ல இருந்துட்டு வந்தாச்சு ரெண்டாவது வழக்கு கைது ஆயாச்சு இதுக்கு மேல என்ன பண்ணாங்களோ நம்ம அதை பேஸ் பண்ணிக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு நான் முடிவு பண்ணேன் கூட வழக்கறிஞர் நண்பர்கள் வந்து ரொம்ப பெரிய அளவுல எனக்கு சப்போர்ட் பண்ணாங்க சப்போர்ட் பண்ணாங்க எவ்வளவு சப்போர்ட் இருந்தாலும் இவங்களை நாம தொடலாமா இவங்கள பத்தி இந்த அளவு விமர்சிச்சு எழுதலாமா அப்படிங்கிற ஒரு பயம் பெரிய பெரிய நிறுவனங்கள்ட்டயே இன்னைக்கு வரையிலும் இருக்குது அப்படி இருக்கும்போது நீங்க திமுக தலைவர் கருணாநிதி குறித்து எழுதும்போதோ அல்லது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பற்றி எழுதும்போதோ இல்ல ரொம்ப சர்வ அதிகாரம் பொருந்திய நபராக இருக்கக்கூடிய தலைமைச் செயலாளர் இங்க சென்னை மாநகராட்சியினுடைய
காவல்துறை ஆணையாளர் இவங்கள பத்தி எல்லாம் எழுதும்போது எப்படி நீங்க அவ்வளவு ரொம்ப பட்டவர்த்தனமா அவங்கள அவ்வளவு கடுமையா விமர்சிச்சு எழுதுனீங்க அந்த துணிச்சல் எப்படி வந்தது உங்களுக்கு அந்த துணிச்சல் என்னன்னா எனக்கு வந்து ஒரு வகையில இந்த ஊடகங்கள் வந்து இதை வந்து ஒரு சரியான முறையில வந்து இந்த தப்பு பண்றவங்களை வந்து விமர்சிக்கலன்ற கோவம் எனக்கு உண்டு சரி ஒரு உரிய முறையில அவங்க விமர்சிக்கல அப்படின்னு சொல்லிட்டு எனக்கு அந்த கோவம் உண்டு அதனால வந்து இந்த இணையத்துல பார்த்தீங்கன்னா ஒரு சுதந்திரம் இருக்கு எனக்குன்னு எடிட்டர் யாரும் கிடையாது என்னை கட்டுப்படுத்துறதுக்கு அதனால வந்து ஒரு என்னோட கோவத்தை வந்து நான் அந்த கடுமையான எழுத்துக்களின் மூலமா வெளிப்படுத்தினேன் தான் சொல்லணும் நானு எனக்கு வந்து இன்னும் வலுவா பதிவு செய்யணும் எனக்கு இது ஆத்திரம் ஊடகங்கள் எழுத மாட்டேங்குது வேற யாரும்
இவங்களை எதிர்த்து கேள்வி கேட்க மாட்டாங்க கையில அதிகாரம் இருக்குன்றதுனால இப்படி பண்ணிட்டு இருக்காங்க சோ இவங்களுக்கு எதிரான இந்த விஷயங்களை அம்பலப்படுத்தும் போது வலுவா பதிவு செய்யணும்ன்ற நோக்கத்துல தான் அப்படி நான் இந்த மாதிரி எழுதினேன் துணிச்சல் அப்படின்னு சொல்லிட்டு பார்க்க போனீங்கன்னா எனக்கு இந்த மாதிரி இந்த காவல்துறை சித்திரவதை வழக்குகள் இதெல்லாம் சந்திச்சுட்டதுனால இதுக்கு அப்புறம் நம்ம லைஃப்ல வேற என்ன மோசமா பேஸ் பண்ண போறோம் சரி அப்படின்ற அந்த உணர்வு எனக்கு வந்துச்சு தேர்ட் டிகிரி டார்ச்சர் அனுபவிச்சாச்சு ஜெயில்ல போயாச்சு பால்ஸ் கேஸ் பேஸ் பண்ணியாச்சு அடுத்து இனிமேல் என்ன பண்ணுவாங்க சோ எதுவா இருந்தாலும் பேஸ் பண்ணலாம் அப்படின்ற உணர்வு எனக்கு வந்துச்சு உணர்வு வந்துருச்சு ஆனா நீங்க என்ன எழுதினாலும் அதனுடைய தாக்கம் அப்படிங்கறது ஏதாவது ஒரு விஷயத்துல ரொம்ப ரியாக்ட் பண்ணுனது அப்படின்னு நீங்க எழுதின விஷயத்தை
மையப்படுத்தி ஏதாவது ஒரு மாற்றம் நடந்தது ஏதாவது ஒரு அதிகாரியினுடைய சேஞ்ச் நடந்தது இந்த நீங்க தலைமை செயலாளர் பத்தி எழுதி இருக்கீங்க அவங்க மேல ஏதாவது நடவடிக்கை எடுத்தாங்க அப்படிங்கிற மாதிரியான நிகழ்வுகள் ஏதாவது நடந்திருக்கா இருக்கு நான் வந்து ஒரு அந்த ஜாபர் சேட்டு மேல வந்து இந்த அவரு இந்த வீட்டு வசதி வாரியத்தின் மூலமா சமூக சேவைன்ற இதுல கேட்டகிரில வந்து அவங்க வீட்டுமனை எல்லாம் வாங்குனாங்கன்னு சொல்லிட்டு நான் அந்த இது ஃபர்ஸ்ட் எக்ஸ்போஸ் பண்ணேன் 2011ல அதிமுக அரசாங்கம் வந்த உடனே வெறுமனே எக்ஸ்போஸ் பண்றதோட நம்ம இருக்கக்கூடாது அப்படின்னு சொல்லிட்டு அந்த அதிகாரி மேல என் பேர்லயே நான் புகார் கொடுக்கிறேன் அந்த புகாரின் பெயர்ல fஐஆர் பதிவு செய்யப்பட்டுச்சு சரி fஐஆர் பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரையும் தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கு இன்னைக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கு என்னோட புகாரின்
பேர்ல தான் அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டாரு ஒரு ரொம்ப ஒரு சர்வ வல்லமை படைச்சு தமிழ்நாட்டையே ஆட்டி படைச்சிட்டு இருந்தக்கூடிய ஒரு அதிகாரி வந்து என்னால சஸ்பென்ட் செய்யப்பட்டு இன்னும் வந்து மண்டபம் முகாம்ல தான் அவரு அதிகாரியா இருக்காரு வேற நல்ல போஸ்ட் அவரு எதுவும் கொடுக்கல அதெல்லாம் வந்து நான் ஒரு நல்ல பெரிய அச்சீவ்மெண்ட்டா பாக்குறேன் ஒன்னு ரெண்டாவது ஜாபர் சேட்டு அண்ட் கலைஞரோட பிஏ சண்முகநாதன் சரத்குமார் கலைஞர் டிவி எம்டி சரத்குமார் இவங்க எல்லாம் பேசின உரையாடலையும் நான் வந்து டெல்லிக்கு போய் பிரசாந்த் பூஷன் மூலமா நான் வெளியிட்டேன் அதை ஒட்டி சிபிஐக்கும் நான் ஒரு புகார் கொடுத்தேன் இந்த மாதிரி வந்து 2ஜி வழக்குல ஆவணங்களை டேம்பர் பண்றதுக்கான உரையாடல்கள் தான் இந்த உரையாடல்கள் சோ இது தொடர்பா ஆவணங்களை டேம்பர் பண்றாங்கன்னு சொல்லிட்டு நீங்க ஒரு வழக்கு பதிவு செய்யணும்னு
சொன்னேன் இத வந்து பிரசாந்த் பூஷனும் இது தொடர்பா உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செஞ்சிருக்காரு இதுல சிபிஐ விசாரணை இப்ப தொடங்கி நடந்துட்டு இருக்கிறதா நான் கேள்விப்பட்டேன் அவங்கள வாய்ஸ் டெஸ்ட்க்கு எல்லாம் கூப்பிட்டு ஆடியோ வந்து இந்த டெஸ்ட்க்கு எல்லாம் கூப்பிட்டு அவங்க எடுத்துட்டு இருக்கறதா சொன்னாங்க இது போக வந்து ஒரு காவல்துறையிலயோ இல்ல சில உயர் அதிகாரிகள் பத்தியோ இந்த மாதிரி ஊழல்களை எக்ஸ்போஸ் பண்றதுனால அவங்களுக்கு அவங்க கலீக்ஸ் மற்றும் பியர்ஸ் மத்தியில அவங்களோட ரெபுடேஷன் டேமேஜ் ஆகுது ரெப்புடேஷன் டேமேஜ் ஆகுது அதுக்கப்புறம் ஒரு பவர்ஃபுல்லான போஸ்டிங்க்கு அவங்க வர்றதுக்கான வாய்ப்புகள் கொஞ்சம் குறையுது அப்படின்னு சொல்லலாம் சமீபத்துல கூட வந்து இந்த ஒரு ஒன்றரை வருடம் முன்னாடி வந்து ஹிண்டில வந்து விஜிஎன் அப்படின்ற ஒரு நிறுவனம் வந்து ஒரு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான ஒரு லேண்ட
வந்து ரொம்ப குறைந்த விலையில வந்து அதிகாரிகளோட துணையோட வாங்கி இருக்காங்கன்னு சொல்லிட்டு நான் ஒரு ஒன்றரை வருஷம் முன்னாடி எக்ஸ்போஸ் பண்ணிருந்தேன் அதுக்கப்புறம் அதை ஃபாலோ பண்ணப்போ ஒரு இரண்டு மாதங்களுக்கு முன்னாடி சிபிஐ வந்து அந்த சிபிஐ ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் மற்றும் ரீஜியன் டெவலப்பர்ஸ் இவங்க மேல எல்லாம் எஃபர் பதிவு பண்ணிருக்காங்க பண்ணிருக்காங்க சோ சிறு சிறு தாக்கங்களை என்னால உண்டு பண்ண முடியுது அப்படின்னு நம்புறேன் ஓம்